அந்துமணி பதில்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
00:00

ம.சரஸ்வதி, சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில், ரஜினி - கமல் இணைந்து போட்டியிட்டால், தேர்தல் களம் எப்படி இருக்கும்?
இணைந்து போட்டியிடுவதாக கனவு வேண்டுமானால் காணலாம்; ஆனால், நிஜத்தில் அது ஒரு போதும் நிறைவேறாது!

பி.கவிதா, சிதம்பரம்:'புரோ' என்ற வார்த்தை இப்போது, அதிக பயன்பாட்டில் உள்ளதே... அதன் பொருள் என்ன?
'பிரதர்' - சகோதரன் என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமே, 'புரோ!' மொபைலில், எஸ்.எம்.எஸ்., வந்ததிலிருந்து, ஆங்கில சொற்கள் எல்லாம், இப்படி சுருங்கி விட்டன!

* பா.ஜெயக்குமார், வந்தவாசி: சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?
'கொரோனா' கற்றுக் கொடுத்து விட்டதே! சேமிப்பு பழக்கம் இல்லாத மாத சம்பளக்காரர்களுக்கும், தினக் கூலிகளுக்கும், அதுவும் தினக் கூலியில், உ.பா.,வுக்கு செலவிடுபவர்களுக்கும் நல்ல பாடம் கற்றுக் கொடுத்து விட்டதே!

* வி.பி.அழகுசுந்தரம், கோவை: ஸ்டாலின் முதல்வரானால், மதுவிலக்கை அமல்படுத்தி விடுவாரா?
தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கைப் பற்றி பேசினாலே, அவருக்கு இருக்கும் வாய்ப்புகள் குறைந்து விடும். தமிழர்கள் அவ்வளவு துாரம் மதுவுக்கு அடிமைகளாகி விட்டனர். எந்த அரசியல்வாதியாலும், தமிழகத்தில் இனி மதுவை ஒழிக்க முடியாது!

தி.திருமலைசாமி, சென்னை: யாராவது பிச்சை கேட்டால், கொடுக்காமல் என்னால் இருக்க முடிவதில்லை; நண்பர்கள் திட்டுகின்றனர். என்ன செய்வது?
பாவம் பிச்சைக்காரர்கள்; சோத்துக்காகத் தானே கை நீட்டுகின்றனர்... சொத்து சேர்க்க அல்லவே! நிறுத்தாமல் கொடுங்கள்! நண்பர்களிடம், 'போன ஜென்மத்தில் இவர்களிடம் வாங்கிய கடனை அடைக்கிறேன்...' எனக் கூறுங்கள்.

அப்துல், திருச்சி: என் நண்பனின் மகனுக்கு, படிப்பு வரவில்லை என்பதற்காக, சொந்த தொழில் வைத்து கொடுத்துள்ளனர். இது சரியான அணுகுமுறையா?
சரியானது தான்! படிப்பில் முக்கியத்துவம் காட்டாதவர்கள், ௪௦ ஆண்டுகளில், ௧,௦௦௦ கோடி ரூபாய்க்கு அதிபதியாகி உள்ளனர், சொந்த தொழில் மூலம்... இவரைத் தவிர, பல ஓட்டல் முதலாளிகளையும் நகைக்கடை அதிபர்களான, பல கோடீஸ்வரர்களையும் உதாரணம் காட்டலாம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X