முதுகலை பட்டதாரி ஆசிரியை சாதனை - ஒரே இடத்தில் உளுந்து, வெண்டை, தக்கைப்பூண்டு சாகுபடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2020
00:00

மூன்றரை ஏக்கர் நிலத்தில் உளுந்து, வெண்டைக்காய், தக்கைப்பூண்டு என கிணற்று நீரை பயன்படுத்தி அடுத்தடுத்து சாகுபடி செய்து கோடையிலும் விவசாயத்தில் குன்றாத வருமானம் ஈட்டி வருகிறார் மதுரை திருப்பாலையை சேர்ந்த ஆசிரியை பிரசன்னா. இவர் எம்.எஸ்ஸி., (இயற்பியல்) மற்றும் பி.எட்., பட்டங்கள் பெற்று திருப்பாலை நல்லமணி அரசு உயர் நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மதுரை அருகே வீரபாண்டியில் தனது மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் ஒன்றரை ஏக்கரில் உளுந்து விதைப்பண்ணை, அரை ஏக்கரில் வெண்டைக்காய், ஒன்றரை ஏக்கரில் மண்ணுக்கு வலு சேர்க்கவும், நுண்ணுாட்ட சத்துக்களை அதிகளவு கொடுக்கும் தக்கைப்பூண்டு சாகுபடி செய்து வருகிறார். உளுந்து விதைப்பண்ணை அமைத்து வேளாண்மைத்துறைக்கு சான்றளிக்கப்பட்ட 'பம்பல் - 6' ரக உளுந்து விதைகளை வழங்கி வருகிறார்.

முற்றிய வெண்டைக்காய்களை வட்ட வடிவில் நறுக்கி வத்தல், மோர் வத்தல் என மதிப்பூட்டி கூடுதல் விலைக்கு விற்கிறார். வேளாண் விளை பொருட்களில் சிறு சிறு தொழில்நுட்பங்களை புகுத்தி விவசாயத்தில் கூடுதல் வருவாய் ஈட்டி வருகிறார்.

பிரசன்னா கூறியதாவது:
குலத்தொழிலான விவசாயமும், ஆசிரியை பணியும் எனது இரு கண்கள் போன்றது. நெல்லில் அதிக விளைச்சல் கண்டதற்காக முன்பு தமிழக அரசின் விவசாய சாதனையாளர் விருதும், ரூ.5 லட்சம் பொற்கிழியும் பெற்றுள்ளேன். விவசாயத்தில் எதாவது புதுமையை புகுத்த வேண்டும் என்பதற்காக ஓய்வு நேரங்களில் வயல்களில் களம் இறங்கி விவசாயியாக மாறி விடுகிறேன்.
தற்போது மேற்கு வட்டார உதவி வேளாண் அலுவலர் கண்ணன் ஆலோசனைப்படி உளுந்து பண்ணை அமைத்து வேளாண்மைத் துறைக்கு தரமான விதைகளை வழங்கி வருகிறேன்.
வெண்டைக்காய் கிலோ ரூ.10 விலையில் விற்பதால் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, காய்களை நன்கு முற்ற வைத்து மதிப்பூட்டி வத்தலாக மாற்றி விற்பதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது. மண் வளம் காக்க ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். இதற்காக இயற்கையின் அருங்கொடையாக கருதப்படும் தக்கைப்பூண்டை ஒன்றரை ஏக்கரில் விதைத்துள்ளேன். பூக்கும் தருணத்தில் நிலத்தில் மடக்கி உழவடை செய்தால் மண் வளம் பெருகும்.
பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்ட சத்துக்கள் கிடைக்கும். இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதால் மவுசு அதிகரித்து வருகிறது என்றார்.
ஆலோசனைக்கு 98655 82999.
- கா.சுப்பிரமணியன்
விருதுநகர்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
27-ஜூன்-202000:36:21 IST Report Abuse
raja இவர் விவசாயம் செய்வது பாராட்டுக்கு உரியது. ஆனால் இவர் ஆசிரியை பதவியை ஏன் பிறருக்கு கொடுக்க கூடாது. யாரவது ஒரு ஏழை பெண்ணுக்கு இந்த ஆசிரியை வேலை கொடுக்க படலாம். இவரால் ஆசிரியை பணி ஒன்றும் கவனத்துடன் செய்ய முடியாது. எனவே அதை இவர் முதலில் துறக்க வேண்டும்.
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
26-ஜூன்-202012:02:19 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy தலைப்பு சூப்பர்
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
26-ஜூன்-202007:13:31 IST Report Abuse
Sanny இந்த பட்டதாரி சகோதரியின் செய்தி பல நாட்களாக தினமலரில் இடம் பிடித்துவருது, ஆனால் சங்கிகள் நாலுவார்த்தை நல்லது சொல்லி எழுதவில்லை, பக்கத்துநாட்டு அரசியல்வாதிகள் என்ன செய்தாலும் உடனே வரிந்து கட்டி எழுதுவாங்க. செய்யும் தொழில் தான் தெய்வம். இன்று பலர் தாங்கள் பிறந்து வளர்ந்த காலத்தை மறந்துவிட்டார்கள். வெளிநாடு போனவர்களும் கூலிவேலை செய்து படித்து பட்டம் வாங்கியபின் தாங்கள் செய்த கூலித்தொழில் இப்போ செய்பவர்களை மதிப்பதில்லை. இந்த சகோதரிக்கு பாராட்டுக்கள், நிட்சயம் இவங்களை பார்த்து பல பட்டதாரிகள் விவசாயம் செய்ய புது, புது கண்டுபிடிப்புகளுடன் வருவாங்க என்ற நம்பிக்கை இருக்கு. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X