பெண்மை என் பெருமை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
00:00

கடந்த ஏப்ரல் மாதம்; 'கொரோனா' அச்சுறுத்தலால் சென்னை - அயனாவரம் காய்கறி சந்தை இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்த மைதானம்.
குவிந்து கிடக்கும் பெரிய வெங்காயத்தில் அரை கிலோ பொறுக்கி நிமிரும் சொற்ப வினாடிகளுக்குள், பசியாறி முடிக்கிறார் ஓர் இளைஞர்.'ருசிச்சு சாப்பிடணும்னு நேரத்தை கொன்னு பழகிட்டா, நாளைக்கு பசிக்கு சாப்பிட எதுவும் கிடைக்காதுண்ணா; சம்பாதிக்கிற நேரத்துல சம்பாதிச்சிடணும்!'

என்ன சாந்தியம்மா... உங்க மூத்த மகன் பணம்தான் முக்கியம்ங்கிறாரு?

'உழைச்சு சாப்பிடணும்; மனுஷனுக்கு உழைப்புதான் அடையாளம்'னு புரிஞ்சு வைச்சிருக்கிற என் பிள்ளையை, பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா சொல்றீங்களே... நியாயமா?
சுற்றி நிற்கும் வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளை எடை போட்டு தந்தபடி, அவரவர் வாங்கியதை மிகச்சரியாக நினைவு வைத்தபடி, கணக்கு பார்த்து பணம் வாங்கி மிச்சம் கொடுத்தபடி... இடையிடையே மகன் முகக்கவசம் முறையாக அணிந்திருக்கிறானா என்பதை உறுதிப்படுத்தியபடி... தன் பெண்மையை உழைப்பால் கவுரவப்படுத்திக் கொண்டிருந்தார் சாந்தி.

என்ன படிச்சிருக்கீங்கம்மா?

ஒண்ணாவது வகுப்புக்கு போனதா ஞாபகம்; அவ்வளவுதான்!

அப்புறம் எப்படி இந்த கணக்கு வழக்கெல்லாம்?

பிறந்ததுல இருந்து அம்மா, அப்பா கூட காய்கறி கடையே கதின்னு கிடந்தேன்; அதுல கத்துக்கிட்டதுதான் இதெல்லாம்!
சாந்தி அம்மாவுக்கு வயது, 50. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில். 16 வயதில் தாய்மாமனுடன் திருமணம். மூன்று ஆண், ஒரு பெண் என நான்கு பிள்ளைகள். ஏழு ஆண்டுகளுக்கு முன் கணவர் மரணிக்க, பிள்ளைகளும், பேரனுமே வாழ்க்கை என்றிருக்கிறார்.

'எங்க அம்மா சாந்தி'ன்னு பசங்க பெருமையா பேசுறாங்களா?

எதுக்கு பேசணும்; பெத்து வளர்க்குறது பெருமை இல்ல... கடமை! என் பிள்ளைகளுக்கு அம்மாவை பிடிக்கும்; நான் அம்மாவா இருக்குறேன்; அவ்வளவுதான்!'

டிவி', துாக்கம்னு பொழுது போக்குற பெண்களைப் பார்த்தா ஏக்கமா இருக்குதா?

ஆண் சம்பாதிக்கிற காசுல பெண் வாழ்றது... வரம்; ஆணாகவும் இருந்து பெண் உழைக்கிறது... தவம். இந்த தவத்துல ஏக்கத்துக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை!

சரி... என்ன சொல்லுது கொரோனா?

'வாழ்க்கையில போராடி நாலு பிள்ளைகளை கரையேத்துன நீ, முடிஞ்சா என்னை ஜெயிச்சுப் பாரு'ன்னு சொல்லுது. 'சரி... பார்ப்போம்'னு நானும் கடையில நிற்கிறேன்; பசங்க என் கூட நிற்கிறாங்க!

ஒரு ஆசை?

நான் உள்ளிழுக்கிற கடைசி மூச்சுலேயும் காய்கறி வாசம் இருக்கணும்.

புதுப்புது அர்த்தங்கள்

*வாழ்க்கை? - அனுபவம்
*நாணயம்? - நாடகம்

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X