ஒரே வரியில் இரண்டு அலைன்மெண்ட்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2011
00:00

வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில் வரிகள் அல்லது பாராக்களை இடது, வலது, இருபக்கமும் அல்லது நடுவாக என அலைன்மெண்ட் செய்து கொள்ளலாம். ஒரு வரியை இடதுபக்கமாக அலைன்மெண்ட் செய்தால் அப்படியே தான் இருக்கும். ஒரு வரியில் சில சொற்களை இடது புறமாகவும், மற்றவற்றை வலது புறமாகவும் அலைன் செய்திட வேண்டுமென்றால் என்ன செய்திடலாம்?
அனைத்து சொற்களையும் டைப் செய்த பின்னர், எந்த சொற்கள் வலது ஓரமாக இருக்க வேண்டுமோ அவற்றின் முன்புறம் கர்சரைக் கொண்டு சென்று, பின்னர் ஸ்பேஸ் பார் மூலம் கர்சரை நகர்த்தி நகர்த்தி காலி இடைவெளி ஏற்படுத்தி இரண்டாவது தொகுதி சொற்களை நகர்த்தி வரியின் முனைக்குக் கொண்டு செல்லாம்.
எடுத்துக்காட்டாக, லெட்டர் பேட் ஒன்றைத் தயாரிக்கும் போது பெயரினை இடது புற அலைன்மெண்ட்டிலும் வீட்டு முகவரியினை, வலது புற அலைன்மெண்ட்டிலும் வேண்டு மென்றால் இது போல்தான் செயல் படுவீர்கள். இது தேவைக்குச் சரி என்றாலும் பின்னர் எடிட் செய்திடுகை யில் சொற்களிடையே, இடக் குழப்பத்தை ஏற்படுத்திச் சரியான முறையில் வரியை உருவாக்காது.
இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. முதலில் வரியின் முதல் பாதியில் இருக்க வேண்டிய சொற்களை அடித்து அப்படியே இடதுபுற அலைன் மெண்ட்டில் விட்டுவிடுங்கள். இனி அடுத்து வலது புறமாக அலைன்மெண்ட் செய்ய வேண்டிய சொற்களுக்கு வருவோம். இப்போது வரியின் வலது மூலையில் டேப் ஒன்றை உருவாக்குங்கள். இதற்கு நெட்டுவாக்கிலான ரூலர் உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் இருக்க வேண்டும். இதனைக் கொண்டு வர View மெனு சென்று Ruler என்பதைக் கிளிக் செய்திடவும். ரூலர் கிடைத்த வுடன் அதன் வலது ஓரமாகச் சென்று மவுஸால் கிளிக் செய்தால் டேப் ஒன்று கிடைக்கும்.இதனை வலது இன்டெண்ட் டேப் ஆக வைத்திட வேண்டும். டேப் அடையாளம் கிடைத்தவுடன் அதன் மீது கிளிக் செய்தால் Tab என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் Alignment என்ற பிரிவில் லெப்ட், சென்டர், ரைட், டெசிமல் மற்றும் பார் என்ற பிரிவுகள் சிறிய வட்டங்களுடன் கிடைக்கும். இதில் ரைட் என்பதில் கர்சரால் புள்ளி ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் வரியின் வலது ஓரத்தில் ஏற்படுத்திய டேப் வலது இன்டென்ட் டேப்பாக மாறி இருக்கும். இதே போன்று டேப் ஒன்றினை வரியின் இடது மூலையில் காணலாம். இது எந்த வகையான டேப்கள் நமக்குக் கிடைக்கும் எனக் காட்டுகிறது. இது ரைட் டேப் அடையாளமாகக் கிடைக்கும் வரை இதில் கிளிக் செய்திடவும். இனி முதலில் இடது அலைன்மெண்ட்டில் இருக்கவேண்டிய சொற்களை டைப் செய்த பின்னர் டேப்பைத் தட்டவும். பின் டைப் செய்திடும் சொற்கள் அனைத்தும் வலதுபக்க அலைன் மெண்ட்டில் அமைவதனைக் காணலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X