எக்ஸெல் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
எக்ஸெல் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 மே
2011
00:00

அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என விருதுநகர் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம்.
எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, எந்த அலகுகளையும் மாற்றலாம். இந்த பங்சனை அமைக்கை யில் நீங்கள் பார்முலா எதனையும் அறிந்திருக்கத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக Column B–யில் வரிசையாக அடிக் கணக்கில் டேட்டா கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இதனை மீட்டர் கணக்கில் Column இயில் கொண்டு வர ஆசைப்படுகிறீர்கள். இனி Column B–யில் டேட்டா உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும். இது B2 முதல் B8 வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் B2:B8 வரையிலான செல்களைத் தேர்ந்தெடுங் கள். அடுத்து C2:C8 தேர்ந்தெடுங்கள். இப்போது =CONVERT(B2,”ft”,”m”) என பார்முலாவினை டைப் செய்திடவும். அடுத்து Ctrl + Enter என்ற இரு கீகளையும் அழுத்தவும். இவ்வகைக் கட்டளை மூலம் பல வகையான அலகுகளை மாற்றி அமைக்கலாம். மைல் -கி.மீ, காலன் - லிட்டர் என பல கிடைக்கின்றன. பாரன்ஹீட் - செல்சியஸ் மாற்றத்திற்கான பார்முலா இப்படி இருக்கும். =CONVERT(68, “F”, “C”) செல்சியஸ் - பாரன்ஹீட் பார்முலா =CONVERT(68, “C”, “F”) என அமையும். எக்ஸெல் ஹெல்ப் மெனு சென்று மற்றவற்றிற்கான பார்முலாக்களை அமைக்கவும். உங்களிடம் பதியப் பட்டுள்ள எக்ஸெல் CONVERT பார்முலாவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸெல் தொகுப்பு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், Analysis ToolPak – னை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர் பயன்படுத்தவும்.

எக்ஸெல் தொகுப்பில் எழுத்துவகை
எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் செயல்படும்போது அவ்வப்போது நாம் எழுத்து வகையினை மாற்ற எண்ணுவோம். நமக்குப் பிடித்த அல்லது அப்போது தேவையான எழுத்து வகையினை எப்போதும் உள்ளதாக (Default Font) மாற்ற முடியாமல் ஒவ்வொரு முறையும் மாற்ற பார்மட் மெனு சென்று மாற்றுவோம். வேர்ட் தொகுப்பில் உள்ளது போல பார்மட் மெனுவில் Default Font பிரிவு இல்லாமல் இருக்கும். அப்படி என்றால் தேவைப்படும் எழுத்துவகையினை எப்போதும் வரும்படி அமைத்திட எக்செல் தொகுப்பில் வழி இல்லையா? இருக்கிறது. முதலில் Tools மெனு செல்லுங்கள். அதில் உள்ள Options என்ற இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பிறகு கிடைப்பதில் ஜெனரல் டேபை கிளிக் செய்தால் அங்கு நீங்கள் தேடியது “Standard font”. என்ற பெயரில் இருக்கும். இதில் கீழ் விரியும் பட்டியலை இயக்கி அதில் நீங்கள் விரும்பும் எழுத்துவகையினையும் அளவையும் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் அதன்பின் எக்ஸெல் இயக்கும் போது நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து வகை அனைத்து செல்களிலும் கிடைக்கும். தமிழ் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்றாலும் அதனையும் அமைத்துக் கொள்ளலாம்

டேட்டாவினைச் சுற்றி பார்டர்கள்
ஒரு செல்லில் எந்த பக்கத்திலும் வரையப்படும் கோட்டினை அதன் Border என்று சொல்கிறோம். இது செல்லைச் சுற்றியும் அல்லது பல செல்களைச் சுற்றியும் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப் பட்ட செல் அல்லது பல செல்களின் முனைகளிலும் கோடுகளை இணைக் கலாம். இதில் Borders என்னும் கட்டளை செல்களில் உள்ள தகவலின் கீழாக கோட்டினை இடாது. ஆனால் இந்த கட்டளை மூலம் செல்களின் ஓரத்தில் பார்டர்களை அமைக்கலாம். தேர்ந்தெடுக் கப்பட்ட செல்களைச் சுற்றி பார்டர்களை அமைக்கக் கீழ்க்கண்டபடி செயல் படவும். முதலில் எந்த செல்களுக்கு பார்டர்கள் அமைக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் பார்மட்டிங் டூல் பார் செல்லவும். இதில் “Borders” ஐகானை அடுத்து உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பார்டர்கள் அமைப்பதற்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் டயலாக் பாக்ஸில் உள்ள பார்டர் டேப் மீது கிளிக் செய்து அதில் பார்டர் ஆப்ஷன்ஸ், லைன் ஸ்டைல் போன்ற தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் டயலாக் பாக்ஸில் ஓகே பட்டனில் என்டர் தட்டி வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்தபடி பார்டர் லைன்கள் செல்களில் அமைக்கப் பட்டிருக்கும்.
இதே போல் பார்டர் லைன் ஸ்டைலையும் மாற்றலாம். அல்லது செல்களில் ஒவ்வொரு பக்கங்களிலும் மாறுபட்ட பார்டர் லைன்களை அமைக் கலாம். செல்களைச் சுற்றி மாறுபட்ட பார்டர் லைன்களை அமைக்கக் கீழ்க்காணும் வழி முறைகளைப் பின்பற்றவும். அமைக்கப்பட வேண்டிய அல்லது மாற்றப்பட வேண்டிய செல் அல்லது செல்களைத் தேர்ந்தெடுக்கவும். “Format Cells” டயலாக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்து அதில் பார்டர் டேப் மீது கிளிக் செய்திடவும். இதில் வேறு வேறு வண்ணங்களில் கோடுகளை அமைத் திட Color என்னும் இடத்தில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் தேவையான வண்ணத்தினைத் தேர்ந் தெடுக்கவும். பின் அந்த டயலாக் பாக்ஸில் “OK” கிளிக் செய்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த வண்ணங்களில் செல்களில் பார்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X