இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

கற்ற தொழிலே சிறந்தது!எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவர், 'ஏசி' மெக்கானிக் தொழிற் படிப்பு படித்து, வெளிநாட்டு வேலைக்கு போனார். அங்கு, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. ஏதேதோ வேலை செய்து, இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டிருக்கிறார்.
பிறகு, தமிழகம் திரும்பியவர், சில நண்பர்களோடு சேர்ந்து, 'ஏசி' பழுது பார்க்கும் நிறுவனத்தை, சிறிய அளவில் ஆரம்பித்து, நடத்தி வருகிறார்.
தற்போது, இவரது நேர்மை மற்றும் கடும் உழைப்புக்கு பலனாக, நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். வாழ்க்கை நடத்த தேவையான வருமானம் வருகிறதாம்.
வெளிநாட்டு மோகத்தால், தான் பட்ட கஷ்டங்களை விட, இங்கு, உள்ளூர் வேலை, அதுவும் இவர் படித்து, அனுபவத்தால் கற்ற வேலையை செய்வதற்கு திருப்தியாக உள்ளதாம்.
'சொர்க்கமே என்றாலும், நம் ஊரு போலாகுமா...' என்ற பாடல் தான், நினைவுக்கு வந்தது.
வி.சி. கிருஷ்ணரத்னம், சென்னை.

எச்சரிக்கை பலகைகள்!
பல சிறிய பெட்டிக் கடைகளில், நாம் பார்க்கும் எச்சரிக்கை பலகைகளில், 'இங்கு, கடன் கிடையாது; சம்பள ஊழியர்கள் கிடையாது; ஞாயிற்றுக் கிழமை விடுமுறை...' போன்ற, சில வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.
பல்வேறு இடங்களில், 'இங்கு, புகை பிடித்தல் கூடாது; மது அருந்துதல் கூடாது; அரசியல் பேசக் கூடாது...' போன்ற பலகைகளும் உள்ளன.
இனி வரும் காலங்களில், 'இங்கு, எச்சில் துப்பக் கூடாது; சிறுநீர் கழிக்க கூடாது; இடைவெளி விட்டு நிற்க வேண்டும்; முக கவசம் அணிந்து வருபவர்களுக்கே, முன்னுரிமை; கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்...' போன்ற பலகைகள் புதிதாக இடம் பெற செய்யலாம்.
இதுபோன்ற எச்சரிக்கை வாசகங்களை பின்பற்றினால், நிச்சயம், நம் நாட்டின் சுகாதாரம் மேம்படுவதோடு, வாழ்க்கை முறையிலும் நல்ல மாற்றம் ஏற்படும்.
வெ. சந்தான கோபாலன், மதுரை.

இப்படியும் நடக்குது, நுாதன திருட்டு!
எங்கள் ஊரில், இரு வாலிபர்கள், சில வணிக நிறுவனங்களில், நுாதன முறையில், அலைபேசிகளை திருடிச் சென்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.
அதாவது, வணிக நிறுவனங்களில், வாடிக்கையாளர்களை கவனிக்கும் வேளையில், சில முதலாளிகள், அலைபேசிகளை மேஜை மீது வைத்து விடுவர்.
அச்சூழ்நிலைகளை கவனித்துக் கொண்டிருக்கும் அவ்வாலிபர்கள், ஏதாவது பினாமி பெயர்களில் சில விளம்பர துண்டு பிரசுரங்களை, முதலாளியிடம் தந்து, படித்து பார்க்க வற்புறுத்துவர்.
அதை படித்துக் கொண்டிருக்கும்போது, அவரது கவனத்தை சிதறடித்து, லாவகமாக அவரின் அலைபேசியை எடுத்து, வேகமாக வெளியேறி விடுவர். அவ்வாலிபர்களின் செயலை, வியாபார முனைப்பில் இருப்போர் யாரும் கண்டுகொள்வதில்லை.
அவர்கள் சென்றவுடன், மேஜையில் இருந்த அலைபேசி திருடப்பட்டிருப்பது தெரிய வரும். அழுதால் துக்கம், வெளியே சொன்னால் வெட்கம் என்று விட்டு விடுவர்.
இவர்களை போன்ற திருடர்களை பின்பற்றி, அனைத்து ஊர்களிலும் திருட்டுகள் நடக்க வாய்ப்புள்ளது.
விளம்பர துண்டு பிரசுரங்களை தரும் வாலிபர்களிடம், மிக உஷாராக இருந்து, உங்களின் விலை உயர்ந்த அலைபேசிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ப. அண்ணாமலை, திண்டுக்கல்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
31-மே-202021:43:28 IST Report Abuse
கதிரழகன், SSLC எதுக்கு குஜராத் போவணும்? பரம்பரையா வட்டி தொழில் செய்யற தமிழ் நாடு சமூகங்களும் அப்படித்தான். நாங்க ஒழுங்கா முறையா நியாய தருமம் பாத்தி செஞ்ச வரைக்கும் கந்து வட்டி மீட்டர் வட்டி எல்லாம் இருந்திச்சா ? சத்திரிய வமிசம் போலீசு ராணுவம் அரசியல் அரசு நிர்வாகம் மேலாண்மை துறையில இருக்கணும். பழக்கமில்லாத வட்டி யாவரத்துக்குள்ள வந்தா எல்லாருக்கும் சர்வ நாசம்தான். தரும நியாய சிந்தனை பள்ளிக்கூடத்துல டிகிரி படிப்புல வராது. பரம்பரையா வரணும். தொழில் ரகசியத்துக்கும் மேல தொழில் தருமம். ஆயிரம் வருசம் இந்த தொழில் நிலைச்சு நிக்கணும் பேரனும் பேரனுக்கு பேரனும் இந்த தொழில் செய்யணும். இன்னிக்கு சீக்கிரம் லாபம் பாக்கற ஆசையில விதை நெல்லை அவிச்சு தின்ன கூடாது, உழுகிற நிலத்தை கெடுக்க கூடாது. என் கடனாளி என் வயல். என் கிட்ட கடன் வாங்குறவன் நல்ல செழிச்சாத்தான் அவன் பையன் என் பையன் கிட்ட கடன் வாங்குவான். லாபம் அவனுக்கு. வட்டி எனக்கு. லாபத்து மேல எனக்கு ஆசை வர கூடாது. கடன் கொடுத்தவன் மேல வெறுப்பு அவனுக்கு வரக்கூடாது. இதையெல்லாம் வெள்ளைக்காரன் கிளார்க்கு வேலை பாக்க டிரைனிங் கொடுக்க உண்டாக்கின டிகிரி படிப்புலயா தெரியும்?
Rate this:
Manian - Chennai,இந்தியா
01-ஜூன்-202010:45:19 IST Report Abuse
Manianகதிரு நீங்க சொல்லறது முன்னாலே முடிஞ்சுது. இப்ப முடியாது. எந்த தொழிலும் கேவலம் இல்லை.ஒரு தடவை ரயில் கூட வந்த குஜராத்திக்காரர் சொன்னது.ஆப்ரிக்காவிலே உகாண்டா நாட்டு தலைவரு ஈடி அமின் குஜராத்தி கடைக்காரனுகளை அடிச்சு தொறத்தினான் .குஜராத்திங்க பணத்தை எடுத்துக்கிட்டு போயி அமெரிக்காவிலே மோட்டல்(ராவு தங்கும் விடுதிகளை வாங்கினாங்க. ஒரு குஜராத்தி குடும்ப பேர்ல 100,000 டாலர் பேங்கிலே போட்டு, அந்த குடும்பத்துக்கு குடி உறிமை மொதல்படி கெடடைக்க வைபப்பானுக. அது இன்னொரு புது குஜராத்திக்கு கணக்கிலே வரவு ஆக காட்டி விப்பானுக. இப்படி அமெரிக்காவிலே 80% இரவு தங்கும் விடுதிகள் குஜராத்திங்க் கையிலேஅதை தமிழ் நாட்டிலே இப்ப மாமூல் இல்லாம செய்ய முடியுமா? இல்லை செய்யவுடுவானுகளா? இன்னைக்கும் பேடல்(படேலை அமெரிக்கனுக அப்படித்தான் சொல்லுவாங்களாம்)மோடல்னு பேராம்.இன்சூரன்சு ஏஜெண்டு, படேல் பேங்க எல்லாமே இதிலே கூட்டு களவாணிங்கதானாம்...
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
31-மே-202015:41:57 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI எச்சரிக்கை பலகைகள் வைக்கலாம் எச்சரிக்கை செய்யலாம். ஆனால் அதை புரிந்து நடந்து கொள்வது மக்களிடம் தான் உள்ளது . சட்டங்கள் ஆயிரம் போட்டாலும் சட்டங்களை மீறாமல் இருக்கவேண்டும். பலகைகள் போர்க்கால நடவடிக்கைகள் அனைத்தும் இக்காலகட்டத்திற்கு தேவையே நன்றி
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
31-மே-202014:52:40 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI நூதன திருட்டு நடந்துகொண்டு தான் உள்ளது . திருடர்கள் நிறுத்தவேண்டும் என்று நினைத்தால் தான் நிறுத்தமுடியும். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் மனநிலை மாறவேண்டும் . திருடர் கொண்டுவரும்வீட்டில் பணத்தை வாங்கமறுக்கவேண்டும் . நல்ல சம்பாத்தியமே நிலைக்கும் . இல்லையேல் வந்த வழியே செல்லும். நன்றி இரா பிரேமலதா யோகேஸ்வரி கோவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X