பால் அருந்துவது நல்லதா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

ஜூன் 1 சர்வ தேச பால் தினம்

நம் அன்றாட வாழ்வில் மிக முக்கிய உணவுப் பொருள், பால். பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்தே, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதியை, உலக பால் தினமாக அறிவித்தது.
உலகளாவிய பிரதான உணவான பாலில், தண்ணீர், புரதங்கள், தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் 'லாக்டோஸ்' போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. பற்கள் மற்றும் எலும்புகளை வலிமைப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் என, பல பயன்களும் உள்ளன.
கனடா பிராக் பல்கலைக்கழகத்தின், இணை பேராசிரியரான ராய் என்பவர், பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுவதாக, ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளார்.
இதைப் போன்றே, இன்னொரு பல்கலைக்கழக பேராசிரியர், பீட்டர் எல்விஸ் என்பவர், பால் பருகுவதால், பக்கவாதம், நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற பிரச்னையால், இறப்பவர்களின் எண்ணிக்கை, 15 முதல் 20 சதவீதம் குறைந்திருப்பதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, பல ஆய்வுகள், பாலை அதிகம் பருகுவதால், எலும்பு முறிவு, இதய நோய், நீரிழிவு நோய், 'அல்சைமர்' எனப்படும் ஞாபகமறதி நோய், புற்றுநோய் ஏற்படுவதாகவும் கூறியுள்ளன.
மேலும், பாலாக பருகாமல், புளித்த தயிர், வெண்ணெய் போன்ற, பாலின் பொருட்களாக எடுத்துக் கொண்டால், அதனால் வரும் அபாயங்கள், 10 முதல் 20 சதவீதம் வரை குறைவதாகவும் கூறியுள்ளன.
தற்போதைய கால கட்டத்தில், கொழுப்பு சத்து நிறைந்த பால், கொழுப்பு சத்து நீக்கிய பால், கொழுப்பு சத்து குறைந்த அளவுடைய பால் என, பல வகைகளில் விற்பனை மாறியுள்ளது.
இதையடுத்து, உலக சுகாதார மையம், 'ஒரு நாளைக்கு, 300 - 750 மி.லி., பால் பருகுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு சிறந்தது...' என, குறிப்பிட்டுள்ளது.
மனித இனம் மட்டுமே, மற்ற விலங்குகளின் பாலை, தங்களின் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டுள்ளது. ஏனெனில், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில், மிக முக்கிய உணவுப்பொருள், பால்.
எனவே, பாலின் தனித்துவத்தை உணர்ந்து, பதப்படுத்தப்பட்ட பாலாக இருந்தாலும், நன்கு காய்ச்சி, நம் உடலின் ஜீரண சக்திக்கு ஏற்ற அளவு எடுத்துக் கொள்ளலாம்.

ஆர்.திவ்யா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
31-மே-202019:56:36 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI பிறந்தது முதல் இறக்கும் வரை நம் வாழ்க்கையில் பால் ஒரு அத்தியாவசிய பொருள் . எந்த ஒரு பொருளும் அளவுக்கு மிஞ்சினால் பாலும் நஞ்சு என்பதை விளக்கியது இந்த கட்டுரை . குழந்தை முதல் பெரியவர் வரை அன்றாடம் உபயோகிக்கும் பால் மற்றும் பால் பொருட்களை அளவோடு பருகி வளமோடு வாழ்வோம் .
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
31-மே-202011:17:16 IST Report Abuse
Manian அது சரி, குழந்தைகளுக்கு தாய்பால் தராமல் பசும் பாலை கொடுத்தால் வயதான காலத்தில் அதே குழந்தை நீ வெரும் வாடகைத் தாய்தான். நம் வீட்டு பசு காமாட்சிதான் எனக்கு பாலூட்டின தாய்.. ஆகவே நீ முதியோர் இல்லம் போ என்றால் என்னாகும்?
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
31-மே-202003:38:23 IST Report Abuse
babu பூனையிடம் பாலருந்தும் நாய்க்குட்டிகள், நாயிடம் பாலருந்தும் பூனைக்குட்டிகள், கன்றுக்குட்டிகள், ஆட்டிடம் பாலருந்தும் மான்குட்டிகள் என பல வீடியோக்கள் யூடியூபில் உள்ளன. அறிந்து கொள்ளுதல் வளர நவீன ஊடகங்களையும் பார்வையிடவும்.
Rate this:
Manian - Chennai,இந்தியா
01-ஜூன்-202010:56:28 IST Report Abuse
Manianவட நாட்டில் ஒரு தாய் குரங்கு குட்டிக்கு தன் பாலை குடிக்கவிட்டாள். ஆக்ஸாஇடாசசிஇன் என்ற ககட்்டிஇ அணைக்கும் ஹார்மோன் அதிகமாகி,பால் பெருக்கால் மார்பகம் வலித்தால் அதை எந்த பெண் மிருகமும், தாய்மார்களும் விரும்புவார்கள் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. மேய்சலுக்கு போய் வந்த பசு பாலை குடிக்க கன்றை அழைக்க கத்தியதை, மனிதன் அதை கறக்க கூப்பிடுகிறது என்று சொல்லி கறப்பதை நான் அறிவேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X