நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2020
00:00

'பாசிட்டிவ்' ஆக இருப்பவர்களோடு பழகுங்கள். நம்மை சுற்றி எப்போதுமே, 'பாசிட்டிவ் வைப்ரேஷன்' இருந்தால், நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே, எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை, எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
உற்சாகமாக இருங்கள்: சோகத்தை விட்டொழித்து, எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலை செய்யுங்கள். இந்த வேலையை செய்ய வேண்டுமே என, செய்து முடிக்காதீர். இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை, மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என, எண்ணி வேலை பாருங்கள்.
'பவர்புல்'லாக உணருங்கள்: உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி, மன வலிமை மிக முக்கியம். உங்களை போல, இந்த உலகத்தில், 'பவர்புல்' ஆனவர் யாருமில்லை என்றால், உடனே சிரிக்காதீர்கள்.
இது தான் நிஜம். உங்களின், 'பெஸ்ட்' எது என்பது, உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற, 'லெவல்' ஆள்.
நேசியுங்கள்: உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால், வெற்றியடையவே முடியாது.
உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால், உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை, மனதுக்கு புரிய வையுங்கள்.
உங்களை போல அழகானவர் யாரும் இல்லை; திறமையானவர் யாரும் இல்லை என்பதை, மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
முயற்சி தொடரட்டும்: வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என, தெரியாது.
இந்த நீண்ட நெடும் பயணத்தில், ஒரு சிலருக்கு, வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து, அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால், 'பாசிட்டிவ்' எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால், உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், பிடித்தமானதாகவும் இருக்கும்.

கவிதா பாலாஜி கணேஷ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-மே-202017:01:35 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னிடமுள்ள மைனஸ் பாயிண்ட் சினனகுலந்தியா இருக்கையிலேந்து எனக்கு கோயம்புத்தூர் பிடிக்காது காரணம் தெரியலே . ஆனால் என் முதுமைலேயே நேக்குகோவைலவள்ளும் துரதிர்ஷம் வந்துட்டுது . காரணமே முதுமையை தான் .பலமுறை இங்கேவந்துட்டேனே என்று தனிமையே அழுவேன் யாருடனும்பேசமாட்டேன் , இது ஒரு கம்யூனிட்டி இல்லம் எனலாம் , சிறுவயதுலேந்து தினம் கோயில் பொய்ப்பழக்கம் இங்கே எங்களுக்கு கோயில் இல்லீங்க .. ஒருபெயர் ஹால் மட்டுமேஇருக்கு . அதுவே தான் எங்கள் யோக கிளாஸ் நடக்குமிடம் , பல பக்திவிஷயங்களும் நடக்கும் பொது விழாக்களும் நடக்கும் எல்லாம் போவேன் வருவேன் மனம் ஒன்றவே இல்லே . இதே மனோஜிமென்ட் மேலு பலதுகாத்திருக்காங்க ஆனால் எங்களுதுபோல இல்லாது அவாளுக்கு தனியா கோயில் கட்டிருக்கா . SAAPPAADU சிலசமயம் NANNAA AMAIYUM PALASAMAYAM AVANDHARAIYAA IRUKKUM ONNUM SOLLIKKAMUDIYADHU NAANPAADDUKU என் IDATHTHULE NIMMADHIYAAIRUNTHEN THALAIVITHI இங்கே VANDHUTTENE என்று VARUTHTHAM KOVAM எல்லாம் இருக்கு . வேறுவழியே இல்லீங்க என் மனதை எழுத்து இந்த ஊரு சுடுகாடுதான் என்று இருக்கு
Rate this:
Monu - Singapore,சிங்கப்பூர்
20-மே-202014:07:51 IST Report Abuse
MonuKavali padatheenga. kovil ponal than kadavula ? nam manathae kovil than . God bless you...
Rate this:
Cancel
19-மே-202014:17:16 IST Report Abuse
Kannan P, Rajapalayam May be this is wrong. Ithuve lpooru bussiness mari youtube, fb, whatsapp and etc.... ellathulayum same dialouge ellarukkum solranga, nenga powerful superman athu ithu nu.ellarukkum apdi irukka asai than.chess game la ellame king vachu win panna mudiyathu, rummy game la ella joker irunthalum win panna mudiyathu, oru school la ellarum 1st rank edukka mudiyathu, oru game la ellarum win panna mudiyathu,so life la king or joker or ordinary ethuva irunthalum apdiye accept panni vala palaganum. athu than best. be honesty.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
18-மே-202019:48:55 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI பொறுப்பாசிரியர் அவர்களுக்கு நம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி இன்றய காலகட்டத்துக்கு ஏற்ற ஓரு கட்டுரை. எண்ணங்களே வாழ்கை . வாழ்க்கையில் நாம் நேர்மறை எண்ணங்களை கொண்டிருந்தால் நாம் மட்டுமல்லாமல் மாற்றவரையும் சந்தோஷ படுத்தலாம் .நம் பயணத்தை இனிதாக்க நம்மால் மட்டுமே முடியும். நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X