ஹிட்லரின் முதலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2020
00:00

ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லரை பற்றி, யாரும் தெரியாமல் இருக்க முடியாது. இவர் உயிருடன் இருந்தபோது, பெர்லின் நகரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அடிக்கடி சென்று, அங்குள்ள விலங்குகளுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். அங்கிருந்த ஒரு முதலை, அவரது கவனத்தை ஈர்த்தது.
அந்த முதலைக்கு, 'சடோன்' என, பெயர் வைத்து, செல்லமாக வளர்த்து வந்தார். பூங்காவுக்கு செல்லும்போதெல்லாம், அந்த முதலையிடம், தனி கவனம் செலுத்தி வந்தார், ஹிட்லர்.

அவர், இறந்த பின், அந்த பூங்காவில் இருந்த பெரும்பாலான உயிரினங்களை, ரஷ்ய ஆட்சியாளர்கள் எடுத்துச் சென்று விட்டனர்.
ஹிட்லரின் செல்லப் பிராணியான, சடோன் முதலையும், மாஸ்கோவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
ஹிட்லர் வளர்த்த முதலை என்பதால், அதை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட அந்த முதலை, சமீபத்தில், தன், 84வது வயதில் உயிரிழந்தது.
மாஸ்கோ உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், 'இந்த முதலையை, ஹிட்லர் வளர்த்து வந்தார் என்பதற்காக, எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால், துவக்கத்திலிருந்து, இது ஹிட்லரின் முதலை என, பலராலும் பேசப்பட்டு வந்ததை மறுக்க முடியாது...' என்கின்றனர்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
24-ஜூன்-202001:44:06 IST Report Abuse
Manian தென் அமெரிக்க கோகெயின் கடத்தல் மன்னன் எஸ்கோபாரும் ஒரு நீர் யானையை வளர்த்தான் அவனும் செத்தான். ஆனால் அவன் நீர் யானை படுத்தும் பாட்டை இன்னும் தடுக்க முடியவில்லையே ஒரு வேளை தன் எதிரிகளை உணவாக கொடுக்கத் தான் ஹிட்லர் முதலை வளர்த்தான் என்றால்.?.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
22-ஜூன்-202000:43:47 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI சர்வாதிகார ஆட்சியை நடத்திய ஹிட்லர் முதலையின் பிடியில் அதாவது முதலையின் மீது அன்பு செலுத்தினார் என்பது ஆச்சரியமாக இருந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X