அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2020
00:00

அன்பு சகோதரிக்கு —
என் வயது, 60. கணவர் இறந்து விட்டார். எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.
மகளுக்கு, 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மகள், மருமகன் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். திருமணத்திற்கு முன் மகள், கல்லுாரியில் விரிவுரையாளர் வேலை பார்த்து வந்தாள். திருமணம் முடிந்து வெளிநாடு சென்று விட்டதால், வேலையை விட்டு விட்டாள். ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள், இந்தியா வந்து போவர்.
இப்போது, தந்தையின் அறிவுரையால் வெளிநாட்டிலிருந்து, சென்னை வந்து வேலை பார்க்கிறார், மருமகன். குடும்பமும் இங்கு வந்து விட்டது. மருமகன், மிக நல்லவர். எவ்வித கெட்ட பழக்கமும் கிடையாது. மரியாதை தெரிந்தவர். இந்தியா வந்த பின், சிறிது சிறிதாக அவரிடம் மாற்றம் தெரிந்தது.
தாய், தந்தையரை போற்றி வழிபடுபவர். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்பது, அவருக்கு தான் பொருந்தும். அது தவறில்லை. ஆனால், மகன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, மகனையும், மருமகளையும் பிரித்து வைத்து வேடிக்கை பார்ப்பது எந்த தாய், தந்தைக்கும் அழகில்லை. இதற்கு, மகனுக்கு திருமணம் செய்யாமல், தனக்கு ஊழியம் செய்ய வைத்துக் கொண்டிருக்கலாம்.
சிறிது சிறிதாக, மகனின் மனதில், என் மகளை பற்றியும், குடும்பத்தை பற்றியும் கேவலமாக சொல்லி, எங்களை பிடிக்காமல் செய்து விட்டார். மகளை சமையல்காரியாகவும், வேலைக்காரியாகவும் நடத்துகிறார் என்று அறிந்தபோது, பெற்ற வயிறு, பற்றி எரிகிறது.
மகள், மிகவும் பொறுமைசாலி. அவளின் மாமியாரும் ஒரு பெண்தானே. அந்த அம்மாவிடமும் இதை பற்றி சொல்லியும், எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
மகளின் மாமனார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர். படித்தவர்கள் இப்படி நடந்து கொள்வது வேதனையாக இருக்கிறது. என் மகளுக்கு நீங்கள் தான் நல்ல வழி காட்ட வேண்டும்.
இப்படிக்கு,
 சகோதரி.


அன்பு சகோதரிக்கு —
குடிப்பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ இல்லாத ஆண்கள், நல்ல கணவர்களாக இருப்பர் என, உத்தரவாதம் கொடுக்க முடியாது. தீயபழக்க வழக்கங்கள் இல்லாத பல, 'சாடிஸ்ட்'களை, என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன்.
நல்ல கணவன், தன் மனைவியின் இருப்பை அங்கீகரிப்பான்; அவளின் நல்ல மற்றும் தீயகுணங்களை அனுசரித்து போவான்; குடும்பத்திற்குள் நடக்கும் அனைத்துக்கும் பொறுபேற்பான்; மனைவியின் மீதான சகலவிதமான தாக்குதல்களை, கேடயமாக நின்று எதிர் கொள்வான். மொத்தத்தில் அர்த்தநாரீஸ்வரனாக நின்று, மனைவி தன்னில் பாதி என்பான்.
ஓர் ஆண், தன் பெற்றோருக்கு நல்ல மகனாக இருந்தபடியே, மனைவிக்கு நல்ல கணவனாக திகழ முடியும். விலாங்கு மீன் போல் பாம்புக்கு தலையையும், மீனுக்கும் வாலையும் காட்ட வேண்டாம். இரண்டு பக்கமும் சமமாக நடந்து கொள்ள வேண்டும்.
திருமணமான முதல் ஆண்டிலேயே, ஓர் ஆண், பெற்றோர் பக்கமும் சாயாமல், மனைவி பக்கமும் சாயாமல், நடுநிலையாக நிற்க கற்று கொண்டான் எனில், இருதரப்பும் உள்நாட்டு போரில் ஈடுபடாமல், அமைதி காக்கும்.
பெற்றோரிடம், 'என் மனைவி பற்றி எந்த அவதுாறும் கூறாதீர்கள்...' எனவும், மனைவியிடம், 'என் பெற்றோர் பற்றி எந்த, 'நெகடிவ்' கருத்தையும் என்னிடம் கூறாதே...' எனவும், எச்சரிக்க வேண்டும்.
பெற்றோர் - மனைவிக்கிடையே எதாவது பிரச்னை எனில், மனசாட்சிபடி தீர்ப்பு வழங்க வேண்டும்.
உன் மகளை விட்டு, மருமகனிடம் மனம் விட்டு பேச சொல்.
'அன்பு கணவனே, உங்கள் பெற்றோரை நான் மதிக்கிறேன். ஆனால், அவர்கள் உங்களிடம் என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் இல்லாதது, பொல்லாததை சொல்லிக் கொடுக்கின்றனர்.
'இன்றைக்கு நீங்கள் என்னை வேலைக்காரியாக, சமையல்காரியாக நடத்தினால், நாளை உங்கள் மகள்களை, மருமகன்கள், அப்படித்தான் நடத்துவர். என்னையும், உங்கள் பெற்றோரையும் சமமாக பாவியுங்கள்.
'உங்கள் பெற்றோர், தொடர்ந்து பிரச்னை செய்தால், தனிக்குடித்தனம் போய் விடுவோம், வாருங்கள். நீங்கள் திருமணம் செய்தது, என்னை மட்டும் தான்; பெற்றோரையும் சேர்த்து அல்ல.
'என் பெற்றோர் எப்படி இருந்தால், உங்கள் பெற்றோருக்கு என்ன? இரண்டும் கெட்டானாக இருக்காதீர்கள். உண்மையின் பக்கம் துணிந்து நில்லுங்கள்...' என, கூறட்டும்.
அதேநேரத்தில், மகள், தன் மாமனார், மாமியாரிடம் எதாவது வகையில் முட்டல் மோதல்களை தொடர்கிறாளா என, ஆராய். மகளின் பக்கம் தவறு இருந்தால், பேசி திருத்து.
மகளிடம், சுயபச்சாதாபம் இருந்தால், துாக்கி எறிய சொல். திருமண வாழ்க்கையில், உன் மகளை விட மோசமான நிலையில் வாழும் பெண்கள், கோடி பேர் உள்ளனர்.
மகளின் மாமனாருக்கு வயது, 65 - -67 இருக்கக் கூடும். இன்னும் எத்தனை ஆண்டுகள் இருந்து, மகனுக்கு துர்போதனைகள் செய்வார்? சகிப்புத்தன்மையும், பொறுமையும் இருந்தால், குடும்ப பிரச்னைகளை எளிதில் வெல்லலாம்.
பெண்ணடிமைதனம் போதிக்கவில்லை, நான். சாதுர்யமாக நடந்து, கணவரை உன் மகள் வசப்படுத்தட்டும். உன் இரு பேத்திகள், தங்களது தந்தைக்கு தகுந்த புத்திமதி கூறட்டும்.
'நான் வேலைக்காரியோ, சமையல்காரியோ அல்ல; இந்த வீட்டு இல்லத்தரசி...' என்ற உடல் மொழியோடு, வீட்டுக்குள் உன் மகளை உலவச் சொல்.
'கணவருக்கும், மாமனார், மாமியாருக்கும் நல்லபுத்தியை கொடு இறைவனே...' என, உன் மகளை இஷ்ட தெய்வத்திடம் நெக்குருக வேண்ட சொல்.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baalaa - Singapore,சிங்கப்பூர்
20-மே-202009:49:50 IST Report Abuse
baalaa மேலும் உங்கள் மகனும் மருமகளும் எங்கு இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை ... நீங்கள் உங்கள் மருமகளை எப்படி நடத்துகிறீர்கள் என தெரியவில்லை ... அவர்கள் உங்களோடு சேர்ந்து இருக்கவில்லை என்பது மட்டும் நிச்சயம் ... ஒரு நாளைக்கு பத்து தரம் உங்க பொண்ணுக்கு போன் பண்றதை நிறுத்துங்க முதலில்... 17 வருஷம் குடும்பம் நடத்தியிருக்காங்க .. அவங்களுக்கு தெரியும் எப்படி வாழ்க்கையை கொண்டு போவதுன்னு... நீங்க உங்க மூக்கை நுழைக்காதீங்க ... வாரம் ஒருமுறை போன் பண்ணுங்க அல்லது நேரில் போயி பேர புள்ளைங்கள பாத்து வாங்க ... உங்க மருமகளையும் வாரம் ஒருதரம் விசாரிங்க, போயி பாத்துட்டு வாங்க ... சகுனி வேலை செய்யாதீங்க ...
Rate this:
Cancel
baalaa - Singapore,சிங்கப்பூர்
20-மே-202009:29:13 IST Report Abuse
baalaa உங்களுக்கு 60 வயசு ஆகுது .. உங்களுக்கு உங்க பெண்ணோட வாழனும் .. எப்படியாவது பெண்ணை தனிக்குடித்தனம் வரவைச்சு நீங்க உங்க பெண்ணோட இருக்கணும் .... ரொம்ப கெட்ட எண்ணம் இது ... வயசுக்கு ஏத்த பக்குவம் இல்ல ... உங்க பொண்ணு நிஜமாகவே நல்லா இருக்கணும்னா, நீங்க அவங்க குடும்பத்தில் தலையிடாமல் இருங்கள் ... உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் ... உங்களை மாதிரி அம்மாக்களினால்தான் இன்னைக்கு பல குடும்பங்கள் சிதறிப்போகுது ... பல ஆண்கள் 40 வயசுக்குமேல தனியாக வாழ்கிறார்கள் ...
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
19-மே-202013:47:32 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI நல்லதொரு தீர்வினை வழங்கியதற்கு சகுந்தலா கோபிநாத் அம்மா அவர்களுக்கு நன்றி. நடுநிலையாய் கணவன் எப்படி இரு நிலையை சீர்படுத்தவேண்டும் என்று சொன்ன கருத்துக்கள் செதுக்கப்படவேண்டியவை. நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X