முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

'கொரோனா' தொற்று கொடுத்த பயம், பலர், இன்று, தெருக்களில் முகமூடி அணிந்து நடக்கின்றனர். வெகு விரைவில், 'கொரோனா'வுக்கு, 'குட் - பை' சொல்லி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த சூழலில், துணியாலான முகமூடிகளை என்ன செய்வது?
அவ்வளவு முகமூடிகளையும் துாக்கி எறிந்தால், அவற்றை அள்ள, பல லாரி தேவைப்படும்.
இந்த சூழலில், முகமூடிகளை தொடர்ந்து பயன்படுத்த சில யோசனைகள்:
* சிலரிடம், நெருங்கி பேசினாலே வாய் நாறும். இத்தகையவர்கள் அருகில் வந்து பேச விரும்பினால், 'முகமூடி அணிந்து, தள்ளி நின்று பேசுங்கள்...' என, கூறி விடலாம்
மேலும் சிலருக்கு, பேசினாலே வாயிலிருந்து எச்சில் பூச்சொரிவது போல் தெறிக்கும். இத்தகையவர்களுக்கு, 'முகமூடியை அணிந்தால் மட்டுமே தொடர்ந்து பேசலாம்...' என, சொல்லி சமாளிக்கலாம்
* சிலருக்கு, பேசினால், வாயில் நல்ல வார்த்தைகளே வராது. மேலும் சிலர், எப்போது பேசினாலும், 'நெகடிவ்' ஆக பேசுவர். இத்தகையவர்கள் பேசுவதை தடுக்க முடியாது. அதனால், முகமூடியில் சற்று மாற்றங்களை செய்து, நம் இரு காதுகளிலும், 'ஹெட்போன்' போல் மாட்டிக் கொண்டால், கெட்ட மற்றும் எதிர்மறை வார்த்தைகளை கேட்காமல் தவிர்க்கலாம்
* சிலர், வாயை திறந்தாலே, ஓட்டையும் உடைசலுமாய் பல வண்ணங்களில் பற்கள் ஜொலிக்கும். அத்துடன் அதைப் பற்றி கவலையேபடாமல் சிரித்து, நம்மை கதிகலங்கச் செய்வர். இத்தகையவர்களிடம், முகமூடி அணிந்து பேச சொல்லி, ஓரளவுக்கு நிம்மதி அடையலாம்
* மனைவியிடம் அடிக்கடி, 'டோஸ்' வாங்கும் பாவப்பட்ட கணவர்கள், அதை குறைக்க, நைசாய் முகமூடியை மனைவி வாயில் கட்டி, 'நீ, இதில் ரொம்ப அழகாய் இருக்கே...' எனக் கூறி, அம்மணியின், 'மூடை' மாற்றலாம். ஆனால், சில சமயம், முகமூடிக்காக, கூடுதல், 'டோஸும்' கிடைக்கலாம்; ஜாக்கிரதை
மனைவியின், 'டோஸை' சீரியசாக எடுத்துக் கொள்ளாத (எடுத்துக் கொண்டால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம்) கணவர்கள், அதை சமாளிக்க, பாட்டு கேட்பது போல், 'ஹெட்போன்' முகமூடிகளை பயன்படுத்தலாம்
* சிலர், பார்த்தாலே விஷம். இவர்கள் கண் பட்ட எதுவும் உருப்படாது. மரம் கூட பட்டுப் போய் விடும். இத்தகையவர்களை சந்திக்க நேர்ந்தால், மொத்த முகமும் மறைக்கும்படியான முகமூடியை அணிந்து, தப்பி விடவும்.
முகமூடி அணியும் பழக்கத்துக்கு நம்மை அடிமையாக்கியதோடு, அதற்கு பல்வேறு பயன்பாடுகள் உண்டு என்பதையும் உணர செய்த, 'கொரோனா'வுக்கு நன்றி!

ஆர். திலீப்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் சிலகோடி மக்கள் ஊரை உறவை விட்டு தொலைதூர நகரங்களில் அல்லாடுவது இப்போதானே அரசாங்கத்துக்கே தெரிந்தது உள்ளூரில் வேலை தர யோசிக்கிறார்கள்
Rate this:
Manian - Chennai,இந்தியா
05-ஜூன்-202020:54:58 IST Report Abuse
Manianமக்கள் ஓட்டை விற்கும் வரை, கோட்டாவில் அரசியல்-அரசாங்கவாதிகள் மாமூல் வாங்கும் வரை, தகுதி இல்லாதவர்களே மாமூல் மூலம் ஆசிரியர்களாக மாறும் வரை, ஜாதீய அரசியல் ஓயாத வரை ,தொழிலாளர் சட்டங்களை மாற்றாதவரை, உள்ளூரில் வேலை என்பது கனவே திருடர்கள் கழக தொண்டர்கள் பதவியே கிடைக்கும்....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
04-ஜூன்-202012:43:54 IST Report Abuse
Visu Iyer அறிவாளிகள் முட்டாளாக்கப் பட்டு இருக்கின்றனர்...அதுவும்... அறிவில்லாத துளியும் இல்லாத ஒன்றால்...
Rate this:
Manian - Chennai,இந்தியா
05-ஜூன்-202021:01:49 IST Report Abuse
Manianதவறு. அறிவு இருந்தவன்தான்(கருணா நாயுடு, அண்ணா முதலியார் நாயக்கர் ஈவேரா)சாதாரண மக்களை ஆக்கினார்கள்....
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் சிலர், பார்த்தாலே விஷம். இவர்கள் கண் பட்ட எதுவும் உருப்படாது. மரம் கூட பட்டுப் போய் விடும் என்கிறார். இதென்ன பிரமாதம் சிலர் போன் பண்ணினாலே வந்தது வினை பத்து நாளாவது பலவிதமாய் பாடாய் படுத்தி விடும் டெலி த்ருஷ்ட்டி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X