இவருக்கு இப்படிப்பட்ட மனைவியா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கு, 'இரும்புத் திரை நாடு' என்ற பெயர் உண்டு. அந்த நாட்டில் நடக்கும் சின்ன விஷயம் கூட, வெளி உலகிற்கு தெரியாது. அவர்களாகவே கூறினால் தான் உண்டு.
இப்படிப்பட்ட நாட்டில், சர்வாதிகாரியான அதிபர், கிம் ஜாங் உன்னின் மனைவி பற்றிய செய்திகள் மட்டும் அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்து விடுமா என்ன... இவரைப் பற்றிய சில விஷயங்களை, தென் கொரியாவின் உளவுத் துறை நிபுணர்கள் மோப்பம் பிடித்து, வெளி உலகிற்கு கசிய விட்டுள்ளனர்.
கிம் ஜாங் உன்னின் மனைவி பெயர், ரி சோல் ஜு. இவருக்கு, 30 - 35 வயதுக்குள் இருக்கலாம். மூன்று குழந்தைகள் உள்ளனர். 2018ல், கிம் ஜாங் உன் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில், எப்போதும் சிரித்த முகத்துடன், 'போஸ்' கொடுக்கும் இந்த அழகான பெண் யார் என, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடியபோது தான், இவர், அதிபரின் மனைவி என, உறுதி செய்யப்பட்டது.
திருமணத்துக்கு முன், விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும், 'சீர் லீடர்' என்ற நடன பெண்ணாகவும், இசைக்குழுவில் பாடகியாகவும் பணியாற்றியுள்ளார், ரி சோல். இதுபற்றிய விஷயங்கள் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, திருமணம் முடிந்ததும், முதல் வேலையாக, இசைக்குழுவில் இருந்த அனைவரையும், போட்டு தள்ளிவிட்டாராம், கிம்.
ஆணாதிக்க சமூகம் நிறைந்த நாடு, வட கொரியா. பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு. ஆனாலும், ரி சோல் மட்டும், எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அழகான உடையணிந்து தான் வருவார்.
கடந்த, 2018ல், தன் மனைவியுடன் சீனாவுக்கு சுற்றுப் பயணம் செய்தார், கிம். அப்போது, ரி சோல் அணிந்த உடையையும், அவரது அழகையும் பார்த்து மயங்கிய சீன புகைப்படக் கலைஞர்கள், கிம்மை புறக்கணித்து, ரி சோல் பின்னாடியே அலைந்தனர்.
வட கொரியாவில் இதுபோல் நடந்திருந்தால், தன் மனைவியின் பின் சென்ற புகைப்படக்காரர்களை எல்லாம், கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பி வைத்திருப்பார், கிம்.
ரி சோல் பற்றிய இன்னும் பல விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. அதை தெரிந்து கொள்வதற்காக, தென் கொரிய உளவுத் துறையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202010:30:28 IST Report Abuse
தல புராணம் சீன புகைப்படக் கலைஞர்கள், கிம்மை புறக்கணித்து, ரி சோல் பின்னாடியே அலைந்தனர். - இதையே காரணமா காட்டி மனைவியையும் போட்டு தள்ளிடுவார், இல்லை கல்யாணமாவே ஆகல்லைன்னு சொல்லி தள்ளி வெச்சிடுவார்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூன்-202010:28:29 IST Report Abuse
தல புராணம் ஆணாதிக்க சமூகம் நிறைந்த நாடு, வட கொரியா. பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு. - இந்தியாவில் ??
Rate this:
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
05-ஜூன்-202002:19:19 IST Report Abuse
aryajaffnaமூர்க்க , மார்கத்தினரை விட ஆண் ஆதிக்க , காட்டு மிராண்டி சமூகம் உலகில் வேறு எங்கும் இல்லை , நோர்த் கொரியாவில் பெண்கள் முகத்தை மறைத்து முகமூடி அணிவதில்லை , உடல் முழுவதையும் மூடும் பூச்சாண்டி போல் உடை அணிவதில்லை....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-ஜூன்-202014:41:11 IST Report Abuse
Lion Drsekar நம் ஊரிலும் எத்தினை பேர் கைலாசம் போயிருக்கிறார்கள், போய்க்கொண்டும் இருக்கிறார்கள், அங்கும் இங்கும் மன்னராட்சிதானே நடக்கிறது, வாழ்க ஜனநாயக சர்வாதிகார மன்னராட்சி வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X