'ஆன்லைன் ஷாப்பிங்' செய்பவரா நீங்கள்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
00:00

இரவோ, பகலோ, மழையோ, வெயிலோ எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த பொருளையும் வாங்கச் செய்யும் வசீகர வலையாக பரந்து விரிந்துள்ளது, 'ஆன்லைன் ஷாப்பிங்!'
மேலும், நேரில் பார்த்து, பல கேள்விகள் கேட்டு, தொட்டு உணர்ந்து, திருப்தியாகி, அதன்பின் பணத்தை எடுக்கும், நம் மக்கள் மனதில், மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கம்ப்யூட்டர் தேவையில்லை; கையடக்க மொபைல் போனிலேயே பொருளின் சகல பரிமாணங்களையும் அலசி, வங்கி கணக்கிலிருந்தோ அல்லது ஏ.டி.எம்., கார்டிலிருந்தோ பண பரிமாற்றம் செய்தால், பொருள் கைக்கு வந்து சேரும் காலம் இது. இதன் பின்னணி, பிரச்னை மற்றும் இலக்கு என்ன என்று பார்க்கலாமா...

நேரம் சேமிக்கப்படுவது முக்கியமாக சொல்லப்பட்டாலும், கவர்ச்சிகரமான தள்ளுபடிகளில் மயங்கி, தேவையே இல்லாமல் வாங்கி குவிப்பவர்களும் உண்டு. கரன்சிகளை கையில் எடுக்காமல் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், 1,000 ரூபாய்க்கும், 10 ஆயிரம் ரூபாய்க்கும் உள்ள வித்தியாசத்தை கூட அதிகம் யோசிப்பதில்லை.
வங்கி கணக்கில் பணம் இல்லாதபோதும், 'கிரெடிட் கார்டு' தயவில் வாங்குகின்றனர். 'ரிட்டன் பாலிசி' இருப்பதால், பிடிக்கவில்லை என்றால் திருப்பி கொடுத்து விடலாம் என, சிலர் நினைக்கின்றனர். ஆனால், பொருள் கைக்கு வந்தபின், திரும்ப கொடுக்கும் நிலை, எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.
அடுத்து, சின்ன மீனை போட்டு, பெரிய மீனை பிடிக்கும் தொழில்நுட்பம். 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால், 'டெலிவரி' கட்டணம் இல்லை. எனவே, 50 ரூபாய் மிச்சப்படுத்துவதாக நினைத்து, அவசியமில்லாமல், கூடுதலாக பொருட்களை வாங்குகின்றனர். அதுமட்டுமல்ல, மொபைல் போன் வாங்கினால், 'பவர் பேங்க்'கும், ஜீன்ஸ் வாங்கினால், 'டி - ஷர்ட்' என, தொடர்புடைய பொருட்களுக்கு தள்ளுபடி தந்து, இன்னும் ஈர்க்கின்றன, 'ஆன்லைன் ஷாப்பிங்' தளங்கள். தவணை முறையில், 3,000 ரூபாய் கட்டலாம் என்கிறபோது, ஆர்வம் இன்னும் அதிகமாகிறது.
போக்குவரத்து நெரிசல் கொண்ட இந்தியாவில், கடைகளுக்கு சென்று வருவதை, சுமையாகவும், அலுப்பாகவும் கருதுகின்றனர், மக்கள். வணிக வளாகங்களில், பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், அதையும் ஒதுக்குகின்றனர். இப்படி பல காரணங்கள் இருந்தாலும், ஒரு வேலையை இணையத்தில் முடிப்பதை, இந்திய இளைஞர்கள், தங்களின் தனித் திறமையாக நினைக்கின்றனர். இந்த எண்ணத்தை மூலதனமாக்கியே, 'ஆன்லைன்' நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன.
'ஆன்லைனில்' கிடைக்காத பொருள் ஏதுமில்லை. காலையில், காய்கறிகள், நள்ளிரவில் பிறந்த நாள் கேக் அல்லது பிரியாணி... இப்படி, எதையும் விரும்புகிற நேரத்தில், 'டெலிவரி' செய்ய காத்திருக்கின்றன.
வாங்குவது மட்டுமல்ல, தேவையற்ற பொருளையும், வீட்டிலிருந்தபடியே விற்க முடியும்.
ஒரு பொருளை பார்க்காமலேயே, அதுவும் முன் பணம் கட்டி எப்படி வாங்குவர் என்ற கேள்வி பலருக்கு உண்டு. இந்த மனத்தடையை உடைக்க, இணையதள நிறுவனங்களின் திட்டம் தான், 'கேஷ் ஆன் டெலிவரி!' இது, ஓரளவு நம்பிக்கை அளித்த பிறகே, 'ஆன்லைன்' தொழில், அசுர வேகம் எடுத்துள்ளது.
முதலில், இலவச, 'ஷிப்பிங்' அளித்த நிறுவனங்கள், இப்போது, 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன.
இணையத்தில், 'கிரெடிட் கார்டு' மோசடிகள் அதிகம் நடக்கின்றன. இதனால், வங்கிகள் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
'ஆன்லைன் ஷாப்பிங்'கிற்கு அடிமையாவது, மிகப்பெரிய மனநல பிரச்னையாக மாறி வருகிறது.
இதுபற்றி, மனநல மருத்துவர் சொன்ன தகவல்:
'ஆன்லைன் ஷாப்பிங்'கிற்கு அடிமையாவதை, 'ஆன்யோமேனியா' என்கின்றனர். அலுவலகத்தில் இருந்து, 'ஷாப்பிங்' செய்யலாம் என்பதால், பக்கத்தில் இருப்பவரிடம், 'நான் எவ்ளோ வாங்குகிறேன் பார்...' என, பந்தா காட்டுவதில், ஒருவித திருப்தியை உணருகின்றனர்.
திட்டமிடாமல், ஒரு நொடியில் முடிவெடுத்து வாங்கும் பழக்கம் தான், அடிமைத்தனமாக மாறுகிறது. அழகான வடிவமைப்புடன் கூடிய இணைதளம், கலர் கலரான புகைப்படங்கள், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் ஆகியவற்றை பார்த்ததும், வாங்கியே தீரணும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர், என்கிறார்.
'இணையத்தில், 'பிரைவசி' என்பதே கிடையாது. நம் தேவை என்ன, சம்பளம் எப்போது வரும், எந்த நேரத்தில் அதிகம் வாங்குவோம் என, எல்லா தகவல்களையும், நம்மிடமிருந்தே வாங்கி தொகுத்து வைத்திருக்கிறது, இணையம். நம்மை பற்றி சரியாக கணித்து, ஆசையை துாண்டி வாங்க வைத்து விடுகின்றனர்...' என்கிறார், மென்பொருள் துறை இன்ஜினியர் ஒருவர்.
இவர் பணிபுரியும் நிறுவனம், இணைய பயனாளர்களிடமிருந்து இத்தகைய தகவல்களை சேகரித்து, வேண்டியவர்களுக்கு விற்று வருகிறதாம்.
சமூக வலைதளங்களும், இளைஞர்களை வாங்க வைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. கருத்து பரிமாற்றங்களும், தொடர்ச்சியான உரையாடல்களும், 'சோஷியல் மீடியா'க்களில் இயங்கும் சிலரின் மீது நம்பிக்கையை விதைக்கின்றன. அவர்கள், ஒரு பொருளை வாங்கியதாக பார்த்தாலே, மற்றவர்களும் அதை நம்பி வாங்க தயாராகின்றனர்.
எதிலும், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
* 'இந்த ஆண்டில், இணைய பயன்பாட்டாளர் எண்ணிக்கையில் இந்தியா, அமெரிக்காவை முந்தும்...' என்கிறது, 'கூகுள்' நிறுவனம்
பல்லாயிரக் கணக்கான கோடிகளை, பன்னாட்டு நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்துள்ளன. தலைவலி தைலம் முதல் பாத வெடிப்பு வரையிலான பொருட்களை, 'ஆன்லைனில் ஆர்டர்' செய்ததும், ஆளுயர பைகளை முதுகில் சுமந்தபடி, சாலைகளில், 'டெலிவரி' வண்டிகள் பறக்கும்
சம்பாதிப்பதில் பாதி பணம், 'ஆன்லைனில்' பொருட்கள் வாங்கவோ, வாங்கியதற்கு, இ.எம்.ஐ., கட்டவோ செலவழிக்கப்படுகிறது
* 'ஆன்லைன் ஷாப்பிங்' செய்யும், 10 பேரில், நான்கு பேர், தங்களுக்கு திருப்தியில்லை என, இணையத்தில் கருத்து பதிவு செய்கின்றனர்
* கம்ப்யூட்டரில், 'பிரவுசர்' மூலம் வாங்கும்போது, மற்ற இணையதளங்களில் விலைகளை ஒப்பிட்டு பார்க்கலாம். மொபைலில் அது சிரமம் என்பதால், 'ஆப்' மூலம் வாங்க வைக்கவே, பல்வேறு உத்திகளை கையாளுகின்றனர். சில இணைய தளங்கள் முடக்கப்பட்டு, 'ஒன்லி ஆப்' ஆக மாற்றப்பட்டதற்கு, இதுவும் காரணம்.

என். எஸ். வி.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
16-ஜூன்-202023:07:33 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI ஒரு பொருளை தொட்டு பார்த்து வாங்கி நுகரும் நுகர்வே தனித்துவம். அதை விடுத்து ஆன் லைனில் தள்ளிப்பார்த்து வாங்கும் பொருள் எல்லாம் தள்ளிப்போகும் நிலைக்கு வந்து சேரும். தொட்டுப்பார்த்து வாங்குவதே சிறந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X