அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

பா-கே
சென்னையில், 'டாஸ்மாக்' கடைகள் இல்லாததால், பக்கத்து மாவட்டமான, காஞ்சிபுரத்திற்கு, தம் காரில் பலரும் செல்கின்றனர். இதற்காக காரில், 'அவசரம், கொரோனா பரிசோதனை' என்ற, 'ஸ்டிக்கர்'களையும் மற்றும் டாக்டர், வக்கீல், 'ஸ்டிக்கர்'களையும் ஒட்டிச் செல்கின்றனர்.
போலீஸ் பரிசோதனையிலிருந்து தப்பிக்க, சிலர், போலீஸ் நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக, 'பிரஸ்' - ஊடகம், 'ஸ்டிக்கர்'களையும் ஒட்டிச் செல்கின்றனர்.
போலீசார் சளைத்தவர்களா... இதுபோன்ற வாகனங்கள், 'சரக்கு'களுடன் திரும்ப வரும்போது, அவற்றை நிறுத்தி, அந்தந்த வாசக, 'ஸ்டிக்கரு'க்கான, 'ஐடென்டிபிகேஷன் கார்டு' கேட்கின்றனர்.
போலிகளால் அவற்றை காட்ட முடியாதே - இருந்தால் தானே!
உடனே, வாகனப் பரிசோதனை நடக்கிறது; மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர், போலீசார்.
போலீஸ் நண்பர்களுடன் வருவோர், பெரும்பாலும் தப்பி, சரக்குகளுடன், சென்னை அடைந்து விடுகின்றனர்.
மற்ற சிலரோ, காக்கிச் சட்டைகளுக்கு, 'காந்தி'யைக் கொடுத்து, தப்பிக் கொள்கின்றனர், சரக்குகளுடன்!
இது ஒருபுறம் இருக்க, நண்பர் ஒருவரை சந்தித்தேன். விவகாரம், சரக்கு பக்கம் திரும்பியது.
அவர், பச்சைத் தண்ணீர் மட்டும் தான் குடிப்பார்; உ.பா., பழக்கம் கிடையாது. ஆனால், ஒரு ஆண்டுக்கு முன் நடந்த, தன் தங்கையின் திருமண வரவேற்புக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு, 'டின்னருக்கு' முன் உற்சாக பான விருந்தளித்தார்.
இதற்காக, வெளிநாட்டு, உ.பா., பாட்டில்களை நிறைய வாங்கி வந்திருந்தார். ஆனால், விருந்தினர் அனைவரும், தம் மனைவியருடன் வந்திருந்ததால், அன்றைய விருந்தில், கால் பாகம் கூட காலியாகவில்லை.
மீதி அனைத்தையும் தம் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். அவர் தான், உ.பா., பிரியர் இல்லையே; அதனால், அவர் வீட்டில், 'ஸ்டாக்' இருக்கும் என நினைத்து, போன் செய்யாதவர்களே இல்லையாம்.
'அதை ஏம்பா கேட்கிறே... முதன் முதலில் போன் செய்தது, என் ஆடிட்டர் தான். இரண்டாவதாக போன் செய்தது, நான் வைத்தியம் பார்க்கும், சென்னையில், மிகப்பெரிய தனியார் ஆஸ்பத்திரி டாக்டரின் உதவியாளர்!
'இது போதாதென்று, என் அத்தையின் மகன்கள், போன் செய்தனர். நச்சரிப்பு தாங்கவில்லை... திருமண வரவேற்பு முடிந்த கையோடு, மீதமிருந்த பாட்டில்களை எல்லாம் நண்பர்களுக்கு கொடுத்து விட்டேன் என்பது தெரியாமல், என்னிடமே இருப்பது போல் நம்பி, போன் செய்து, கொத்தி எடுத்து விட்டனர்...' என, புலம்பினார்.
'கவலையை விடுங்கள்...' என, ஆறுதல் கூறிய எனக்கு, அதி புத்திசாலியான, லென்ஸ் மாமா நினைவில் வந்தார். அவர் தான் அதி புத்திசாலி ஆயிற்றே! 'டாஸ்மாக்' திறப்பதற்கு காலங்கள் ஆகும் என்பதை முன்பே கணித்து, 'ஸ்டாக்' வாங்கி வைத்து விட்டார்!
சென்னையிலிருந்து, வாசகர் ஒருவர் எழுதிய கடிதம்:
மதுக்கடை பாரில் வேலை செய்து வந்த நான், ஒவ்வொரு நாளும் பல தரப்பட்ட மனிதர்களையும், வித்தியாசமான குணாதிசயங்களை கொண்டவர்களையும் சந்திக்கிறேன். அவர்களை தெய்வமாக நினைத்து பணி செய்கிறேன்.
ஒவ்வொருவரும், ஒவ்வொரு மனநிலையில் வருவர். வரும் போது, 'வா, நண்பா... என்ன தலைவா... மாமா, மச்சான் ஐயா...' என்று பலவிதமாக அழைப்பர். ஆனால், போகும்போது, நல்லவிதமாக செல்பவர்களும் உண்டு. 'டேய், யாருடா நீ...' என்று கேட்டு செல்பவர்களும் உண்டு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் அனைவரையும் அனுசரித்து சென்றால் தான், நானும், என்னை நம்பியிருக்கும் குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியும். இதில், மிக மிக அவசியம், பொறுமை. கோபப்படாமல் கடமையை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், எப்படிப்பட்ட மனிதர்களுக்கும், பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு, எங்களிடமே கடன் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நானும், என்னால் இயன்ற வரை கொடுத்து உதவுவேன். திரும்ப வருமா, வராதா என்பதை எல்லாம் சிந்திக்கவே மாட்டேன்.
என்னை பொறுத்த வரையில், அவர்களாக திருப்பி தந்தாலன்றி, நானாக கேட்க மாட்டேன். என்னுடைய, 'கேரக்டர்' அப்படி... யார் கேட்டாலும் கொடுத்து உதவுவேன். ஏதோ சம்பாதித்தோமா, வீட்டுக்கு தேவையானதை கொடுத்தோமா என்று தான், இப்போது வரை வாழ்ந்து விட்டேன்.
எனக்கென்றோ, குடும்பத்திற்கென்றோ சேமிக்க வேண்டுமே என்கிற எண்ணமே இல்லாமல், இதுவரை வாழ்ந்து விட்டேன். குடிப்பது, புகை பிடிப்பது ஆகிய இரண்டு பழக்கமுமே, எனக்கு கிடையாது.
மனைவிக்கோ, என்னை விட ஒரு படி மேல் தாராள மனசு.
'நமக்காக ஏதாவது சேமித்து வைத்திருக்கிறீர்களா?' என்று, எனக்கு அறிவுரை கூட சொல்லவில்லை. எப்படியோ இரண்டு குழந்தைகள்.
வாழ்க்கையில் பாதியை கடந்து விட்டோம். படிப்பிற்கு என, யார் கேட்டாலும், தயங்காமல் கொடுத்து உதவினேன். அந்த அளவுக்கு நான் பெரிதாக பணம் சம்பாதித்து வைத்திருக்கவுமில்லை; ஆனாலும் தாராள மனசு.
நண்பர்களுக்கு எவ்வளவோ கொடுத்து உதவி இருக்கிறேன். இதில் பெரிய அளவிலான தொகையை நண்பர்களுக்காக, 'பைனான்ஸ்'சில் வாங்கி கொடுத்து, அவர்கள் கட்டாமல் போக, நான் ஏமாந்த கதையும் உண்டு. அவர்களுக்காக நான், பெருந்தொகையை இழந்திருக்கிறேன்.
இப்படி பல பேர், என்னை ஏமாற்றி விட்ட பின் தான், காசின் அருமையை உணர்ந்தேன். நமக்கென்று பணம் சேமிக்காமல் இருந்ததை, இப்போது உணர்கிறேன்.
இந்த, 'கொரோனா' வந்த பின், ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உடல் நலம் சரியில்லாத மகன், அதே நிலையில் மனைவி, ஆக மூன்று பேருமே வேலையின்றி எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.
'கொரோனா'வால் தான் பணத்தின் அருமையும், பணம் சேமிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இருக்கிறேன்.
வேறு ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, எங்கேயும் வேலை கிடைக்காத சூழ்நிலை. பணத்தின் அருமையையும், நேரத்தின் அருமையையும் இப்போது தான், உணர்ந்து கொண்டேன்.
இப்போது என்னுடைய பழக்கங்களை மாற்றி, புதிய மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன். எல்லாம், 'கொரோனா' கற்றுத் தந்த பாடம். சேமிப்பு என்பது, ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக இருப்பதையும், சேமிக்க பழகிக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், 'கொரோனா' ஒரு பாடமாக கற்றுத் தந்து விட்டது.
- இவ்வாறு, அவர் எழுதியுள்ளார்: அவரிடமிருந்து நீங்களும் பாடம் கற்றுக் கொண்டீர்கள் தானே!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - chennai,இந்தியா
06-ஜூன்-202011:59:39 IST Report Abuse
raman முதலில் மனிதனுக்கு நன்றி என்பது மருந்துக்கு கூட கிடையாது என்பதை புரிந்து கொண்டாலே , நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
04-ஜூன்-202010:10:27 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI அன்றாடம் உழைத்து பிழைப்பு நடத்தும் எண்ணற்றவர்கள் சாப்பிட கஷ்டப்பட்டார்கள். ஆனால் மதுரை அருந்தி கொண்டாட்டங்களில் சிலர். சேமிப்பு பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தவர்கள் விழித்துக்கொண்டனர் மனைவி மற்றும் கணவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வைரஸின் வீரியம் அது தந்த பாடமும் நல்லதே.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
02-ஜூன்-202005:22:07 IST Report Abuse
Manian ஓசி குடியிலே நந்தலாலா உலகமெல்லாம் சுத்துதடா நந்தலாலா குப்பியை பிடித்து விட்டால் நந்தலாலா தப்பி பிழைக்க வழி சொல் நந்தலாலா- புலவர் குடியார்க்கு நல்லார் டாஸ்மார்க் குடியிலே தம்மில்லை நந்தலாலா பஸ்டுகிளாசு குடியிலே லாஸ்டில்லை நந்தலாலா தம்மடிச்சு தூங்குறவன் நந்தலாலா பம்பி பம்பி ஓசி கேட்பான் நந்தலாலா வீட்டுகுடி நலம்கிள்ளி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X