இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2020
00:00

முதியவர்கள் அல்ல முக்கியஸ்தர்கள்!




சமீபத்தில், என் தோழனின் ஊருக்கு சென்றிருந்தேன். அங்கு, நியாய சபை என்ற அமைப்பு உள்ளது. இது, அரசியல் சார்ந்த அமைப்பு அல்ல. இச்சபையில், 40க்கும் மேற்பட்ட முதியோர்களே உறுப்பினர்களாக உள்ளனர். எட்டு பேர் வீதம், ஐந்து குழுக்களாக உள்ளனர்.
இக்குழுவில் சிலர், காலி மனைகளை வைத்துள்ளனர். அவ்விடத்தில், முருங்கை, கத்திரி, வெண்டை, தக்காளி, அவரை, மிளகாய், பாகற்காய், தென்னை போன்ற காய் வகைகளையும்; சப்போட்டா, மா, வாழை, மாதுளம், கொய்யா, சீதா போன்ற பழ வகை மரங்களையும்; புளிச்ச கீரை, தண்டு கீரை, பொன்னாங்கண்ணி போன்ற கீரை வகைகளுடன் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும், ஒரு குழு, பணிகளை சுழற்சி முறையில் செய்கிறது. மேலும், தங்கள் ஊரில் கிடைக்கும் காய்கறி கழிவுகளை மண்புழு சேர்த்து மக்கச் செய்து, உரம் தயாரித்து, தோட்டத்திற்கு இடுகின்றனர். இதனால், விளைச்சல் அமோகமாக உள்ளது. கிடைக்கும் லாபத்தை, தங்களுக்குள் சமமாக பங்கிட்டு கொள்கின்றனர்.
இதுதவிர, இச்சபை உறுப்பினர்கள் வீட்டில், ஏதேனும் சுப நிகழ்ச்சி என்றால், நியாய சபை கூடும். உறுப்பினர்கள் அனைவரும், தங்களால் இயன்ற பணத்தை வழங்குவர். இதன் மூலம் கணிசமாக ஒரு தொகை சேரும். இதற்கு எந்த வட்டியும் கிடையாது. பணம் பெறும் உறுப்பினர், ஒரு குறிப்பிட்ட கால கெடுவிற்குள், சிறு சிறு தவணையாக பணத்தை திரும்ப செலுத்த வேண்டும்.
'வயது முதிர்ந்த காலத்தில் எப்படி வேலை செய்ய முடிகிறது...' என, அவர்களிடம் வினவினால், 'நாங்கள் எங்கே வேலை செய்கிறோம், எங்கள் உடல் நலத்திற்காக உடற்பயிற்சி தானே செய்கிறோம். மேலும், ஒன்று கூடி செய்வதால், வேலை பளு தெரியவில்லை; தனிமையும் தெரியவில்லை...' என்கின்றனர்.
நாட்டின் நலத்திற்கும், வீட்டின் நலத்திற்கும் பெரும் துணையாக உள்ள முதியோரை வணங்கி, பாராட்டி வந்தேன்.
- கே. குமார், கடலுார்.

மூலிகை தோட்டம் அமைக்கலாமே!




வயதான பெண்மணி ஒருவர், பக்கத்து கிராமத்திலிருந்து வந்து, எங்கள் வீட்டில் பணி செய்து வருகிறார். அவர் வரும்போதெல்லாம், எங்கிருந்தாவது துளசி, கற்பூரவள்ளி செடி மற்றும் வெற்றிலை கொடி வகைகளை எடுத்து வருவார். அவற்றை, எங்கள் வீட்டின் வேலி ஓரத்தில், 6க்கு 6 அடி அளவுள்ள இடத்தில், நட்டு வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றுவார்.
கை கழுவும் தண்ணீரை கூட வீணாக்காமல், நட்டு வைத்துள்ள செடிகளுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்.
நாளடைவில், இந்த மினி தோட்டத்தில், வெற்றிலை, கற்பூரவள்ளி, துளசி, கருந்துளசி, நித்ய கல்யாணி, வல்லாரை, துாதுவளை, பசலை கீரை, சித்தரத்தை, திருநீர்பத்திரி, ஆடாதொடை, மனத்தக்காளி போன்ற செடிகள் வளர்ந்துள்ளன. கொடி வகைகள், வேலியில் படருகின்றன.
ஊரடங்கு காலத்தில், அவர் வராததால், நான் தான் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றுவேன். இவைகளின் வளர்ச்சியை பார்த்து பிரமித்தேன். இப்போது, எங்கள் வீட்டில், இவை இல்லாத சமையலே இல்லை. தினமும் நாலு இலையை பறித்து போட்டு மருத்துவ சமையல் தான். இப்போது, வேப்பம் பூ பூத்திருப்பதால், அதையும் சிறிது சேர்த்துக் கொள்கிறோம்.
அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் சளி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக, இங்கு வந்து மருத்துவ இலைகளை பறித்துச் செல்கின்றனர். முக்கியமான இக்காலகட்டத்தில், அதிக செலவில்லாமல், இதுபோன்ற மருத்துவ செடிகளின் பயன்பாட்டை நினைத்து, அப்பணிப் பெண்ணுக்கு, மானசீகமாக நன்றி சொல்லி வருகிறேன்.
உங்கள் வீட்டிலும், இதுபோல சிறியதாக இடம் இருந்தால், செடி, கொடிகளை நட்டு வைத்து, தேவையான காலத்தில் அனைவரும் பயன்பெறலாம்.
- கி. ரவிக்குமார், நெய்வேலி.

சபாஷ் ஐடியா!




ஒருநாள், தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். வீடு கட்டி, பல ஆண்டுகள் ஆகியும், பளீச்சென்று புதிது போல் இருந்தது.
'பெயின்டிங், சுண்ணாம்பு என, ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகியது...' என்றாள்.
அவள் கணவர், சாதாரண வேலை தான் பார்க்கிறார்.
'ஒரு லட்சம் வரை செலவு செய்ய, எப்படி சமாளித்தாய்...' என்றேன்.
'இது, எங்க சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக எண்ணி, மாதம், 2,000 ரூபாய் வீதம் ஆர்.டி.,யில் போட்டு விடுவோம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, வீட்டு பராமரிப்பு வேலைகளுக்கு எடுத்து, செலவு செய்து கொள்வோம்...' என்றாள்.
தோழியின் யோசனை, மிக நல்ல யோசனை தான் என்று மனதுக்கு பட, நானும், அவள் வழியை பின்பற்ற முடிவு செய்தேன்.
என்ன... நீங்களும் தானே?
என். குர்ஷித், நெல்லை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
18-மே-202018:10:04 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு மே மாதம் 17 ம் தேதி வாரமலர் இதழில் இது உங்கள் இடம் பகுதி முதியோர் செய்யும் வேலைகளையும் அதை அவர்கள் உடற்பயிற்சியாக மேற்கொள்வதையும் படித்தேன். நல்லதொரு விஷயத்தை பகிர்ந்ததற்கு நன்றி குமார் அவர்களே நல்ல முதியவர்கள் ஆனால் முக்கியஸ்தர்கள் என சொல்லவைத்தது. மூலிகை தோட்டம் அமைக்கும் எண்ணம் தோன்ற காரணமாய் இருந்த ரவிக்குமார் அவர்களுக்கு நன்றி . சபாஷ் ஐடியாவுக்கு ஒரு சபாஷ். சேமித்தல் ஒரு நல்ல செலவுக்கு பயன் தரும். நன்றி இரா பிரேமலதா யோகேஸ்வரி கோவை
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-மே-202014:33:38 IST Report Abuse
D.Ambujavalli எங்கள் வீட்டில் மாடியில் கற்பூரவல்லி, துளசி, புதினா, திருநீற்றுப்பச்சிலை சும்மா சில கட்டைகளை ஊன்றி வைத்தேன். நினைத்தால் கற்பூரவல்லி பச்சடி, பிரண்டைத் துவையல் என்று சமைப்பது வழக்கமான சாம்பார், குழம்பிலிருந்தும் மாற்றாகவும், ருசியுடன், மருத்துவ மூலிகைகள் சேரவும் உதவுகின்றன
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-மே-202008:28:52 IST Report Abuse
Girija @கே. குமார், கடலுார் இந்த முதியவர்கள் பெயர் விலாசம் வெளியிட்டால் பல ஊர்களில் உள்ள முதியவர்கள் தொடர்பு கொண்டு பயன் பெறுவர். @கி. ரவிக்குமார், நெய்வேலி இது எல்லோர் வீடுகளிலும் மிக சாதாரணமாக செய்வது, மண்ணை பார்த்தாலே எதாவது செடி வைக்கலாமா என்று பெண்களுக்கு தோன்றும். @என். குர்ஷித், நெல்லை, சொந்தமாக வீடு கட்டியவர்களுக்கு அதை எப்படி பராமரிக்க திட்டம் இடம் வேண்டும் என்று தெரியாதா? இந்த பகுதியில் எல்லா செய்திகளும் அவன் சொன்னான் , இவள் சொன்னாள் என்றுதான் எப்போதும் வருகிறது என்றால் நம்பகத்தன்மை என்ன? பகுதியின் தலைப்பை "இது அவர்கள் இடம்" என்று மாற்றிவிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X