சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாண பரிசு போன்ற உள்ளத்தை உருக்கும் படமாக எடுத்த, ஸ்ரீதர், அடுத்து, ஒரு முக்கோண கதைக்கான, 'டிஸ்கஷ'னுக்கு அழைத்தார். அப்போது, 'ஒரு மாறுதலுக்கு, முழு நீள காமெடி படம் எடுப்போம்...' என்றார், கோபு.
'என்னை வச்சு காமெடி படமா... அதற்கு நான் சரிப்பட்டு வருவேனா... ஜனங்கள் ஏத்துக்குவாங்களா...' என்று, அதிர்ச்சியுடன் தயங்கினார், ஸ்ரீதர். பேசி, ஸ்ரீதரை சம்மதிக்க வைத்தார், கோபு.
ரவிச்சந்திரன் காதலியாக, முதலில், நிர்மலாவை ஒப்பந்தம் செய்து, ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டு விட்டது. திடீரென ஸ்ரீதருக்கு, தான், 'ட்ராக்' மாறுவதாக பயம் வந்து விட்டது.
படத்தை அப்படியே கைவிட்டு, வேறு ஒரு பட வேலையில் இறங்கி விட்டார். அது தொடர்பாக, ஸ்ரீதர் சந்திக்க வந்த போது, முகத்தை, 'உர்'ரென்று வைத்துக் கொண்டார், கோபு.
ஸ்ரீதருக்கு விஷயம் புரிந்து போனது, 'இப்ப என்னாங்கிறே... காதலிக்க நேரமில்லை படத்தை எடுத்துட்டு தான், அடுத்த வேலைங்கிற, அப்படித்தானே... சரி, உன் இஷ்டம்...' என்றார்.
காமெடி தான் கதையின், 'ஹீரோ' என்றானதும், கோபுவிடம் இருந்து நகைச்சுவை வற்றாமல் ஊற்றெடுத்தது. காட்சிகளை, 'டெவலப்' செய்து கொண்டே போனார். சினிமா பைத்தியம் பிடித்த மகன் வேடத்தை விரிவுபடுத்தினார். நாகேஷும், தன் திறமையை வெளிப்படுத்தினார்.
ரவிச்சந்திரனை காப்பாற்ற, அப்பா வேடத்தில், பாலையாவின் வீட்டிற்கு வந்திருப்பார், முத்துராமன். அப்போது, எதிர்பாராத விதமாக, முத்துராமனின் அப்பாவும் அந்த வீட்டிற்கு வந்து விடுவார் என்று, கோபு வைத்த, 'ட்விஸ்ட்' ரொம்பவும் பிடித்துப் போனது, ஸ்ரீதருக்கு.
கோபுவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பட, 'டைட்டிலில்' கதை, ஸ்ரீதர் - கோபு என்று, தனக்கு சமமாக, கோபுவின் பெயரை இடம் பெறச் செய்தார்.
'என்னப்பா... இது, சட்டைப்பா...' என்பது போல, படத்தில் இடம் பெற்ற, கோபுவின் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் விழுந்து விழுந்து சிரித்தனர், ரசிகர்கள்.
கடந்த, 1964ல் வெளிவந்த இந்த படம் தான், தமிழில் வெளியான முதல் முழு நீள வண்ணப்படம். ரவிச்சந்திரன், 'ஏர்ஹோஸ்டஸ்' ஆக இருந்த, காஞ்சனா உள்ளிட்ட நிறைய பேர், அந்த படத்தில் புதுமுகங்களாக இடம் பெற்றிருந்தனர்.
'என்ன பார்வை... மாடி மேலே... உங்கள் பொன்னான கைகள்... அனுபவம் புதுமை... நாளாம் நாளாம்... மலரென்ற முகமொன்று... காதலிக்க நேரமில்லை...நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா...' என்பது போன்ற, எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்களை கொண்ட படம்.
இதெல்லாம் பரவாயில்லை... அதுவரை கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த, சச்சுவை, நகைச்சுவை நடிகையாக்கியதும், இந்த படம் தான். இதற்காக, கோபு, சச்சுவின் வீட்டிற்கு போன போது, 'ஒன்லி ஹீரோயின் ரோல் தான் நடிப்பார்...' என்று சொல்லி, அவரது பாட்டி மறுத்து விட்டார்.
பிறகு, 'படத்தில், மூன்றாவது, 'ஹீரோ' நாகேஷ். அவருக்கு ஜோடி என்றால், 'ஹீரோயின்' தானே...' என்று எதை எதையோ சொல்லி, ஒப்பந்தம் செய்து விட்டார்.
'என்னுடைய, 'ட்ராக்'கையே மாற்றியவர், கோபு தான்...' என்று, இப்போதும், சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார், சச்சு.
கவியரசு கண்ணதாசன்-, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், 'காம்பினேஷனில்' பாடல்கள் எல்லாம், 'ஹிட்!'
வெளியூர் போய் திரும்பிய விஸ்வநாதனிடம், 'நீ பாட்டுக்கு வெளியூர் போயிட்ட... எனக்கு யாரு வேலை கொடுப்பா விஸ்வநாதா... இப்ப வேலை கொடு...' என்று, செல்ல கோபத்துடன் கேட்டார், கண்ணதாசன்.
இதை கவனித்த ஸ்ரீதர், இதையே வரியாக போட்டு, பாட்டு எழுத சொன்னார். அது தான், 'விஸ்வநாதன் வேலை வேணும்...' என்ற பாடல். அந்த பாடல் வரிக்காகவே, பாலையாவின் பெயரையும் விஸ்வநாதன் என்று மாற்றினார்.
'இதுவரை, தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்தது இல்லை; இனி வரப்போவதும் இல்லை...' என்று சொல்லும் அளவிற்கு, 'சூப்பர் டூப்பர் ஹிட்'டானது. பியார் கியா ஜா என்ற பெயரில், ஹிந்தியிலும் எடுக்கப்பட்டது. இதற்காக, ஹிந்தியில் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் போடப்பட்டது.
படத்தில், பாலையாவிற்கு, நாகேஷ், மர்ம கதை சொல்லும் காட்சி தான், படத்தின், 'ஹைலைட்!'
'அசோகர் உங்க மகராமே...' என்று, மகன் என்ற வார்த்தையைக் கூட மரியாதையாக கூறும், பாலையாவின் பேச்சு, வசன உச்சரிப்பை கூட செய்து விடலாம். ஆனால், நாகேஷிடம் கதை கேட்கும் போது, மிரண்டு போய், நொடிக்கு நொடி, தன் முக பாவத்தை மாற்றும் வித்தையை பாராட்ட வேண்டும்.
அந்த காட்சிக்கு, பாலையா எவ்வளவு உயிர் கொடுத்து இருப்பார். இப்படி ஒரு காட்சி, கோபுவின் சிந்தனையில் எப்படி வந்தது என்பது தெரிந்தால், மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்?

காதலிக்க நேரமில்லை
படத்திற்கு ரஜினியின், 'கமென்ட்!'
பழைய படங்களை அதே தலைப்புடன் இரண்டாம் பாகமாக எடுக்கும், 'டிரண்ட்' தற்போது கோலிவுட்டில் நிலவி வருகிறது.
காதலிக்க நேரமில்லை படத்தை எடுக்கலாம் என்று, ஆளாளுக்கு முயற்சி எடுத்தனர். இந்த ஆர்வத்தை பார்த்த ரஜினி, 'எல்லா காலகட்டத்திலும் யாராவது காதலிக்க நேரமில்லை படத்தை பற்றி பேசிக்கிட்டே இருக்காங்க. நான் அந்தப் படத்தைப் பார்த்தாகணும்...' என்று, கோபுவிடம் பேசி, சி.டி., வாங்கி, படத்தை முழுமையாகப் பார்த்தார்.
பின்னர், 'படத்தில் நிஜமான, 'ஹீரோ' பாலையா தான். அவர் மாதிரி நடிக்க, இன்னைக்கு ஆள் கிடையாது. அதனால, காதலிக்க நேரமில்லை, 'பார்ட் - 2'க்கு வாய்ப்பே இல்லை...' என்று, சொல்லி விட்டார்.

தொடரும்

-எல். முருகராஜ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-ஜூன்-202009:58:45 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆஹா மறக்கவேமுடியாது முதல்ல எங்கள் ஊரு கிருஷ்ணா கொட்டாயிலேதான் என் பிரெண்ட்ஸ்களோட போனேன் என் டீனேஜ் லே தியேட்டர் வீட்டுக்கு அருகே அதனால்பெர்மிஷகிடைச்சுது நான் மிகவும் ரசிச்சு சிரிச்சு மகிழந்த சிலபடமக்களிலே இதுவும் ஒன்னு இப்போதும் டிவிலே எந்த சாநல்லே வந்தாலும் உக்காந்துபார்ப்பேன் இப்போது இந்த 78வயசுலேயும் என்ஜாயப்பண்ணுவேன் அதுபோல சில படங்க்கலெனக்கு ரொம்பவே இஷ்டம் யார்பையன் /மிஸ்ஸியம்மா /அறிவாளி /கரகாட்டக்காரன் /தில்லானாமோகனாம்பாள் திருவருட்செல்வர் திருவிளையாடல் அதேபோல ஜெயம் ரவி நடிச்ச சந்தோஷ் சுப்பிரமணியன் ரொம்பவே இஷ்டம் அபியும்நானும் ஜாலியா இருக்கும்பாக்க
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
01-ஜூன்-202000:10:23 IST Report Abuse
Vaduvooraan அத்தனை பாடல்களும் அருமை...விஸ்வநாதனுடன் ராமமூர்த்தி இணைந்து பணியாற்றிய காலம்...வின்சென்டின் காமிரா.... இதமான வண்ணம்... ரவிச்சந்திரன் காஞ்சனா இவர்களின் வித்தியாசமான தோற்றம்..பெங்களுர் போன்ற வெளிமாநில நகரங்களில் கூட 25 வாரம் ஓடி சாதனை படைத்த அற்புதமான படம்...தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்...
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
31-மே-202019:32:13 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI டைரக்டர் ஸ்ரீதர் + வற்றாத நகைச்சுவை சித்ராலயா கோபு + மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் + கவியரசு கண்ணதாசன் = காதலிக்க நேரமில்லை . ஒவ்வருவரும் சிறப்பாய் நடித்து பரிமளித்து பாராட்டப்பட்ட படம். பாலைய்யாவின் நாகேஷின் ஒருகிங்கிணைப்பில் உருவான நகைச்சுவை காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்கவைத்தன . அப்போதும் இப்போதும் எப்போதும் நினைவில் நீங்காதவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X