விஜய்சேதுபதி பாணியில், ஆர்யா!
கதாபாத்திரங்களுக்காக, உடலை வருத்தி நடிக்க தயாராக இருந்தபோதும், ஆர்யாவுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, அதனால், 'சிங்கிள் ஹீரோ' என்பதில் இருந்து மாறி, 'டபுள் ஹீரோ' கதைகளில் நடிக்கும் அவர், விஜய்சேதுபதி பாணியில், முன்னணி, 'ஹீரோ'க்களின் படங்களில், அதிரடி வில்லனாக நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக, கோலிவுட்டில், ஒரு செய்தி கசிய விட்டிருக்கிறார்.
— சினிமா பொன்னையா
ஷகீலா பட, 'போஸ்டரா'ன, சந்தானம்!
டிக்கிலோனா என்ற படத்தில், மூன்று வேடங்களில் நடித்து வரும், சந்தானம், இந்த படத்தின் ஒரு போஸ்டரில், நிர்வாணமாக காட்சி கொடுத்து, அதிர வைத்திருக்கிறார். அதோடு, 'இதைப் பார்க்க, பீகே என்ற ஹிந்தி படத்தில், அமீர்கான், உடம்பில் பொட்டு துணி கூட இல்லாமல், 'போஸ்' கொடுத்தது போன்று இருக்கிறதல்லவா...' என்றும், 'பில்ட் - அப்' கொடுத்துள்ளார், சந்தானம். ஆனால், 'நெட்டிசன்'களோ, 'இது, அமீர்கான் பட, 'போஸ்டர்' போல் இல்லை; ஷகீலா பட, 'போஸ்டர்' போல் உள்ளது...' என்று, சந்தானத்தை செம கலாய் கலாய்த்து விட்டனர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
எதிர்காலத்தில், அரசியலுக்கு வரும் ஆர்வத்தில் இருக்கும், தளபதி நடிகர், தான் நடித்த ஒரு ஐந்தெழுத்து படத்தின், 'கிளைமாக்'சில், முதல்வராக நடிக்க சொன்னபோது, மறுத்து விட்டார். இந்நிலையில், பிரமாண்ட இயக்குனரும், அவரிடத்தில், முதல்வராக நடிக்க வேண்டும் என்று, ஒரு கதை சொன்ன போது, 'நான், முதல்வர் வேடத்தில் நடிப்பதா...' என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
காரணம் கேட்டால், 'நான் அரசியலுக்கு வரும் முடிவில் இருப்பதால் தான், என் எல்லா படங்களுக்கும், ஏதாவது ரூபத்தில் குடைச்சல் கொடுக்கின்றன ஆளும் கட்சி, இந்த நேரத்தில், நான் முதல்வராக நடித்தால், அதன்பின், என் படங்களை தியேட்டருக்கே வர விடாத அளவுக்கு பெரிய பிரச்னை கொடுப்பர். அதனால் தான், நான் முதல்வராக நடிக்க பயப்படுகிறேன்...' என்று, பிரமாண்ட இயக்குனரின் காதில், 'கிசுகிசு'த்துள்ளார், தளபதி.
'நம்ம யூனியன் தலைவருக்கு உடல்நல குறைவு காரணமாக, கொஞ்ச காலத்துக்கு ஓய்வு எடுக்க இருக்கிறார். விஜயை, தலைவரா பொறுப்பேற்க சொன்னதுக்கு, மறுத்துட்டாராம். இப்ப வேறு ஒருத்தரை தான் நியமிக்கணும்...' என்றார், சக ஊழியர் ஒருவர்.
சினி துளிகள்!
* விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணையும், துப்பாக்கி - 2 படத்திற்கு, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
* மணிரத்னம் இயக்கிய, காற்றுவெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்த, அதிதிராவ் ஹைதரி, தற்போது, களரி கலையை கற்று வருகிறார்.
* கவுதம்மேனன் இயக்கத்தில், சிம்பு, த்ரிஷா இணைந்து நடித்த, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமும், அதே கூட்டணியுடன் விரைவில் துவங்குகிறது.
* விஜயின், மாஸ்டர் படம், அவரது வழக்கமான மசாலா பாணி கதையில் இருந்து மாறுபட்டு உருவாகி இருப்பதாக சொல்கிறார், அப்பட இயக்குனர், லோகேஷ் கனகராஜ்.
* அயோக்யா, சங்கத்தமிழன் படங்களுக்கு பிறகு, அருவா, அரண்மனை - 3 ஆகிய படங்களில் நடிக்கிறார், ராசிகண்ணா.
* ஓய்வு நேரங்களில் திரைப்படங்கள் பார்ப்பதை விட, ஆங்கில நாவல்களை அதிகம் படிப்பதாக சொல்கிறார், நயன்தாரா.
* அனுஷ்காவின் மார்க்கெட், 'டல்' அடிப்பதால், அவரது கதையின் நாயகி இடத்தை கைப்பற்ற, சரித்திர கதைகள் வைத்திருக்கும் இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், த்ரிஷா.
அவ்ளோதான்!