68 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த, மார்கரேட், 68, என்ற பெண்ணுக்கு, 1974ல் திருமணம் நடந்தது. இவரது கணவர் பெயர், நோவா அடெங்குவா, 77. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. நைஜீரியாவில் உள்ள பிரபலமான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், எந்த பயனும் இல்லை.
இதையடுத்து, சோதனை குழாய் நடைமுறை மூலம் குழந்தை பெற முயற்சித்தனர். மூன்று முறை முயற்சித்தும், தோல்வி தான் கிடைத்தது. இந்நிலையில், லாகோஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கடந்த சில ஆண்டுகளாக, சோதனை குழாய் நடைமுறை வாயிலாக, மார்கரேட் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து, சமீபத்தில், அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு குழந்தை ஆண்; மற்றொன்று பெண்.
'எனக்கு, 68 வயதானாலும், குழந்தை பெற்றுக் கொள்வதில் உறுதியாக இருந்தேன். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்தேன். இறுதியில், கடவுள் கண்ணை திறந்து விட்டார். பாட்டி வயதில் இருக்கும் நான், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருப்பதை நினைத்து, மகிழ்ச்சி அடைகிறேன்...' என்கிறார், மார்கரேட்.
ஆப்பிரிக்க நாடுகளில், மிக அதிகமான வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற பெருமை, மார்கரேட்டுக்கு கிடைத்துள்ளது.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - chennai,இந்தியா
04-ஜூன்-202015:51:10 IST Report Abuse
raman குழந்தை ஆசையால் , இந்த வயதில் பெற்றுக்கொண்டு , என்ன பயன். இவர்கள் இன்னும் சிறிது காலத்தில் மரணம் அடைந்தால் இரண்டு குழந்தைகளும் அநாதை ஆகி விடும். வேறு யாரவது இவர்களது சொத்துக்களை எடுத்துக்கொண்டு குழந்தைகளை ஏமாற்றப்போகிறார்கள்
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
31-மே-202013:52:40 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI மார்க்ரெட், முயற்சி திருவினையாக்கும் ..... என்ற பழமொழி பொய்யாகாது நிரூபித்தீர்கள். கடவுள் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒன்றே நம் தரகமந்திரமாக கொண்டால் நினைத்தது நடக்கும் . நன்றி இரா பிரேமலதா யோகேஸ்வரி கோவை
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
31-மே-202010:43:12 IST Report Abuse
Manian பெற்றோர்களை இழந்து இந்த குழந்தைகள் படப்போகும் துன்பங்களைப் பற்றி எண்ணாத சுயநலமிகள். மறபணு, மன வளர்ச்சி கோளாறுகள் வரும் சதவிகிதம் அதிகம். குழந்தைகளுடன் ஓடி ஆட விளையாட முடியுமா? ஏழைக் குழந்தையை தத்தெடுத்திருக்கலாம். பாவம் குழந்தைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X