திண்ணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
00:00

எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: 'ஆனந்த விகடன்' இதழுக்கு, ஆண்டு சந்தா, ஒரு ரூபாய். ஒருவர், மூன்று சந்தாக்களை சேர்த்தால், ஒரு பரிசு. ஆறு சேர்த்தால், இன்னொரு பரிசு.
எப்படியாவது பத்திரிகையை, தமிழ் தெரிந்தவர்கள் கவனத்துக்கு எடுத்து வரவேண்டும். இலக்கிய ஆர்வம் முக்கியம் தான்; அதேசமயம், இனாம் ஆர்வம் உடனடியாக பலனளிக்கக் கூடியது என்று, தெரிந்து கொண்டார், ஆனந்த விகடன் ஆசிரியர், வாசன்.

இதன் விஸ்தரிப்பாக அவர், ஆனந்த விகடன் இதழில் கொண்டு வந்தது தான், பகுத்தறிவு போட்டி. பத்திரிகைக்கு, 'பளிச்'சென்று அட்டைப்படம் போட ஆரம்பித்தார். உள் விஷயங்களை எளிய தமிழில், சுவாரஸ்யமாக அமைத்தார்.
தலையங்கம், செய்தி துணுக்குகள், கதை, கட்டுரை, மொழி பெயர்ப்பு, பாலர் மலர், பெண்கள் மலர் என, இப்படியெல்லாம் பகுதிகள் வகுத்து வைத்தார்.
திவ்ய பிரபந்தத்தை எளிய தமிழில் எழுத வைத்து, வெளியிட்டார். மகாபாரதத்தை, 'மகா பாரத கதைகள்' என்று, ஒவ்வொரு வாரமும், ஒரு காட்சியை அட்டைப் படமாக போட்டு, தொடர் கட்டுரையாக வெளியிட்டார். (இதற்குள் ஆனந்த விகடன் இதழ், வார பத்திரிகையாகி விட்டது.) தொடர் கதைகளும் வெளியிடலானார்.
பொது ஜன வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என, அன்றாட பிரச்னைகளைப் பற்றி, 'ஹாஸ்ய' கட்டுரைகள் வெளியிட்டார். பிரமுகர்களின் படங்களை, 'காரிகேச்சர்' ஆக போட்டார். பத்திரிகையை, வாரத்துக்கு வாரம் புதுமை தோன்றும்படி செய்து கொண்டிருந்தார்.
திறமையான இளைஞர்களை சேர்த்து, அவர்களுக்கு நிறைய சந்தர்பங்கள் அளித்தார். வெகு சீக்கிரத்தில், தமிழர்களுக்கு, கல்கி, மாலி, மார்கன், சேகர், தேவன், சதாசிவம் என, பல பெயர்கள் பழக்கப்பட்டு விட்டன.
திறமையை கண்டுகொள்ளும் திறமைமிக்கவர். இன்னொரு உதாரணம்... அவர் ஒரு ஆங்கில பத்திரிகை கூட நடத்தினார் என்பது, அனேகம் பேருக்கு தெரிந்திருக்காது. அவர் நடத்திய, 'மெரி மேகசீனி'லும் ஒரு சிறுகதை போட்டி. அந்தப் போட்டியில், வாசனால் பரிசளிக்கப்பட்டவர், ஆர்.கே.நாராயணன்.

முல்லை சத்தி எழுதிய, 'அண்ணாவும் தம்பியரும்' நுாலிலிருந்து: 'கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்று, நானும், கருணாநிதியும், ஆறு மாத சிறை தண்டனையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். இருவருக்கும், பக்கத்து பக்கத்து அறை. இரவில், உறக்கம் வரும் வரையில், அவரவர் அறையில் இருந்தபடியே, உரக்க பேசிக் கொண்டிருப்போம்.
'வாழ்க்கையே இருண்டு விட்டது; இனி, வையகத்தில் வாழவே தேவை இல்லை...' என்ற பிரமை எனக்கு.
அதன் காரணத்தையும், கருணாநிதி அறிவார்.
அதிகாலை, 2:00 மணி அடித்தது. என் இமைகள் மூட மறுத்தன. மனதில் வேதனைத் தீ கொழுந்துவிட்டு எரியும்போது, எப்படி இமைகள் மூடும்?
அப்போது, கடியாரம், (இரவு பாரா சுற்றும் வார்டரை இவ்வாறு அழைப்பர்) என் அறையில் எட்டிப் பார்த்து, 'என்ன சார்... இன்னும் துாங்கலையா... ஐயா, (கருணாநிதி) கூட இன்னும் துாங்கலை... ஏன் இப்படி இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஐயா, நீங்கள் துாங்கிட்டீங்களான்னு, என்னை பார்க்கச் சொன்னார். உங்களுக்குள் ஏதாவது கோபமா... சண்டையா...' என்றார்.
என்னால் பேச முடியவில்லை.
ஒரு சிகரெட் தாளில், 'எனக்கும், 'அவளு'க்கும் இருந்த உறவை நினைத்து... அவளின் நினைவையே, என் கண்ணீரால் அழித்துக் கொண்டிருக்கிறேன்...' என்று எழுதி அனுப்பினேன்.
அதே தாளில், 'ஜூலியட்டுக்காக, ரோமியோவும்; லைலாவுக்காக, கயசும்; பூங்கோதைக்காக, பொன்முடியும் அழுவதில் அர்த்தம் உண்டு. நீங்கள் அழுவதில்...' என்று எழுதி அனுப்பினார், கருணாநிதி.
அந்த வாசகங்கள், என் கவலையை, கண்ணீரை, வேதனையை மட்டும் போக்கவில்லை. பொருளில்லாத ஒரு நினைவையும் போக்கடித்தது!

நடுத்தெரு நாராயணன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
19-ஜூன்-202016:06:22 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI பத்திரிகைகள் பழமையில் புதுமை காண்பதைப்போல எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று பல் வேறு வழிமுறைகளை கையாண்ட விதம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . தரம் இருந்தால் இலவசம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று உணர்த்தியது.
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
14-ஜூன்-202020:53:02 IST Report Abuse
கதிரழகன், SSLC கல்லக்குடி போராட்டம் மாதிரி ஒரு அநியாயம் கெடையாது. சிமிண்டு தொழிற்சாலை சுண்ணாம்புக்கல் இருக்கிற இடத்துலதான் கட்டணும். அது ஒரு பொட்டக்காடு, வெள்ளாமை விவசாயம் ஆடு மாடு மேயக்கூட லாயக்கில்லாத இடம். அந்த பொட்டக்காட்டுல கைக்காசை முதலீடு செஞ்சு ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாக்கினான் டால்மியா கம்பெனி காரன். அந்த சனம் தங்க அவனேஒரு குடியிருப்புக்கு கட்டினான். அதுக்கு பேர் டால்மியாபுரம் ன்னு வெச்சாம். வந்தானுவ இந்த திமுக போராளிகள். தமிழ் நாட்டுல வட இந்தியன் பேரா உடன் பிறப்பே பொங்கி எழு இந்த மாதிரி தொழில் முதலீடு எல்லாத்தையும் துரத்தி அடிச்சு, லஞ்சம் வாங்கி நாட்டையே கெடுத்து குட்டி சுவராக்கி ... முதலீடு ஒன்னும் கெடையாது பட்டினி கிடந்து சாவுங்க .
Rate this:
Manian - Chennai,இந்தியா
15-ஜூன்-202001:27:44 IST Report Abuse
Manianபட்டினிலே சாவரதும் "பகுத்தறிவு காட்டுமிராண்டிகள் மரபே" என்னு ஒரு கவிதையும் பெரியாரு எளுதலையேன்னு வீரமணி ஏக்கப்படுதாரே அண்ணாட்சி கதிருநாட்டுக்கு டால்மியாவைவிட நட்டம் அதிகமில்லையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X