இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
00:00

இனி, 'ஹாலிவுட்'டுக்கு போக வேண்டாம்!
கமல் நடித்து வரும், இந்தியன்- 2, மணிரத்னம் இயக்கி வரும், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட, 50 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த படங்களின், 'கிராபிக்ஸ்' பணிகளுக்காக, 'ஹாலிவுட்' செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஹிந்தி நடிகர், அஜய்தேவ்கன், மும்பையிலுள்ள, தன், வி.எப்.எக்ஸ்., நிறுவனத்தில், 'ஹாலிவுட்' தொழில் நுட்பத்தில், 'கிராபிக்ஸ்' பணிகள் செய்யப்பட்டு வருவதாக, அழைப்பு விடுத்தார். அதையடுத்து கமலும், மணிரத்னமும், 'ஹாலிவுட்' பயணத்தை நிறுத்தி, மும்பைக்கு சென்று, இந்தியன்- - 2 மற்றும் பொன்னியின் செல்வன் படங்களின், 'கிராபிக்ஸ்' பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

— சினிமா பொன்னையா

ரசிகர்களை பதற வைத்த, நந்திதா!
இப்போது வரை, சினிமாவில், உடம்பை போர்த்தியபடி நடித்து, தன் குடும்ப, 'இமேஜை' கட்டிக்காத்து வருகிறார், அட்டகத்தி, நந்திதா. இந்நிலையில், 'வீட்டில், நீங்கள் எப்படி இருப்பீர்கள்...' என்று, 'சோஷியல் மீடியா'வில், சில ரசிகர்கள், அம்மணியிடம், கேட்டுள்ளனர்.
உடனே, எக்குத்தப்பான குட்டைப் பாவாடை மற்றும் டவுசர் அணிந்த புகைப்படங்களை, அவர்களின் பார்வைக்கு வெளியிட்டு, பதற வைத்து விட்டார். அதோடு, 'சினிமாவில் தான், நான் அப்படி. வீட்டில் எந்நேரமும் குட்டை பாவாடை, டவுசர் தான், என் பேவரிட்...' என்கிறார். உள்ளே பார்த்தால் உடைசல்; வெளியே பார்த்தால், டம்பம்!
— எலீசா

சாப்பாட்டு பிரியை, ரகுல்பிரீத் சிங்!
நடிகை ரகுல்பிரீத் சிங், மிகப்பெரிய சாப்பாட்டு பிரியை. எந்த, 'அவுட்டோ'ருக்கு சென்றாலும், அங்குள்ள பிரபல ஓட்டல்களுக்கு சென்று, அவர்களின், 'ஸ்பெஷல்' அயிட்டங்களை ருசி பார்ப்பது, அவரது வழக்கம். அதேபோல், வெளிநாடுகளுக்கு செல்லும் போது, ருசியான உணவுகள் கிடைக்கும் ஓட்டல்களிலேயே தங்கியிருந்து, வாரக்கணக்கில் உண்டு மகிழ்கிறார்.
'உலகம் முழுக்க சென்று, அந்தந்த நாடுகளின் உணவுகளை ருசிக்க வேண்டும் என்பது தான், என் எதிர்கால பெருங்கனவு...' என்கிறார்.தன்னை ஒளித்து, ஒரு வஞ்சனை இல்லை!
— எலீசா

வில்லனை வெறுக்கும், அர்ஜுன்!
கடல் படத்தில், வில்லனாக நடித்த, அர்ஜுனை, சில இயக்குனர்கள், மீண்டும் வில்லனாக நடிக்க அழைத்தபோது, அதை ஏற்க மறுத்தார். காரணம், 'வில்லனாக என்னை திரையில் பார்ப்பது, ரசிகர்களுக்கு வேண்டுமானால் பிடித்திருக்கலாம். ஆனால், நீண்ட காலமாக, 'ஹீரோ'வாகவே நடித்த என்னால், வில்லனாக பார்க்க பிடிக்கவில்லை...' என்றார்.
இதையடுத்து, 'அடுத்த, 'ஆப்ஷன்' ஆக, போலீஸ் வேடத்தில் நடிக்கிறீர்களா...' என்று, இயக்குனர்கள் கேட்டால், 'தொடர்ந்து, காக்கி சட்டை நாயகனாக நடித்து, அதுவும் சலித்து விட்டது. அதனால், மாறுபட்ட வேடங்களில் நடிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறேன்...' என்கிறார், அர்ஜுன். இதனால், அடுத்து என்ன வேடம் கொடுப்பது என்று தலையை பிய்த்துக் கொள்கின்றனர், இயக்குனர்கள்.
— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!
சுள்ளான் நடிகர் நடித்த முதல் படத்தில் அறிமுகமான, அந்த நடிகை, மீண்டும் சினிமாவில் கோலோச்ச வாய்ப்பு கேட்டு வந்தார். ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், மறுபடியும் சுள்ளானிடமே தஞ்சமடைந்துள்ள மேற்படி நடிகை, தாங்கள் இணைந்து நடித்த, முதல் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு நச்சரித்து.
அப்படி இல்லையேல், வேறொரு படத்தில் தனக்கு மீண்டும் கதாநாயகி வாய்ப்பு கொடுத்து, சினிமாவில், 'ரீ - என்ட்ரி' கொடுத்து உதவுமாறு, அவரை துரத்தி வருகிறார். ஆனால் சுள்ளானோ, அம்மணி, இப்போது முத்தின கத்தரிக்காய் ஆகி விட்டதால், 'டூயட்' பாடும் வேடத்திற்கு, 'ரெகமண்ட்' செய்வது எப்படி என்று புரியாமல், தொடர்ந்து, 'டேக்கா' கொடுத்து வருகிறார்.
'நம்ம பியூட்டி பார்லர் ஓனர் பொண்ணு, ெஷரீன், 'மாடலிங்' செய்யப் போவதாக, மும்பைக்கு போனாங்க இல்லையா... அங்கு, 'சான்ஸ்' இல்லாததால், திரும்பவும் இங்கேயே வந்துட்டாங்க. இங்கு, பியூட்டி பார்லரின் கிளை ஒன்றை திறந்து, அதற்கு, தன்னை முதலாளியாக்க சொல்லி வற்புறுத்திகிட்டு இருக்கு. ஆனா, ஓனர், அதுக்கு பிடி கொடுக்கவே இல்லை...' என்று, பேசிக் கொண்டனர், ஊழியர்கள் இருவர்.

சினி துளிகள்!
* சினிமா வாய்ப்புகளுக்காக, பெங்களூரிலிருந்து வந்து, சென்னையில் முகாமிட்டு உள்ளார், நடிகை ஷெரீன்.

அவ்ளோதான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X