கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2011
00:00

கேள்வி: விண்டோஸ் 7பயன்படுத்துகிறேன். இதில் குயிக் லாஞ்ச் ஏரியா இல்லை. எப்படி உருவாக்கிக் கொண்டு வருவது?
-அ. ரத்தன், விழுப்புரம்.
பதில்: Start பட்டனில் லெப்ட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாக்ஸில், எந்த புரோகிராம் வேண்டுமோ அதன் பெயரை டைப் செய்திடவும். அதன் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Pin to Taskbar என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இது குயிக் லாஞ்ச் பார் ஏரியாவில் அமர்ந்து கொள்ளும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். இதில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள பட்டியலில், முன்பு பல நெட்டு வரிசைகள் இருக்கும். இப்போது ஒரே ஒரு நெட்டு வரிசை மட்டுமே காட்டப்படுகிறது. முன்பு போல பல நெட்டு வரிசைகள் கிடைக்க என்ன செய்திட வேண்டும்?
-இமானுவேல், புதுச்சேரி.
பதில்: Start பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Properties என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். அடுத்து Start Menu டேப்பில் Customise பட்டனில் கிளிக் ஏற்படுத்தவும். இங்கு Advanced என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். இதில் Scroll Programs என்றுள்ள இடத்தில் தரப்பட்டுள்ள செக் பாக்ஸில் கிளிக் செய்தால், அதில் உள்ள டிக் அடையாளம் நீங்கும். அடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பியபடி, ஆல் புரோகிராம்ஸ் காட்டப்படும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். My Documents போல்டரைக் கிளிக் செய்து பார்க்கையில், அதில் Today, Yesterday, Last week, A long time ago என்று காட்டப்படுகிறது. இதிலிருந்து எப்படி விடுபடுவது?
-ஆ. குமரேஷ், கோவை.
பதில்: விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், Group by என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். பின்னர் (None) என்பதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினேன். அதில் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் லைவ் மெயில் புரோகிராமினை என் இமெயில் கடிதங்களுக்குப் பயன்படுத்து கிறேன். பிரச்னை என்னவென்றால், என் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்கள் உள்ள போதிலும், இமெயில் லிங்க்கில் கிளிக் செய்தால், லிங்க் திறக்க எந்த புரோகிராமும் இல்லை என்ற பிழைச் செய்தி கிடைக்கிறது. இது ஏன்? எப்படி சரி செய்வது?
-தி.விக்னேஷ், சென்னை.
பதில்: எந்த கம்ப்யூட்டரில், மாறா நிலையில் (default) உள்ள பிரவுசர் எது என்று தேர்ந்தெடுக்கப்படவில்லையோ, அந்த கம்ப்யூட்டரில் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். ஏனென்றால், நீங்கள் மூன்று பிரவுசர்களை இன்ஸ்டால் செய்து இயக்கி வந்தாலும், இதுதான் என்னுடைய டிபால்ட் பிரவுசர் என்று செட் செய்திடாமல் இருந்திருக்கிறீர்கள். எனவே, உங்களுக்குப் பிடித்த பிரவுசரை முதலில் இயக்கவும். அப்போது இதனை உங்கள் Default Browser ஆக அமைக்கவா என்ற கேள்வியுடன் ஒரு பாக்ஸ் மெசேஜ் கிடைக்கும். யெஸ் அல்லது ஓகே கிளிக் செய்திடவும். உடனே அந்த பிரவுசர், டிபால்ட் பிரவுசராக அமைக்கப்படும். இனி இமெயில்களில், இணைய தளங்களுக்கான லிங்க்குகளில், கிளிக் செய்திடுகையில், தானாக நீங்கள் செட் செய்த பிரவுசரில் அந்த தளம் திறக்கப்படுவதனைப் பார்க்கலாம்.
டிபால்ட் பிரவுசராக மாற்றவா என்ற செய்தியுடன் பாக்ஸ் தரப்படவில்லை என்றால் என்ன செய்வது? பயர்பாக்ஸ் இயக்கவும். இங்கு Tools தேர்ந்தெடுத்து கிடைக்கும் மெனுவில் Options தேர்ந் தெடுக்கவும். தரப்படும் விண்டோவில் Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு சிஸ்டம் டிபால்ட் (System Default) என்ற பிரிவில் Check Now என்று உள்ளதைக் கிளிக் செய்து, பின்னர் Yes கிளிக் செய்து மூடவும்.
குரோம் பிரவுசரை மாறா நிலையில் அமைக்க, வலது மேல் மூலையில் உள்ள ஸ்பானர் ஐகானில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Options என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து ‘Make Google Chrome my default browser’ என்று உள்ள பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: பலப்பல வகையான விஷயங்கள் குறித்து இன்டர்நெட் வெப்சைட் இருப்பதாகத் தொடர்ந்து குறிப்புகள் தந்து வருகிறீர்கள். நான் கிராமத்தில், கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புடன், +2 படித்த பெண்களுக்காகத் தையல் வகுப்பு நடத்தி வருகிறேன். தையல் பயிற்சி எடுக்கும் வகையில் இணைய தளம் இருப்பின், அது குறித்து டிப்ஸ் தரவும்.
-சி. முருகலஷ்மி, தாயில்பட்டி.
பதில்: உங்கள் அரிய செயல் முறைக்கும், பணிக்கும் என் பாராட்டுக்கள். புதிய வகை தையல் மற்றும் எம்ப்ராய்டரி குறித்தும் இணைய தளங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று http://www.stitchguide.com/ என்ற முகவரியில் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தையல் குறித்த விடியோ படம், எடுத்துக் காட்டுகள், எப்படி தையல் அமைப்பது என்ற வழிகள் ஆகியவை காட்டப்படுவதுதான். இதனால் கண் கூடாக ஒருவர் நம் முன் தைத்துக் காட்டப்படுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால் நாம் தையல் குறித்து எளிதாக அறிந்து கொள்கிறோம். பலவகையான தையல் குறித்து பல பிரிவுகள் இதில் உள்ளன. அவற்றில் Crochetnit, Crochet, CrochetTatting, Crochet on the Double, Cross Stitch, Embroidery, Filet Crocheting, Knitting, Plastic Canvas, Quilting/Sewing and Tatting ஆகியவை அனைவரும் ஆர்வம் கொள்ளும் பிரிவுகளாகும். இவை தவிர டிப்ஸ் தரும் ஒரு பிரிவு, அனைத்து வகை தையல் குறித்தும் உதவிக் குறிப்புகளைத் தருகிறது. இந்த தளத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற வழி காட்டும் குறிப்பும் உள்ளது. கேள்வி பதில் பகுதியில் எப்படி நூலைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் அருமையாக விளக்கப்படுகிறது. நீங்கள் தையல் கலைஞராக இருந்தாலும், தையலைக் கற்றுக் கொடுப்பவராக இருந்தாலும், பயிற்சி பெறுபவராக இருந்தாலும், நிச்சயம் பல உதவிக் குறிப்புகளை வழங்கும் தளமாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

கேள்வி: மவுஸின் முனை சில நேரம் சாய்ந்த அம்புக்குறியாய் உள்ளது. சில நேரம் சிறிய கையாய் மாறுகிறது. சில நேரம் நெட்டுக் கோடாக உள்ளது. ஒவ்வொரு நேரமும் இதற்கு ஒரு தனிப் பெயர் உண்டா? இருப்பின் அவற்றைத் தெரிவிக்கவும்.
-கா. அரசகுமாரி, சிவகாசி.
பதில்: நல்லதொரு கேள்வி. மவுஸை நகர்த்தினால் நகரும் இடது புறமாகச் சற்றே சாய்ந்த அம்புக்குறி என்ன உருவமாகத் தன்னை மாற்றிக் கொண்டாலும், ஆங்கிலத்தில் அதற்கு கர்சர் (cursor) என்று தான் பெயர். இதுவே இணைய தளங்களில் ஏதேனும் தொடர்பு (a link) அருகே செல்கையில் மடக்கப்பட்ட கையாகக் காட்சி அளிக்கிறது. இந்த கர்சர், நீங்கள் ஒரு கட்டளை கொடுத்து அது நிறைவேற்றப் படுகையில், எடுத்துக்காட்டாக ஒரு புரோகிராமை அல்லது பைலை லோட் செய்திடச் சொல்கையில், அது ஹவர் கிளாஸ் (an hourglass) ஆக மாறுகிறது. வேர்ட் அல்லது இமெயில் கடிதங்களுக் கான டெக்ஸ்ட் அமைக்கையில் நெட்டுக் கோடாக (Ishaped object) பளிச் பளிச் என்று தன்னைக் காட்டுகிறது. ஆனால் எல்லா நேரமும் இதற்கு கர்சர் என்று தான் பெயர்.

கேள்வி: கீ போர்டில் ரைட் கிளிக் கீ என ஒன்று உள்ளதா? ஒரு கட்டுரையில் ரைட் கிளிக் கீ என்று சொல்லி, அதனை விளக்காமல் செயல்பாடு தரப்பட்டுள்ளது. இது எங்கே உள்ளது? ஷிப்ட் அழுத்திப் பெற வேண்டுமா? இதற்கு வேறு பெயர் உள்ளதா?
-கா. சிதம்பரம், காரைக்கால்.
பதில்: கீ போர்டில், வலது பக்கம் விண்டோ கீ மற்றும் கண்ட்ரோல் கீ ஆகியவற்றின் இடையே இது அமைந்திருக்கும். இந்த கீக்கெனத் தனியே பெயர் எதுவும் இல்லை. பின் ஏன் அதனை ரைட் கிளிக் கீ என அழைக்கிறோம்? இதனை அழுத்தினால், இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமிற்கான ரைட் மவுஸ் கீயை அழுத்தினால் என்ன மெனு கிடைக்குமோ, அது கிடைக்கும். அதனால் தான் அதனை ரைட் கிளிக் கீ என்று அழைக்கிறார்கள். மெனு ஒன்று கிடைப்பதால் சிலர் இதனை மெனு கீ எனவும் அழைக்கிறார்கள்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். இதில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள பட்டியலில், முன்பு பல நெட்டு வரிசைகள் இருக்கும். இப்போது ஒரே ஒரு நெட்டு வரிசை மட்டுமே காட்டப்படுகிறது. முன்பு போல பல நெட்டு வரிசைகள் கிடைக்க என்ன செய்திட வேண்டும்?
-இமானுவேல், புதுச்சேரி.
பதில்: Start பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Properties என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். அடுத்து Start Menu டேப்பில் Customise பட்டனில் கிளிக் ஏற்படுத்தவும். இங்கு Advanced என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். இதில் Scroll Programs என்றுள்ள இடத்தில் தரப்பட்டுள்ள செக் பாக்ஸில் கிளிக் செய்தால், அதில் உள்ள டிக் அடையாளம் நீங்கும். அடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பியபடி, ஆல் புரோகிராம்ஸ் காட்டப்படும்.

கேள்வி: மதர் போர்டில் PNP என்று சொல்கிறார்களே - அது என்ன?
-ஜி.கருணா மூர்த்தி, புதுச்சேரி.
பதில்: Plug and play என்பதை PNP எனக் கூறுகிறார்கள். கம்ப்யூட்டரின் பயாஸ், மதர்போர்ட் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவை PNP யாக இருந்தால் நமக்கு வேலைப் பளு குறையும். எடுத்துக்காட்டாக கம்ப்யூட்டரில் ஒரு புதிய ஹார்ட்வேரை நீஙகள் செருகினால் PNPஐ ஆதரிக்கிற பயாஸ், மதர்போர்ட் மற்றும் ஆப்பரேட்டிங் ஆகியவை சேர்ந்து அந்த ஹார்ட்வேரை தானாகக் கண்டு பிடித்து அதற்கு தேவையான IRQ (Interrupt Request) போன்ற செட்டிங்ஸ் கொடுத்து, டிரைவரையும் நிறுவிக் கொள்ளும்.
கம்ப்யூட்டர் பூட் ஆகும்போதெல்லாம் கம்ப்யூட்டரை முழுமையாக சோதித்து ஏதாவது புதிய ஹார்ட்வேர் சேர்ந்திருக்கிறதா என்பதை PNP கண்டு பிடிக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X