சைக்கிள் சவாரியை மறக்காதீர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

ஜூன் 3 - உலக சைக்கிள் தினம்

உலகின், 'டாப் 5' மகிழ்ச்சிகரமான நாடுகளில் ஒன்று, நெதர்லாந்து. இந்த நாட்டில், மக்கள் தொகையை விட அதிகம் இருப்பது, சைக்கிள் தான். அந்தளவுக்கு, அவர்கள் சைக்கிள் பிரியர்கள்.
தங்களது மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் காரணமாக அவர்கள் கூறுவது, சைக்கிள் சவாரியை தான். அவர்களின், 70 சதவீத போக்குவரத்து, சைக்கிளில் தான்
* பிரிட்டன் நாட்டில், தற்போது, நோய்கள் குறைந்து, மக்கள் ஆரோக்கியமாக வாழ, தினமும், 30 நிமிடங்கள், குறைந்தது ஆறு மாதங்களுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியை பரிந்துரைக்கின்றனர், மருத்துவர்கள்
'சைக்கிள் ஓட்டும் பயிற்சியால், மருந்துகளால் வரும் பக்க விளைவுகள் குறைகிறது; உடல் ஆரோக்கியத்திற்கென செய்யும் செலவுகளும் குறைகிறது...' என்கின்றனர்
* 'உடல் எடையை குறைக்க, வாரத்தில், ஐந்து நாட்கள், 'ஜிம்' சென்று உடற்பயிற்சி செய்வதை விட, தினமும், நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு சைக்கிளில் சென்று வந்தாலே போதும்...' என்கின்றனர், டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
'சைக்கிள் சவாரி, உடலிலிருந்து கெட்ட நீரை வெளியேற்றுவதுடன், கெட்ட கொழுப்பையும் கரைத்து, உங்கள் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது...' என்று கூறுகின்றனர்
* 'உடல் ஆரோக்கியத்திற்கும், சைக்கிள் சவாரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சைக்கிள் ஓட்டுபவர்களின் ஆயுள், சைக்கிள் ஓட்டாதவர்களின் ஆயுளை விட, 30 சதவீதம் அதிகரிக்கிறது...' என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்
* உடல், மனம் இரண்டையும் புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது, சைக்கிள் பயிற்சி. சைக்கிள் சவாரி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், ஓட்டுகிறவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
* தினமும் வேலைக்கு, பஸ், கார், டூ வீலர் ஆகியவற்றில் செல்பவர்களை விட, சைக்கிளில் போவோர் தான், நாள் முழுவதும் வேலை சுமை, மனச்சுமை குறைவாக இருப்பதாக உணர்கின்றனர். மேலும், அவர்களின் வேலை திறனும் அதிகரிப்பதாக, கனடா பல்கலைக் கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்
* கால் பாதம் முதல் மூளை வரை உடலின் அனைத்து பாகங்களையும் இயக்க வைத்து, இதய துடிப்பையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது, சைக்கிள் சவாரி
* சைக்கிளை, 'பெடல்' செய்வதால், கால் மூட்டு, பலம் அடைகிறது. மற்ற எலும்புகள் வலிமை அடைகின்றன. இதனால், எலும்பு தொடர்பான நோய்கள் தவிர்க்கப்படுகின்றன
* தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆபத்துகள் குறைவாகவே இருப்பதை, பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின், 15 ஆண்டு கால ஆய்வில் கண்டறிந்துள்ளனர்
* 'இன்சோம்னியா' எனும் துாக்கமின்மை நோயை விரட்ட, சைக்கிள் பயிற்சி உதவும் என்கின்றனர்
* சைக்கிள் சவாரி சுற்றுச்சூழலுக்கும், தேக ஆரோக்கியத்திற்கும் உதவுவதால், நெதர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா மக்கள், சைக்கிளை பயன்படுத்த சம்பளத்தில் கூடுதல், 'அலவன்ஸ்' கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

கோவீ.ராஜேந்திரன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - chennai,இந்தியா
04-ஜூன்-202019:04:44 IST Report Abuse
raman நாம் முன்பு பயன்படுத்திய சைக்கிள்களை இப்போதும் எங்கும் பார்க்கலாம். ஆனால் அரசாங்கம் கொடுத்த சைக்கிள்களை வைத்திருப்பதை யாராவது இப்போது பார்க்கிறீர்களா ? அவையெல்லாம் இப்போது எங்கே போனது ?
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
31-மே-202016:08:49 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI நமது முன்னோர்களும் சைக்கிள் ஒட்டி தான் காலத்தை க(ழி)ளித்தனர். வசதி வாய்ப்புகள் வரவர நோய்கள் தான் வரும் . சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்யம் மனத்தாரோக்கியம் மற்றும் காற்று மாசு அடையாமல் இருத்தல் போன்ற எண்ணற்ற நன்மையை கருத்தில் கொள்ளோம் . உபயோகிப்போம் உடலை பேணுவோம் .
Rate this:
raman - chennai,இந்தியா
04-ஜூன்-202019:14:56 IST Report Abuse
ramanஇப்போது சைக்கிள் ஓட்டுபவர்களை மற்ற வண்டிக்காரர்கள் மதிப்பதே இல்லை. மேலே உரசிக்கொண்டே செல்வார்கள்.பல சமயங்களில் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது....
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
31-மே-202011:02:51 IST Report Abuse
Manian இப்பவாச்சும் நாங்க நல்ல சைகிளை ஏன் திருடுதோம்னு புரிஞ்சுதா? அரசாங்க எலவச சைகிள்ளு எல்லாமே வெரும் காயலாங்கடை சைக்கிளை திருப்பூர் சாயக் களிவுலே முக்கி நாங்கதானே கொடுக்குறோம். அப்ப அதையா திருடுவோம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X