இளஸ்.. மனஸ்...! (42)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2020
00:00

அன்பு பிளாரன்சுக்கு...
பிரபல தொழிலதிபரின் மனைவி நான்; வயது, 38; எம்.எஸ்சி., எம்.பில்., பி.எட்., பட்டங்கள் பெற்றவள். எங்களுக்கு, 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் இருக்கின்றனர். திருமணத்திற்கு முன், பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தேன்.
திருமணம் முடிந்ததும், வேலையை விட்டு நிறுத்தி விட்டார் கணவர். எனக்கு, மேலும் படிக்க ஆர்வம். ஏராளமான மாணவ, மாணவியர் கொண்ட ஒரு பள்ளியின் முதல்வராகவோ, ஒரு கல்லுாரியில் துறைத் தலைவராகவோ பணியாற்ற ஆசை இருந்தது.
திருமணத்திற்குப் பின், கணவருக்கும், குழந்தைகளுக்கும், 24 மணி நேரம் சேவகம் செய்யும் அடிமையாகி விட்டேன். குழந்தைகள், யானையை கேட்டாலும், பூனையை கேட்டாலும் உருவாக்கித் தர வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளேன்.
குழந்தைகள் பிறந்தவுடன், அரசே தத்து எடுத்துக் கொள்ள கூடாதா அல்லது குழந்தைகளை, 10 வயது வரை தான், பெற்றோர் பராமரிக்க வேண்டும்; அப்புறம் குழந்தைகளே, 'சொந்தமாய் குட்டிக்கரணம் போட்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும்' என அரசு சட்டம் கொண்டு வரக்கூடாதா...
குழந்தைகளையும், கணவரையும் துறந்து, சன்னியாசம் பூண்டு, இமயமலை பக்கம் போய் விடலாமா என யோசிக்கிறேன். எனக்கு ஒரு பொருத்தமான வழி சொல் பிளாரன்ஸ்.
வித்தியாசமாக யோசிக்கும் சகோதரிக்கு...
நீ நினைப்பது போல, உன் பெற்றோர் நினைத்திருந்தால், இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்க முடியுமா... யோசித்து பார். உன்னை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஒரு தொழிலதிபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இப்போதும், பள்ளிக்கோ, கல்லுாரிக்கோ வேலைக்கு செல்லலாமே... நீ உறுதியாக இருந்தால், உன் கணவரால் எப்படி தடுக்க முடியும்...
குழந்தை வளர்ப்பு என்பது, இனித்து, புளித்து, கசக்கும் வித்தியாசமான பழம். நல்ல ஆசானாக, வழிகாட்டியாக, ஏணியாக, தோணியாக இருக்கும் வாய்ப்புள்ளது.
உன்னை யார் அடிமையாக இருக்கச் சொன்னது... அப்படி ஓலமிடுவதால் என்ன லாபம்...
திருமணத்தின் மூலம் இணைவதும், குழந்தை பெற்று வளர்ப்பதும், வளரும் குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பதும், அது குழந்தை பெற்று வளர்ப்பதும், வாழையடி வாழையாக தொடரும் மரபு!
உன் பெற்றோர், உனக்கு செய்தனர்; நீ, உன் குழந்தைகளுக்கு செய்கிறாய்; உன் குழந்தைகள், அவர்களின் குழந்தைகளுக்கு செய்வர். தலைமுறைகளின் ஆரோக்கியமே தொடர்ச்சியானது தானே...
நீ பெற்ற குழந்தையை, அரசு எதற்கு தத்து எடுக்க வேண்டும். விஞ்ஞானத்தின் உச்சம் தொட்டுள்ள சமூக அமைப்பை, மீண்டும் ஆதிவாசி காலத்துக்கு செல்ல வழி கூறுகிறாய்; 10 வயதில் தனித்து விடப்படும் குழந்தை, தனி மனித ஒழுக்கம் அறவே இல்லாது வளரும் என்பதை மனதில் கொள்.

அடுத்தடுத்து நீ செய்ய வேண்டியது...
* எதையும், சுயநலத்துடன் யோசிக்காதே... மனித வாழ்க்கை என்பது, 'ரிலே ரேஸ்' ஓடுவது போல. ஆணோ, பெண்ணோ... சுயத்தை இழக்காமல், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமையை செய்வது தான் கடமை. உலகில், 700 கோடி மனிதர்களும், ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டுள்ளனர்; ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை
* குழந்தை வளர்ப்பை, ஒரு தோட்டக்காரர் மன நிலையில் செய்; தோட்டத்தை பராமரிப்பது தோட்டக்காரர் பணி. பூக்கள் பூத்து குலுங்குவது, செடியின் அடையாளம்; குழந்தைகளுக்கு அடிமையாக இருக்க வேண்டாம். குழந்தைகள் உனக்கு அடிமையாக இருக்க வேண்டாம்; அவரவர் இடத்தில், சுதந்திரமாக, தனித்தன்மையாக இயங்குங்கள்
* சுயபச்சாதாபம் கொள்ளாதே; உலகின், கோடிக்கணக்கான தாய்மார்களில், நீயும் ஒருத்தி. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி, சிறப்பு குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களின் தியாகங்களை எண்ணிப் பார்; அவர்கள் முன், நீ சிறு துாசு
* உனக்கு மேகம் கிடைத்தால், உன் மகன், மகளுக்கு வானம் கிடைக்க வேண்டும்; பேரன், பேத்திகளுக்கு, நட்சத்திரம் கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்; தலைமுறை உச்சத்தை தொட்டு தொடர வேண்டும்
* இமயமலைக்கு போனாலும், ஏற்றத்தாழ்வு இருக்கும்; அங்கும் ஏமாற்றமே மிஞ்சும். அதிருப்தி, சுயநலம் போன்றவை குடும்ப முன்னேற்றத்தை பாழாக்கி விடும்; விட்டுக் கொடுத்து வாழ்
* கணவருடனும், மகன், மகளுடனும் மனம் விட்டு பேசு; அவர்களின் எதிர்பார்ப்பை தெரிந்து கொள்; உன் எதிர்பார்ப்பையும் தெரிவி
* உன் அம்மாவிடம் பேசி, தாய்மை பற்றி தெளிவு பெறு. கணவர், குழந்தைகளுடன் சுற்றுலா செல்
* தோழியர் குடும்பங்களை பார்; அவர்கள் செய்யும் சேவைகளை அறி. ஆதரவற்றோர் இல்லங்களில் குழந்தைகளுடன் அளவளாவு. குழந்தை பெற இல்லாத பெண்களின் அவலத்தை நிதர்சனமாக உணர்ந்தால் தெளிவு பெறுவாய். மனதில் தாய்மை மலரட்டும்.
- பிரார்த்தனைகளுடன், பிளாரன்ஸ்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X