இது உங்கள் இடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
00:00

பாவத்தில் விழாதீர்!
என் பால்ய நண்பர் ஒருவரை, சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்; இப்போது, தங்க பிரேஸ்லெட், செயின் என, பந்தாவாக இருந்தார்.
'வாழ்வில் எப்படி முன்னேறினாய்...' என கேட்டதற்கு, அவர் கூறிய பதில், அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
'மச்சி... ஏகப்பட்ட சொத்துகளோட, ஒரு ஊனமுற்ற பெண் சம்பந்தம் வந்தது. நாம கஷ்டப்பட்டு முன்னேறுவது சிரமம். அதனால, நெட்டையோ, குட்டையோ திருமணம் பண்ணிக்கிட்டேன்; தவிர, குறையே இல்லாத ஒரு பொண்ண, சின்ன வீடா, 'செட்' பண்ணிட்டேன்...' என்றார்.

'நீயெல்லாம் மனுஷனா...' என, நாக்கை பிடுங்கி கொள்வது போல, திட்டிவிட்டு வந்தேன்.
நண்பர்களே... வசதியான வாழ்க்கைக்காக, ஊனமுற்ற பெண்ணின் வாழ்கையில் விளையாடாதீர். பெண் பாவம் பொல்லாதது; அதுவும், ஊனமுற்ற பெண்ணின் பாவம் அதை விட கொடுமையானது.
பணத்துக்காக மணம் முடிப்பதே தவறு; அதிலும் துரோகம் வேறு. உங்களுக்கெல்லாம் மீசை எதற்கு... போய் சேலையை கட்டிக் கொள்ளுங்கள்.
— ஜி. செல்லத்துரை, மதுரை.

'சீப்'பான, 'மார்க்கெட்டிங்' தேவையா...
சமீபத்தில், 'டிவி'யில், டீத்துாள் விளம்பரம் ஒன்று பார்த்தேன். அதில், நாயகன், தன் தாயிடம், ஒரு இளம்பெண்ணை காட்டி, 'லிவிங் டுகெதர்' - நாங்க இருவரும் ஒன்றாக வாழ்வதாகக் கூறி, அறிமுகப்படுத்துவான். இருவரும் சேர்ந்து வாழ விரும்பி, தாயிடம் சம்மதம் கேட்க, அதிர்ச்சியடைகிறார், தாய்.
அதன்பின், அந்த இளம்பெண், தேநீர் கொடுத்து, மனதை மாற்றி சம்மதிக்க வைப்பது போல் இருக்கிறது.
இந்த விளம்பரத்தில், தாலி கட்டாமல் ஒன்றிணைந்து வாழ்வது தவறில்லை என, கூற வருகின்றனரா அல்லது இன்றைய தலைமுறையினருக்கு, இந்த வாழ்க்கை வாழலாம் என, உணர்த்த வருகின்றனரா...
எது எப்படி இருந்தாலும், இந்த அணுகுமுறை மிகப்பெரிய தவறு.
ஏற்கனவே, கலாசாரம், நாகரிகம் என்ற பெயரில், பெண்களுக்கு எதிராக கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற ஒரு விளம்பரத்தை, பெரிய நிறுவனம், 'மார்க்கெட்டிங்' செய்வது மிகப்பெரிய குற்றமாகும்.
இந்த விளம்பரத்தை பார்த்து, இளைய தலைமுறையினர், இந்த வாழ்க்கை முறை தவறில்லை என்ற முடிவுக்கு வரக்கூடும் அல்லவா...
'மார்க்கெட்டிங்' என்பது, உறவு, நட்பு மற்றும் நம் நாட்டின் உயர்வை மேம்படுத்துவதாக இருக்கட்டும்.
வெ. ராம்குமார், வேலுார்.

பொழுதுபோக்கே மூலதனம்!
பட்டப் படிப்பை முடித்த நண்பரின் மகனுக்கு, சரியான வேலை இல்லை. வீட்டில், எப்போதும், 'ஸ்மார்ட் போனில்' பொழுதை போக்கிக் கொண்டிருந்தான்.
நண்பருடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு, 'மொபைல் போனில், 'வாட்ஸ் - ஆப், பேஸ் புக் ஓப்பன்' செய்து, அதை பயன்படுத்துவது எப்படி, புகைப்படங்களை, 'அப்லோட்' செய்வது எப்படி...' என, சொல்லிக் கொடுத்து வரச் சொன்னார்.
அன்று முதல், அதையே தொழிலாக செய்ததால், இன்று, பையன் ரொம்ப, 'பிசி!' மொபைல் போன் கடைகளில், இவன் போன் எண்ணை, 'வால் பேப்பர்' ஆக ஒட்டி, 'போன் வாங்குபவர்களுக்கு உதவி...' என, விளம்பரம் செய்தனர். இதற்கு, ஏக வரவேற்பு.
இதற்காக, கடையை வாடகைக்கு எடுக்கவில்லை; பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை, அவன்.
அடுத்த கட்டமாக, அவர்கள் ஏரியாவில் உள்ளவர்களுக்கு, 'ஆன்லைனில்' மின்சாரம் மற்றும் போன் கட்டணம் செலுத்துவது, ரயில் - பஸ் டிக்கெட் முன்பதிவு போன்றவற்றை செய்து கொடுத்து, சிறு தொகையை, கமிஷனாக பெற்றுக் கொள்கிறான்.
தன்னுடைய பொழுதுபோக்கையே மூலதனமாக்கி சம்பாதிக்கும், நண்பரின் மகனை பாராட்டினேன்.
ப.காளிதாசன், நீர்விளங்குளம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
18-ஜூன்-202020:57:46 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI பொழுதை போக்குவதற்கு இளைஞர்கள் மொபைல் உபயோகிக்கிறார்கள். இந்த இளைஞர் சம்பாதிக்க வேண்டிய யுக்திகளை தெரிந்து வைத்துள்ளார்
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
18-ஜூன்-202016:27:21 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI Most of the advertisements like chocolates icecreams and biscuits make the viewers to buy. They use many tecchniques to sell their product. But they never realize the usage the the draw back of the same. Many illiterates follow foolishly whatever they do in the ad. The advertisement companies should remember the moral values when they write the for it.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
18-ஜூன்-202016:15:36 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI எப்படியெல்லாம் பெண்களை ஏமாற்றுகிறார்கள் ? உடல் ஊனம் என்கிற ஒரு வார்த்தையை வைத்து வாழ்க்கை கொடுக்கிறேன் என்ற பெயரில் வார்த்தைக்கு வாழ்கை கொடுத்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்தும் ஆண்களை என்னவென்று சொல்வது. துரோகம் இழைக்காதீர் நிம்மதி இல்லாமல் அலைவீர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X