இனிப்பு நெல்லிக்காய்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2020
00:00

தஞ்சகோட்டையில் வசித்து வந்தாள் வாணி. சுறு சுறுப்பு மிக்க புத்திசாலியாக விளங்கினாள். அக்கால வழக்கப்படி மணமுடிக்க திட்டமிட்டனர் பெற்றோர்.
படித்து, அரண்மனை பதவிக்கு செல்ல ஆசைபட்டாள் வாணி. ஆனால், 'பெண்கள் படிப்பது சரியல்ல' என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.
பக்கத்து ஊரில் வசித்த மாரியை மாப்பிள்ளையாக்க முயன்றனர். அவன் கெட்ட பழக்கங்களின் இருப்பிடமாக விளங்கினான். 'திருமணமானால், எல்லாம் சரியாகி விடும்' என ஜோசியர் கூறியதை நம்பி, திருமணத்தை முடித்தனர்.
புகுந்த வீட்டில், படாத பாடுபட்டாள் வாணி. விஷயம் தெரிந்து, பஞ்சாயத்தை கூட்டினர் பெற்றோர்.
எவரது அறிவுரையையும் ஏற்காத மாரி, 'என்றைக்கு நெல்லிக்காய் இனிக்கிறதோ; மூட்டை நெல், ஒரு காசுக்கு விற்கிறதோ, அன்று வாணியை அழைத்து வாருங்கள்...' என்று, நடையை கட்டினான்.
ஊர் வம்புக்கு பயந்து, வாணியை காட்டு தோட்டத்தில் விட்டனர்; மரத்தடியில் அழுதபடி அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டு ஓடி வந்தது ஒரு யானை. பயந்து நடுங்கிய வாணி கழுத்தில் பூமாலை சூடி, முதுகில் ஏற்றி நடக்க ஆரம்பித்தது.
சற்று துாரத்தில், ஒரு நகரத்தை அடைந்தது. யானை முதுகில் பெண்ணை பார்த்ததும் ஆரவாரித்தனர் மக்கள். யானையை வரவேற்ற மன்னர், வாணியை அன்புடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
மன்னரின் வாரிசை கண்டுபிடிக்க, அந்நாட்டு வழக்கப்படி, யானையிடம் மாலையை கொடுத்தனர். அது வாணியை கண்டுபிடித்திருந்தது.
வாணியின் கதையை கேட்டு கண்ணீர் விட்ட மகாராணி, 'இனி நீ எங்கள் மகள்; இந்நாட்டின் இளவரசி...' என, அன்போடு அணைத்தார்.
வாணிக்கு சிறப்பான கல்வி அளிக்கப்பட்டது; போர் தந்திரங்களையும், கற்று தேர்ந்தாள். முறைப்படி இளவரசியாக பட்டாபிஷேகம் நடந்தது.
பொறுப்பேற்றதும் முதல் வேலையாக, நாட்டில் ஏரி, குளம், குட்டைகளை துார்வாரி சரி செய்தாள் வாணி; கரைகளை பலபடுத்தினாள். அவற்றை சுற்றி, நெல்லி மரங்களை நட ஏற்பாடு செய்தாள்.
நீர் வளம் பெருகியதால் விவசாயம் செழித்தது; விளைச்சல் பெருகியதால் மூட்டை நெல், ஒரு காசு என்ற விலைக்கு விற்றது. உணவு பற்றாக்குறை நீங்கியது. மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் மக்கள்.
நீர் நிலைகள் அருகே, நெல்லி மரங்களை நட்டாள். காரணம் கேட்ட மன்னரிடம், 'நெல்லி மரங்கள் நீர் நிலைகளை பாதுகாப்பதோடு, நீரின் சுவையையும் அதிகரிக்கும்...' என்றாள் வாணி.
நெல்லிகாய்களை சாப்பிட்டவர், கண்ணீர் விட்டால், உடனே அரண்மனைக்கு அழைத்து வர, வீரர்களுக்கு உத்தரவிட்டாள்.
அன்று காலை -
வழிப்போக்கன் ஒருவனை இழுத்து வந்தனர் வீரர்கள். அவனை கூர்ந்து நோக்கியபடி, 'குளத்தின் நீரை குடித்து விட்டு ஏன் அழுதாய்...' என கேட்டாள் வாணி.
அவள் பாதங்களில் விழுந்தவன், 'அருமையான மனைவியை கொடுமை படுத்தி விதண்டாவாதம் செய்தேன்... சந்தை வழியாக வந்தபோது, மூட்டை நெல், ஒரு காசு என விற்றுக் கொண்டிருந்தனர்; நெல்லிக்காயை தின்று, தண்ணீர் குடித்த போது, தேனாக இனித்தது; இந்த சம்பவங்களால் மனைவியின் நினைவு வர, கண்ணீர் விட்டேன்...' என்று கூறினான்.
அவனை உற்று நோக்கியபடி, 'இவனுக்கு இரண்டு மாடுகளும், கொஞ்சம் விளை நிலமும் கொடுங்கள்... இனி, நகரத்துக்குள் இவன் வரக்கூடாது...' என்று உத்தரவிட்டாள்.
வீரர்கள் அவனை இழுத்து சென்றனர்.
மதிய உணவின் போது, 'உன்னை மணந்ததற்காக, அவனுக்கு நிலம் பரிசளித்தாயா...' என்றாள் மகாராணி.
அவரை அன்புடன் தழுவி, 'அம்மா... நீங்கள் மிகவும் சரியாக ஊகித்து விட்டீர். திருமணம் நடந்ததால் தான், வீட்டை விட்டு துரத்தப்பட்டேன்; உங்களுக்கு மகளாகி, நாட்டின் இளவரசியாகும் பாக்கியமும் கிடைத்தது. அந்த நன்றி கடனுக்காகத்தான் உதவி செய்தேன்...' என்றாள் வாணி.
அதைக் கேட்டு நெகிழ்ந்தார் மகாராணி.
'பெண்கள் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும்; மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர்' என்று ஓர் ஆணையை பிறப்பித்தாள் வாணி. மக்கள் மகிழ்ந்தனர். அந்த நாட்டில் எல்லா பெண்களும் ஆர்வமுடன் கற்கத் துவங்கினர்.
செல்லங்களே... கல்வி கற்றல் எல்லாருக்கும் பொதுவானது; அனைவரும் கற்றால் தான், நாடும், வீடும் நலமாய் முன்னேறும்.

உமா ஸ்ரீதரன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X