கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2020
00:00

அப்பா...

ஜூன் 21 - தந்தையர் தினம்


உன் ஆள்காட்டி விரல்
பிடித்து நடந்த காலந்தொட்டு
என் நடையை மட்டுமல்ல
நடத்தையையும் ஒழுங்குபடுத்திய
வகுப்பறை காணாத ஆசிரியர் நீ!

உயரங்களை விட உயரமாக
நான் உயர வேண்டும் என்பதற்காக
தோள்களையே ஏணியாக்கிய
உழைப்பின் உருவம் நீ!

எண்ணும், எழுத்தும்
என் கண்களாவதற்காக
உன்னையே உருக்கிக் கொண்ட
மெழுகுவர்த்தி நீ!

கஷ்டங்கள் சூழ்ந்து விடாமலிருக்க
உழைப்பு நேரத்தை நீட்டிக் கொண்ட
இரவில்லா பகல் நீ!

குடும்ப விருட்சத்தின்
கிளைகள் தோறும்
வெற்றிகளை விளைத்தெடுக்க
உன்னையே உரமாக்கிக் கொண்ட
விசித்திர பிறவி நீ!

ஒளியை இழந்த பிறகு தான்
கண்களுக்கு
வெளிச்சத்தின் அருமை புரியும்...
என்பதை உணர்த்திய
அமரத்துவம் நீ!

அப்பா...
உன் சுவடுகளெல்லாம்
சுடர்களாக ஒளிர்வதால்
பாதை மாறாமல் பயணப்படுகிறேன்!

கவிதாசன், கோவை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
21-ஜூன்-202010:45:33 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI பெற்றோரே பிள்ளைகளின் முதல் ஆசான். அதிலும் குறிப்பாக அப்பாவின் சுவடுகள் எப்போதும் பிள்ளையை பின்பற்றவைக்கும்.. பெண் பிள்ளைகள் தன அப்பாவை முதல் ஹீரோ வாகத்தான் பார்ப்பார்கள். அன்பை மனதிற்குள் பூட்டிவைத்து வெளியில் காட்டாமல் மனதிற்குள் மடியவைக்கும் ஒரு உன்னத பிறப்பு
Rate this:
Cancel
21-ஜூன்-202008:59:06 IST Report Abuse
Ranjith Rajan தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. Miss You Appa..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X