தேடி வரும் தெய்வம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
00:00

'ஈசன் அறியும் ராப்பகலும் தன்னைப் பாசத்துடன் வைத்து பரிவு செய்வார்களை...' என்பார், திருமூலர்.
ஆம்... அடியார்களை பற்றி தெய்வத்திற்கு தெரியும். எதை, எப்போது, எங்கு, எப்படி சேர்க்க வேண்டும் என்பது, இறைவனுக்கு தெரியும். அது புரியாமல், முட்டி, மோதி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புரிந்தால், தெய்வம் நம்மை தேடி வரும்; அருள் தரும். அதை விளக்கும் நிகழ்வு இது...
செல்லும் இடமெல்லாம் தெய்வ நாமங்களை சொல்லி, நாம சங்கீர்த்தனம் பாடி, மக்களை நல்வழிப்படுத்தி வந்தார், சுவாமிகள் ஒருவர். அவர், எங்கு போனாலும் அடியார் கூட்டம் உருவானது.

நாம சங்கீர்த்தனம் பாடி, சுவாமிகள் வரும்போது, அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட, வெண்சாமரம், வெண்கொற்றக்குடை, தங்கச்செங்கோல், தீபம், விசிறி ஆகியவைகளை ஏந்தி, சுவாமிகளை உபசரிப்பர்.
நாம சங்கீர்த்தனத்தில் தலைசிறந்த சுவாமிகளுக்காக, செல்வந்தர்களும், அரச குடும்பத்தாரும், கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், பெரும் பொருள் செலவில், ஸ்ரீராதாகிருஷ்ண சுவாமி மடத்தை நிறுவினர். மருதாநல்லுார் எனும் அத்திருத்தலத்திலேயே இருந்தார், சுவாமிகள்.
ஒருநாள், ஸ்ரீமடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார், சுவாமிகள். அப்போது ஸ்ரீமடத்து வாசலில், சகல வாத்திய கோஷங்கள் கேட்டன.
ஏராளமானோர் சுற்றி வர, வேத கோஷங்கள் முழங்க, ஓர் அழகான வெள்ளி பல்லக்கு, ஸ்ரீமடத்து வாசலில் வந்து இறங்கியது. அதிலிருந்து பல விக்கிரகங்களை சமர்ப்பித்து, சுவாமிகளை நமஸ்கரித்து செல்லத் துவங்கினர், ராஜ குடும்பத்தினர்.
சீதை, ராமர், லட்சுமணர், பரதர், சத்ருகனர் மற்றும் ஆஞ்சநேயர் சகிதமான விக்கிரகங்கள் மிகுந்த அழகுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, ஒளி வீசிக்கொண்டிருந்தன.
அரண்மனையில், வழிபாட்டிற்காக அவ்விக்கிரகங்களை வார்த்திருந்தார், சரபோஜி மன்னர். ஆனால், அவரின் கனவில், 'மன்னா... நாங்கள் இருக்க வேண்டிய இடம், மருதாநல்லுார் ஸ்ரீராதாகிருஷ்ண மடம். ஆகையால் எம்மை எடுத்து போய் அங்கே சேர்த்து விடு...' என, உத்தரவிட்டார், ராமச்சந்திர மூர்த்தி.
இத்தகவல்களை எல்லாம் விரிவாக சொன்ன ராஜ குடும்பத்தினர், 'சுவாமி... அதன் காரணமாகவே, இவற்றை இங்கே எடுத்து வந்து, தங்களிடம் சமர்ப்பித்தோம். தயவுசெய்து ஏற்று, அருள் புரியுங்கள்...' என, வேண்டினர்.
'ஆகா... பரம்பொருள் தான் இருக்க, இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததா...' என்று சொல்லி, ஆனந்தப்பட்டார்; சகலவிதமான பூஜைகளும் செய்து, அவ்விக்கிரகங்களை ஸ்ரீமடத்திலேயே ஸ்தாபித்தார்.
அவர் தான், மருதாநல்லுார், ஸ்ரீசத்குரு சுவாமிகள். நாம சங்கீர்த்தனம், பஜனை சம்பிரதாயம் என்று சொல்கிறோமல்லவா, அதற்கு உயிர் அளித்தவர்கள்; மக்களிடையே அதை பரப்பியவர்கள்.
காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த, ஸ்ரீபகவந்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருவிசநல்லுார் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் மற்றும் மருதாநல்லுார் ஸ்ரீசத்குரு சுவாமிகள் ஆகியோர் தான்.
தெய்வ நாமங்களை மனதார சொல்வோம்; தீமைகள் எல்லாம் விலகிப் போகும்!

பி. என். பரசுராமன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
19-ஜூன்-202016:23:22 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் எல்லா முயற்சியும் பக்தியும் ஒரு நாளும் வீண்போகாது. இறைவன் எல்லா இடத்தில் இருந்தாலும் நாமங்களை உச்சரிக்கும் போது ஏற்படும் அனுபவமே தனி அனுபவம்
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
16-ஜூன்-202021:14:26 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI தெய்வ நாமங்களுக்கு அளவு கடந்த மகிமை உண்டு என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கம் அளித்து பரியவைத்தீர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X