சனியின் தென் திசை ரகசியம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
00:00

சிவாலயங்களில் உள்ள நவக்கிரக மண்டபத்தில், மேற்கு நோக்கி இருக்கும், சனீஸ்வரர், தனி சன்னிதியில் மட்டும், தெற்கு நோக்கி இருப்பார். விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் வாலீஸ்வரர் கோவில் வரலாறு, இதற்கு பதில் சொல்கிறது.
இலங்கையை ஆண்ட ராவணன், சனி பகவானை சிறை பிடித்தான். வருத்தமடைந்த சனீஸ்வரர், அங்கு வந்த, நாரதரிடம் தன் குறைகளை கூறினார்.
'இன்னும் சில தினங்களில், வாலி இங்கு வருவான். அவனிடம் உன் குறைகளை கூறினால் விடுவிப்பான். அதன் பின், உன் முழு பார்வையையும், இலங்கை மீது செலுத்து...' என்றார், நாரதர்.

வானர வீரரான, வாலி, தினமும் ஆயிரம் சிவாலயங்களை வணங்குபவன். அதிலும், இவன் கிழக்கு பார்த்து அமர, மேற்கு பார்த்து சிவன் வீற்றிருக்கும் சிவாலயங்களை மட்டும் வணங்குவான். காரணம், மேற்கு பார்த்த சிவாலய வழிபாடு என்பது, ஆயிரம் கிழக்கு பார்த்த சிவாலயங்களை வழிபட்டதற்கு சமம்.
இவன் செல்லும் இடங்களில் மேற்கு பார்த்த சிவாலயம் இல்லை என்றால், இவனே லிங்கம் அமைத்து வழிபாடு செய்வான். அவ்வாறு அமைக்கப்பட்டதே, வாலீஸ்வரர் கோவில். வாலி வணங்கியதால், சுவாமிக்கு, வாலீஸ்வரர் என, பெயர் ஏற்பட்டது.
வாலியுடன் யாராவது போர் செய்தால், எதிரியின் பலத்தில் பாதி இவனுக்கு வந்துவிடும். இவ்வளவு பலமுள்ள வாலியை, எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நினைத்தான், ராவணன்.
ஒருமுறை, மேற்கு பார்த்து சிவலிங்கம் அமைத்து, சிவ பூஜையில் இருந்தான், வாலி. அப்போது, வாலியை வதம் செய்ய வந்தான், ராவணன்.
தன் ஞான திருஷ்டியால் அறிந்த வாலி, ராவணனின் பலத்தில் பாதியை பெற்றான். தன் வாலால் அவனை கட்டி, தன் மகன், அங்கதன் ஆடும் ஊஞ்சலின் மேல், பொம்மை போல கட்டி தொங்க விட்டான்.
சிக்கிக் கொண்ட ராவணன், அங்கு வந்த வாலியின் மனைவி தாராவிடம், 'தாயே, உன் கணவன் வாலியிடம், என்னை விடுவிக்க சொல். அதற்கு பரிசாக, அவன் கண்ணுக்கு எட்டிய துாரம் உள்ள நிலப்பரப்பையும், வைரமும், தங்கமும் மூட்டை மூட்டையாக தந்து விடுகிறேன்...' என, கெஞ்சினான்.
வாலியும், ராவணனை விடுவித்து, 'நீ, என் விருந்தினராக அரண்மனையில் தங்க வேண்டும்...' என்றான்.
அப்படி தங்கிய ராவணனிடம், சனி பகவானை விடுவிக்க சொன்னான், வாலி.
'தெற்கில் உள்ள இலங்கையை நோக்கி உன் பார்வை இருந்து, ராவணனுக்கு தொந்தரவு கொடுத்து, அவனையும், அவனது நாட்டையும் அழித்து விடட்டும்...' என்றான்.
இதன் அடிப்படையில், சிவாலயங்களில் தென் திசை நோக்கி, சனீஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். கோலியனுாரில், தென் திசை நோக்கி உள்ளார்.
இங்குள்ள பெரியநாயகி அம்மனை வணங்கினால், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
விழுப்புரம் - புதுச்சேரி சாலையில், 7 கி.மீ., துாரத்தில், கோலியனுார் உள்ளது.

தி. செல்லப்பா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
19-ஜூன்-202015:55:19 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI வாலீஸ்வரர் விளக்கம் தெளிவாக இருந்தது . சனீஸ்வரனை விடுவிக்க வாலி செய்த நற்செயல்களையும் ravanan idamiruthu balam petrathaum arinthukonden then thesai nooki
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
15-ஜூன்-202001:21:14 IST Report Abuse
Manian ஒரு பெரியவர் சொன்ன விளக்கம். தென் திசைன்னா சாவு, சுடு காடு, அங்கே பேய் பிசாசு இருக்கும்னு பயன். அதனாலேதான் இதுவரை எவனுமே சனி கடவுள் சிலையை திருடி விக்கலை. சனிக்கே எங்கே ஆஸ்திரேலிய பொருட்சாலைக்கு போகணுமேன்னு பயம் இருந்தா, அப்பவே தூரதிருஷ்டி மூலம் இந்த சிலை திருடுங்களை நெனைச்சு பயம் இருந்ததுன்னு புரிஞ்சுகிடனும்னாரு. அனுபவத்தை எப்படி இருக்காதுன்னு சொல்ல முடியும்.?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X