நம்மிடமே இருக்கு மருந்து! - எட்டு போட்டால்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2020
00:00

'எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டி போகும்' என்பது, பழமொழி. மனித உடல், அவரவர் கை அளவுக்கு, எண்ஜான் மட்டுமே இருக்கும்.
உங்கள் வீட்டின் உள்ளேயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, 6க்கு 12 அடி அல்லது 8க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு போட வேண்டும். அதில், தெற்கு வடக்காக நீள பகுதி இருக்கும் வகையில், 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்.
காலை அல்லது மாலை, வடக்கு நோக்கி நின்று, 8 வடிவ கோட்டின் மேல், உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள். ஆண்கள் வலது கை பக்கமும், பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின், அதே வழியில் தொடர்ந்து, 21 நிமிடம் நடக்க வேண்டும். பின், மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று, இதேபோல், 21 நிமிடம் கையை நன்கு வீசியபடி, மிதமான வேகத்தில், 42 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
* பயிற்சி துவங்கிய அன்றே, மார்பு சளி கரைந்து வெளியேறும்
* இந்த பயிற்சியை இருவேளையும் செய்து வந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்து காணப்பட்டால், ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம்
* நீரிழிவு நோய், சர்க்கரை வியாதி குறைந்து, முற்றிலும் குணமாகும். அதன்பின், மருந்து, மாத்திரைகள் தேவையில்லை
* குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும்
* கண் பார்வை அதிகரிக்கும்; ஆரம்ப நிலையில் கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்
* கேட்கும் திறன் அதிகரிக்கும்
* உடல் சக்தி பெருகி, ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்
* குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்
* ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும்
* பாத வலி, மூட்டு வலி மறையும்
* சுவாசம் சீராகி, உள் உறுப்புகள் பலம்பெறும்.
எட்டு வடிவ நடைபயிற்சி செய்யும்போது, நீங்களே உணரலாம்.
அந்த வடிவம் முடிவில்லாதது மட்டுமல்ல, நம் ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலைப்படுத்த, நமக்கு உடற்பயிற்சியாக சொல்லித் தந்தனர், சித்தர்கள். விருப்பமுள்ளோர் முயற்சி செய்து பலனடையுங்கள்.
நோய் இருப்போரும், இல்லாதோரும் இந்த, 8 வடிவ நடைபயிற்சி செய்யலாம்.
முதல் - 21 நாளில், சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதி வாதம், வடகலை நாடி, இடகலை நாடி புத்துயிர் பெறும். 2வது - 21 நாளில், மூட்டு வலி, ஒட்டு கால் பிரச்னை குறையும். 3வது - 21 நாளில், தொடை பகுதி பலம் பெறும். 4வது - 21 நாளில், ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு, சர்க்கரை நோய் அளவு, கல்லீரல் - மண்ணீரல் குறைபாடு, கர்ப்பப்பை குறைபாடு, குழந்தை பேறின்மை, மாத நாள் குறைபாடு, ஆண் - பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும். 5வது - 21 நாளில், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
6வது - 21 நாளில், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்.
7வது - 21 நாளில், தொண்டை பகுதி பிரச்னைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாயு பிடிப்பு வராது. 8வது - 21 நாளில், வாய், கண், காது நோய் நம்மை தாக்காது. இரண்டு நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும். மூளை பகுதி விரிவடையும். மூளை பகுதி நோய் தீரும்.
மவுனமாக, ஏதாவது இறை நாமத்தை மனதில் சொல்லியவாறு நடக்க வேண்டும். வாய் வழி சுவாசம் கூடாது.
வெ.பார்வதி சுப்ரமணியன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
24-ஜூன்-202022:27:53 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஜனத்தொகை பெருகி, அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி, வெளியே நடக்க முடியாமல், நடக்குறதுக்கு இடமில்லைங்குறதாலே ஒரே இடத்திலே நடக்குறதுக்கு செக்குமாடு மாதிரி வட்டமா சுத்தாமால் எட்டு போட ஆரம்பித்தார்கள். பார்த்தால் செக்குமாடுன்னு சொல்லி விடுவார்கள் என்று அதுக்கு இந்த மாதிரி எட்டு காரணங்களையும் சேர்த்துக்கொண்டார்கள்.. 8 போடுவியோ, இல்லை பத்து போடுவியோ இதே 42 நிமிஷம் வேகமாக எப்படி நடந்தாலும், உடலுக்கு நன்மை உண்டாகும். மற்றபடி எல்லா நோயும் குணமாகும் என்பது சுத்த ஹம்பக்.. டுபாக்கூர் டாக்டர்ஸ்,
Rate this:
Cancel
Raja Eswaran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூன்-202013:38:32 IST Report Abuse
Raja Eswaran மிகவும் பயனுள்ள கருத்து
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
22-ஜூன்-202000:47:27 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI உடலினை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நோய்களின் நாட்டம் பெருகும். உடல் ஆட்டம் கண்டு விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X