நம்மிடமே இருக்கு மருந்து! - எட்டு போட்டால்... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நம்மிடமே இருக்கு மருந்து! - எட்டு போட்டால்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2020
00:00

'எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டி போகும்' என்பது, பழமொழி. மனித உடல், அவரவர் கை அளவுக்கு, எண்ஜான் மட்டுமே இருக்கும்.
உங்கள் வீட்டின் உள்ளேயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, 6க்கு 12 அடி அல்லது 8க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு போட வேண்டும். அதில், தெற்கு வடக்காக நீள பகுதி இருக்கும் வகையில், 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்.
காலை அல்லது மாலை, வடக்கு நோக்கி நின்று, 8 வடிவ கோட்டின் மேல், உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள். ஆண்கள் வலது கை பக்கமும், பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின், அதே வழியில் தொடர்ந்து, 21 நிமிடம் நடக்க வேண்டும். பின், மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று, இதேபோல், 21 நிமிடம் கையை நன்கு வீசியபடி, மிதமான வேகத்தில், 42 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
* பயிற்சி துவங்கிய அன்றே, மார்பு சளி கரைந்து வெளியேறும்
* இந்த பயிற்சியை இருவேளையும் செய்து வந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்து காணப்பட்டால், ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம்
* நீரிழிவு நோய், சர்க்கரை வியாதி குறைந்து, முற்றிலும் குணமாகும். அதன்பின், மருந்து, மாத்திரைகள் தேவையில்லை
* குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும்
* கண் பார்வை அதிகரிக்கும்; ஆரம்ப நிலையில் கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்
* கேட்கும் திறன் அதிகரிக்கும்
* உடல் சக்தி பெருகி, ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்
* குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்
* ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும்
* பாத வலி, மூட்டு வலி மறையும்
* சுவாசம் சீராகி, உள் உறுப்புகள் பலம்பெறும்.
எட்டு வடிவ நடைபயிற்சி செய்யும்போது, நீங்களே உணரலாம்.
அந்த வடிவம் முடிவில்லாதது மட்டுமல்ல, நம் ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலைப்படுத்த, நமக்கு உடற்பயிற்சியாக சொல்லித் தந்தனர், சித்தர்கள். விருப்பமுள்ளோர் முயற்சி செய்து பலனடையுங்கள்.
நோய் இருப்போரும், இல்லாதோரும் இந்த, 8 வடிவ நடைபயிற்சி செய்யலாம்.
முதல் - 21 நாளில், சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதி வாதம், வடகலை நாடி, இடகலை நாடி புத்துயிர் பெறும். 2வது - 21 நாளில், மூட்டு வலி, ஒட்டு கால் பிரச்னை குறையும். 3வது - 21 நாளில், தொடை பகுதி பலம் பெறும். 4வது - 21 நாளில், ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு, சர்க்கரை நோய் அளவு, கல்லீரல் - மண்ணீரல் குறைபாடு, கர்ப்பப்பை குறைபாடு, குழந்தை பேறின்மை, மாத நாள் குறைபாடு, ஆண் - பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும். 5வது - 21 நாளில், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
6வது - 21 நாளில், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்.
7வது - 21 நாளில், தொண்டை பகுதி பிரச்னைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாயு பிடிப்பு வராது. 8வது - 21 நாளில், வாய், கண், காது நோய் நம்மை தாக்காது. இரண்டு நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும். மூளை பகுதி விரிவடையும். மூளை பகுதி நோய் தீரும்.
மவுனமாக, ஏதாவது இறை நாமத்தை மனதில் சொல்லியவாறு நடக்க வேண்டும். வாய் வழி சுவாசம் கூடாது.
வெ.பார்வதி சுப்ரமணியன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X