காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
00:00

விளை நிலங்களை காட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பது பெரும் சவாலானது. இவைகளால் விவசாயிகளுக்கு ஆண்டு வருமானத்தில் 30 முதல் 50 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. வேலுார் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் உயிரியல் முறையில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் திரவத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த உயிரியல் முறையல் உருவாக்கப்பட்ட திரவத்தை விவசாய நிலங்களில் பல ஆண்டுகள் ஆய்வுக்குட்படுத்தி அந்த வயல்களில் காட்டுப்பன்றிகள் வராமல் கட்டுப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் 10 அடி இடைவெளியில் குச்சிகளை நட வேண்டும். பின் 4 அல்லது 5 துளைகள் கொண்ட 50 மில்லி புட்டியில் மூன்றிலிருந்து 5 மில்லி என்ற அளவில் உயிரியல் முறையில் உருவாக்கப்பட்ட திரவத்தை நிரப்பி அதை நுாலினால் கட்டி இரண்டு குச்சிகளுக்கிடையில் 1.5 அடி உயரத்தில் கட்டி தொங்க விட வேண்டும். இந்த முறையில் நெல், மக்காச்சோளம், சிறு தானியங்கள், பயறு வகைகள், பழப் பயிர்கள் மற்றும் கிழங்கு வகைகள் போன்ற பயிர்களை பயிர் செய்யும் நிலங்களில் பயன்படுத்தலாம்.

முள் உள்ள தாவரங்களை கொண்டு உயிர் வேலி அமைப்பதன் மூலமும் காட்டுப்பன்றிகள் வராமல் தடுக்கலாம். இந்த உயிர் வேலி அமைப்பதற்கு சீமை கருவேல், கற்றாழை போன்ற முள் உள்ள தாவரங்களை பயன்படுத்தலாம். எனவே, விவசாயிகள் தங்கள் வயல்களில் மேற்கூறிய முறையில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி நல்ல பலனை அடையலாம்.

முனைவர்.சீ.கிருஷ்ணகுமார்
தொழில்நுட்ப வல்லுனர் வேளாண் அறிவியல் நிலையம்,
மதுரை
0416 - 227 333

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X