செலவில்லாமல் கட்டிய சிவன் கோவில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2020
00:00

செலவே இல்லாமல், பிரமாண்டமான கோவிலை கட்ட முடியுமா... மனமிருந்தால் மார்க்கமுண்டு.
திருவள்ளூர் அருகிலுள்ள, திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில், இப்படித்தான் கட்டப்பட்டது. இதுபற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்வோம்.
திருநின்றவூரில் வசித்தவர், பூசலார் எனும் சிவ பக்தர். சிவனுக்கு கோவில் கட்ட வேண்டுமென்பது, இவரது ஆசை. குறைந்த வருமானம், அதற்கு இடம் கொடுக்க வில்லை.
மனதுக்குள், தன்னை ஒரு பணக்காரராக கற்பனை செய்து கொண்டார்.
கற்கள் வேண்டுமா, வண்டி வண்டியாக குவிந்தது. தலை சிறந்த சிற்பிகள் வேண்டுமா, பல இடங்களில் இருந்தும் வரவழைத்தார். மனதுக்குள்ளேயே கோடிகளை குவித்தார். இப்படி, பிரமாண்டமான கோவில் தயாரானது. கும்பாபிஷேகத்திற்கும், நாள் குறித்து விட்டது, மனம்.
இந்த சமயத்தில், காஞ்சிபுரத்தை ஆண்ட மன்னன் காடவர்கோன், சிவனுக்கு, கோவில் கட்டி, கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தான். அன்றிரவில், காடவர்கோன் கனவில் எழுந்தருளினார், சிவன்.
'ஏனப்பா... ஒரே நாளில், இரண்டு பேர் கும்பாபிஷேகம் நடத்தினால், நான் எங்கே போவேன்... அதிலும், திருநின்றவூரில் என் பக்தன் பூசலார், உன்னிலும் பிரமாண்டமான கோவில் கட்டி, உனக்கு முன்னதாகவே நாள் குறித்து விட்டான். நீயும் அதே நாளில் அழைத்தால் என்ன செய்வேன்...' என்று கேட்டு, மறைந்தார்.
காடவர்கோன், திடுக்கிட்டு விழித்தான். திருநின்றவூர் சென்று, பூசலாரிடம் அவர் கட்டிய கோவில் பற்றி கேட்டான்.
'மன்னா... நான் நிஜத்தில் கோவில் கட்டவில்லை. என் மனதில் கோவில் கட்டி, கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தேன். அந்த கோவிலுக்குள், சிவன் எழுந்தருளப் போகிறாரா?' என்று மெய்சிலிர்த்தார்.
பூசலாரின் ஆசையை நிறைவேற்றும் விதத்தில், திருநின்றவூரிலும் ஒரு கோவில் கட்டினான், மன்னன். திரு இருதயாலீஸ்வரர் என்பது, அங்குள்ள சிவனின் பெயர். கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரத்தில் அவன் கட்டிய கோவில், கைலாயத்துக்கு நிகரானது என்பதால், கைலாசநாதர் கோவில் என்று, பெயர் சூட்டினான்.
இங்குள்ள கருவறையைச் சுற்றி, சொர்க்கவாசல் எனும் பிரகாரம் உள்ளது. இந்த வாசலுக்குள் நுழையும் இடமும், வெளிவரும் இடமும், குறுகலாக இருக்கும். இதற்குள் நுழைந்து வெளியே வந்தால், மறுபிறப்பு இல்லை என்பது விசேஷ தகவல்.
'சேண்ட் ஸ்டோன்' எனப்படும், மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோவில், கலைநயம் மிக்கது என்பதால், தொல்பொருள் துறை பராமரித்து வருகிறது.
திருவள்ளூரிலிருந்து, 18 கி.மீ., துாரத்தில், திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில், கைலாசநாதர் கோவிலும் உள்ளன.

தி. செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
18-மே-202018:00:26 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI பொறுப்பாசிரியர் அவர்களுக்கு மே மாதம் 17 ம் தேதி வாரமலர் இதழில் மனதில் கோவில் கொண்ட மாணிக்கமாக பூசலார் மனதில் கட்டிய கோவிலுக்கு சிவபெருமான் எழுந்தியருளியது பக்தியின் முழுமையான ஈடுபாட்டின் பலனென்றே கூறலாம். இறைவனை இருதயத்திலேயே வைத்திருந்ததால் அவருக்கு இருதயாலீஸ்வரர் பிறகு கைலாசநாதர் என்றும் பெயர் பெற்றதாக குறிப்பிட்டிருந்தது தெரியாத விஷயத்தை தெரிந்துகொள்ள முடிந்தது . நன்றி இரா பிரேமலதா யோகேஸ்வரி
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
18-மே-202001:42:24 IST Report Abuse
Manian இதென்ன பிரமாதம்.சிவன் கங்கையை தலையில் வைத்து கங்கை நீரை இலவசமா கொடுத்தான். ஓசி என்பதால் மக்கள் நாசபப் படுத்திவிட்டார்கள். அதே சமயம் நான் நிலத்தடி நீரை இலவசமாக உறிஞ்சி, என் அறிவுச் செல்வம் மருமகள் மூலம் விற்றேன், இப்போ குபேரன் என் அடிமை.பூசலர் இதை செய்ய மறந்தார். குபேரன் அவர் கனவில் கூட போகவில்லை காடவர்கோன் சிவன் தந்த இலவச கங்கை போல் கோவில் கட்டுமுன் ஒரு செல்லடடிச்சிருந்தால், இந்த செலவை தடுத்திருப்பேனேதுரைமுருகன், நிலத்தடி நீர்திருடி நாயனார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X