திக் திக் பங்களா... (6)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2020
00:00

சென்றவாரம்: கோடை விடுமுறைக்கு குற்றாலம் கொள்ளு தாத்தா பங்களாவிற்கு வந்தனர், இரட்டையரான மதுவும், வினுவும். தாத்தா அணிந்திருந்த மோதிரம் வித்தியாசமாக இருந்தது; பீதியை ஏற்படுத்தியது. இனி -

கறுப்பு கிரிஸ்டல் சதுரம்; மேலும் கீழும் மஞ்சள் நிற கைப்பிடிகள்; இடது பக்கமும், வலது பக்கமும், நான்கு நான்கு கைப்பிடிகள்; இதுதான் மோதிரத்தின் அமைப்பு.
அதன் மையத்தில், ரத்தச் சிவப்பும், மரப்பட்டை நிறமும் கலந்த கொடூர முகம். முகம் முழுவதும் செதில் செதிலாய் படர்ந்திருந்தது. புருவம் இல்லை; கொள்ளிக் கண்கள்; மூக்குக்கு பதில் பெரிய ஓட்டைகள்; ரத்தம் வழியும் வாய்; இரு பக்கமும் துருத்திய கோரைப்பற்கள்.
தாத்தாவின் கண்கள் வினுவை கவனித்து விட்டன; சிரிப்புடன், 'என்ன... என் கையையே கவனிச்சிக்கிட்டு இருக்க...' என்றார்.
'ஓ... ஓ... ஒண்மில்ல...'
'உண்மையைச் சொல்லு...'
'உங்க மோதிரம் வித்தியாசமா இருக்கேன்னு...'
அவ்வளவு தான் மோதிரத்தை கழற்றியவர், 'நல்லா பக்கத்துல வெச்சுப் பாரு...' என்றார்.
ரொம்ப கனமாய் இருக்கும் என எதிர்பார்த்தவனுக்கு பெருத்த ஏமாற்றம்; மிக லேசாக இருந்தது. கூடுதலாய் திடுக்கிட்டான்.
மோதிரத்தின் மையத்தில், அவன் பார்த்த முகம் இல்லை; வெறும் கறுப்பு முத்து.
'வித்தியாசமா இருக்கு...' என்றபடி திருப்பி கொடுத்தான்.
'இது தலைமுறை தலைமுறையா பவனி வர்ற மோதிரம்; இதுல இருக்குற மாதிரி இன்னொரு கறுப்புக்கல்லை எங்கயுமே பார்க்க முடியாது...'
பெருமையுடன் விரலில் பொருத்திக் கொண்டார். கவனத்தை மாற்றினான் வினு.
'சமையல் எப்படி இருக்கு...'
'பிரமாதம்...'
'நீ என்ன சொல்ற மது...'
கண்ணீர் விட்டபடியே மூக்கை, 'சர்' என்று உறிஞ்சி, அட்டகாசம் என விரல்களை குவித்து அபிநயம் காண்பித்தாள்.
'செண்பா கை பட்டா, பச்சை தண்ணீர் கூட இளநீர் ஆகும்...' என்றார் பாட்டி.
ஜக்கிலிருந்து டம்ளரில் குடிநீர் ஊற்றினாள் செண்பா. குடித்த வினு ஆச்சரியத்தான்; நிஜம் போலவே இளநீராக தித்தித்தது.
பாட்டியின் பாராட்டுக்கு, எந்த முகபாவமும் காட்டவில்லை செண்பா. வந்ததிலிருந்து இன்னும் கண்களையும் சிமிட்டவில்லை.
சாப்பிட்டு முடித்தனர். பாலும், பச்சை நாடன் வாழைப்பழமும் வந்தது.
'பேரக்குழந்தைகளா... பயண களைப்பில் இருப்பீங்க; போய் துாங்குங்கள். நாளைக் காலை நீங்க விரும்புற இடங்களுக்கு போய் வரலாம்...'
'சரி தாத்தா...'
இருவரும் மாடிக்கு நடந்தனர். ஜன்னலில் பொதிகை மலை வானுயர்ந்து நின்றது.
புதிய இடம்; கொளஞ்சியின் எச்சரிக்கை. கொள்ளு தாத்தா கை மோதிரத்தில் பேய்முகம்; துாக்கம் வருமா...
உருண்டு உருண்டு படுத்தாள் மது. எவ்வளவு நேரம் உருண்டாளோ துாங்கிப் போனாள்.
நள்ளிரவில் யாரோ எழுப்பிவிட்ட மாதிரி இருந்தது; முடுக்கி விட்ட மாதிரி நடந்தாள். வெளியே வந்தாள்; வினு அறைக்கு எட்டினாள்; அசந்து துாங்கிக் கொண்டிருந்தான்.
பங்களாவின் பிரதான கதவைத் திறந்தாள்.
சோளக்காட்டு பொம்மை, உயிர்த்து நின்றது; கை, கால்களை ஆட்டி, 'பயப்படாதே பெண்ணே... இரவில் தினமும் உயிர் பெறுவேன். விடியும் வரை பொதிகைக் காடுகளில் உலவி விட்டு, விடியலில் பழைய இடத்தில் பொம்மையாகத் தொங்குவேன்...' என்றது.
'உன் பேரு...'
'மாரி...'
'எனக்கு ஊர சுத்தி பார்க்கணும்...'
'என்கூட வந்து பார் தெரியும்...'
'நீ பேயா...'
'மனுஷன் யார், பேய் யார்ன்னு நீயே கண்டுபிடிச்சிக்க. என்கிட்ட கேக்காத, நட போகலாம்...'
பொம்மை, 'டிங்டிங்...' என்று நடக்க, பின் தொடர்ந்தாள் மது.
தேக்கு மரங்கள், செண்பக மரங்கள், கிராம்புத் தோட்டம்; கருவேல மரங்கள்.
நள்ளிரவில் பொதிகை மலைக் காட்டுக்குள், 'த்ரில்'லாக இருந்தது.
மலையில் ஏற ஏற தாத்தா பங்களா பள்ளத்தில் தெரிந்தது.
மரக்கிளைகளில் அமர்ந்து, அரைத் துாக்கத்திலிருந்த பறவைகள், காலடி அரவம் கேட்டு சிதறிப் பறந்தன. இருட்டு தாளாமல் மீண்டும் பழைய கிளைக்கு வந்தமர்ந்து துாங்க ஆரம்பித்தன.
'மலை உச்சிக்கே வந்துட்டோம் போல...'
சிரித்த மாரி, 'அதோ பார்... நான் காட்ட விரும்பிய இடம்...' என்றது.
சுட்டிய இடத்தில், ஒரு குடில் அமைந்திருந்தது; குடிலை சுற்றி உயிர் வேலி.
'அங்கு யார் இருக்கா மாரி...'
'ஜெய் சீலிம்மான்னு கூப்பிடுவாங்க; ஒரு பெண் மந்திரவாதி இருக்கா... அவ உண்மையான பெயர் அது அல்ல, 'ஜின்'களோட தொடர்பு உள்ளவ...'
'ஜின்னுன்னா...'
'அது ஒருவகை பேய் தான்...'
'இவ இந்த மலைகாட்டுல தனியா உக்காந்து என்ன செய்றா...'
'சாதாரண உலோகங்களை தங்கமாக்கும் ரசவாதம் செய்றா...'
'ஓஹோ...'
'ரசவாத ரகசியங்களை எல்லாம் ஓலைச்சுவடிகள்ல எழுதி வெச்சுருக்கா...'
'என்ன மொழில...'
'பண்டைய ஓலைச்சுவடியில...'
'உனக்கு வாசிக்க தெரியுமா...'
'ஓ...'
'அவளை காண்பியேன்...'
சத்தம் எழுப்பாமல், வேலிக்கதவைத் திறந்தது பொம்மை; தொடர்ந்தாள் மது.
ஜன்னல் வழி சுட்டியது மாரி; மாமிச மலை போல் படுத்திருந்த ஜெய்சீலிமா பெரிய சத்தத்துடன் குறட்டை விட்டாள்.
'அவளது தலைமாட்ல இருக்கு ஓலைச்சுவடி; எடுத்து வா...'
'எடுத்து வந்து...'
'என்கிட்டக் கொடு; அதை படிச்சுக் காட்டுவேன்; தங்கம் செய்ற வித்தையை நீயும் தெரிஞ்சிக்கலாம். அப்புறம் ஊர் திரும்பி பெரிய பணக்காரி ஆகலாம்...'
'நான் பணக்காரி ஆக நீ ஏன் கஷ்டப்படுற...'
'நான் சோளக்காட்டுப் பொம்மை; எனக்கு தங்கம் கிடைச்சு என்ன ஆகப் போகுது... நீ வாழப் போறவ. உனக்கு உதவட்டுமேன்னு தியாக மனப்பான்மை; அவ்வளவு தான்...'
'உள்ள போனா மாட்டிக்க மாட்டேனா...எனக்கு பயமாயிருக்கு...'
'எடுத்து வா... ஓடிடலாம்...'
கை கால்களை உதற, மெதுவாக நடந்தாள் மது. ஒவ்வொரு காலடியும், ஆயிரம் கிலோ மீட்டர் துாரமாய் தெரிந்தது.
சுவடியை எடுக்கப் போகும் கணத்தில் குறட்டையை நிறுத்தி எழுந்து அமர்ந்தாள் ஜெய்சீலிமா.
மதுவின் கைகளை இறுக பிடித்தாள்; விழுந்தடித்து ஓடி மறைந்தது மாரி.
'ஐயோ... என்னை விடு...'
பெண் மந்திரவாதிக்கு கழுதைக் குரல்.
'இங்க யார் வீட்டுக்கு வந்த...'
'இசக்கியப்பன் பங்களாவுக்கு...'
'கிழவன் திருடிட்டு வரச் சொன்னானா...'
'இல்லை...'
'பின்ன...'
'சோளக்காட்டு பொம்மை மாதிரி தான்...'
'பொய் சொல்ற...'
'நிஜம்; தயவுசெஞ்சு விட்ரு...'
'விடுறதா...'
'என்ன... என்னை திங்கப்போறியா...'
'அதெல்லாம் இல்லை; சாபம் கொடுக்கப் போறேன். உனக்கு பிடிக்காத பறவை எது...'
'கோழி...'
'இன்று முதல் நீ பெட்டை கோழி ஆவாயாக...'
வேகமாக ஆட்டிய கை விரல்கள், கோழிக்கால்கள் ஆயின. மதுவுக்கு சிவப்புக் கொண்டையும், சிவப்புத் தாடியும் முளைத்தன. மனித சத்தத்துக்கு பதில், கோழி சத்தம்.
'கொக்... கொக்... கொக்...'
'ஓடிப்போ சிறுமியே... பொதிகை காடுகள் முழுக்கச் சுற்று; யார் கையில சிக்கினாலும் மசாலா ஆகிவிடுவாய்...'
மதுவுக்கு அழுகை வந்தது; வெளியே வந்தாள்; மாரியைக் காணவில்லை; தலைதெறிக்க ஓட ஆரம்பித்தாள்.
விழுந்து புரண்டு, மரங்களில் மோதி எழுந்தாள்; பங்களாவை அடைய இன்னும் துாரம் இருக்கிறது.
'கொக்... கொக்... கொக்...'
அதோ பங்களா தெரிகிறது. தாத்தா, பாட்டியை எழுப்பலாம். நடந்ததை எப்படிச் சொல்வது... கால்களால் கிறுக்கி காட்டலாம். மந்திரவாதியைச் சமாதானப்படுத்தி, சாபத்தை திரும்ப பெற வைக்க வேண்டும்.
சோளக்காட்டு பொம்மையை, காலையில் அடுப்பில் எரித்து, வெந்நீர் போட்டுக் குளிக்க வேண்டும்.
பங்களாவை நெருங்கினாள் மது. குறுக்கே வந்த நரி ஒன்று, 'ஆஹா... நல்ல குண்டு கொழு கொழு கோழி... சூப்பர் சாப்பாடு...' என, கொலை வெறியாய் பாய்ந்தது.
தப்ப வழியின்றி இறக்கைகளை குறுக்கி, ஒடுங்கி நின்றாள் மது.
கோழியின் கழுத்து பக்கம் நெருங்கியது நரியின் வாய்.
- தொடரும்...

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X