தேவையா, 'பிளாஸ்டிக் சர்ஜரி?'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:00

முகத்தில் உள்ள உறுப்புகள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றை, 'பிளாஸ்டிக் சர்ஜரி' என்ற அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைக்கும் வழக்கம், பலரிடமும் அதிகரித்துள்ளது. நம் அண்டை நாடான, சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த வூ சியோச்சின் என்ற பெண், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து, அதனால் ஏற்பட்ட விளைவுகளை, கண்ணீருடன் அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்.
இவர், 16 ஆண்டுகளாக, தன் முகத்தில் உள்ள அனைத்து உறுப்புகளையும் மாற்றி அமைப்பதற்காக, தொடர்ந்து, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து வருகிறார். மூக்கில் மட்டும் ஆறு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு முறையும், உதட்டில் மூன்று முறையும் அறுவை சிகிச்சை செய்து, மாற்றி அமைத்துள்ளார்.
இந்த அனுபவத்தை வைத்து, பீஜிங் நகரில், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்யும், 'கிளினிக்கை'யும் துவக்கியுள்ளார். இதன் வாயிலாக கணிசமான வருமானம் வருகிறது. நினைத்தது போலவே, அழகாகவும் மாறி விட்டார். ஆனால், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்ததால், உடலில் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்பட்டு, அவதிப்பட்டு வருகிறார்.
'ஹார்மோன் தொடர்பான பிரச்னையால், புதுப் புது நோய்களுக்கு ஆளாகி விட்டேன். 'அழகு முக்கியமா... உயிர் முக்கியமா' என, யாராவது கேட்டால், 'உயிர் தான் முக்கியம்' என, சற்றும் யோசிக்காமல் கூறி விடுவேன். அந்த அளவுக்கு உயிர் பயம் வந்து விட்டது...' என, கண்ணீர் விடுகிறார்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
02-ஜூன்-202005:42:08 IST Report Abuse
Manian இவர்கள் ஹை மெயின்டினஸ்( )விலை கூடிய வாழ்வினிகள் என்பார்கள். எப்போதுமே ஏதோ குறை உள்ளது என்று நம்புவார்கள். தங்கள் அழகை எல்லோரும் ஆராதனை செய்ய வேண்டும் விரும்பும் மனோவியாதி உள்ளவர்கள்.இவர்களை மணந்தவர்கள் வாழ்வு சாக்கடை பன்றி நிலையேஉடல் வலது-இடது இரண்டு பாகங்கள் கர்ப்பத்தில் இணையும் போது 100% சரியாக இருக்க வேண்டும்,கர்பகாலத்தில் சரிசம உணவு, போலிக் ஆசிட்(ஆண்களுக்கும் கர்பதானம் செய்யு முன் இருக்கவேண்டும்)போன்ற தேவையான வைட்டமின்கள்,மன அழுத்தம் இல்லாத கர்பகாலமம் என்ற பலகாரணங்களால் சிறந்த அழகாஆன அமைப்பு ஏற்படுகிறது.மரபணுவும் முகக்கியம். ஆனால அறிவில்லாத தகப்பன் பரம்பரையில் அச்சு பொம்மைதான் வவரும்.அக அழகே அழகு
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
31-மே-202022:28:27 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் ? இயற்கையாக கடவுள் படைத்த இந்த உடம்பை செயற்கையான முறையில் மாற்றம் செய்தால் பக்கம் விளைவுகளை சந்திக்கநேரிடும். இதுவே நிதர்சனம்
Rate this:
Manian - Chennai,இந்தியா
03-ஜூன்-202003:39:57 IST Report Abuse
Manianவைடமின் டி -எலும்பு வலிமைக்கு கிடைப்பதால்,கண் போனாலும், எப்போதும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.அஷ்டாங்க யோகசாலா குரு சூரியகோடியானந்தர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X