இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
00:00

மெச்சத்தகுந்த மாமியார்!
வசதியான என் உறவினரின் பையன், ஒரு பெண்ணை காதலித்தான். அந்த பெண், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். அதனால், பையனின் உறவினர்கள், 'அந்த பெண்ணை திருமணம் செய்யக் கூடாது...' என்று, கண்டிப்பாக கூறினர்.
ஆனால், பையனின் தாய்க்கு, மகனின் விருப்பம் தான் பெரிதாக தெரிந்தது. அதனால், தன்னிடமிருந்த வெள்ளி பாத்திரங்களை மெருகேற்றினாள்; நகைகளில் சிலவற்றை நகை கடையில் கொடுத்து, புதிய நகைகளாக மாற்றி, ஏழை பெண் வீட்டாரிடம் கொடுத்து, அவர்கள் போட்டதாக சொல்லி போடச் சொன்னாள்.
பெண் வீட்டார் முதலில் தயங்கினாலும், பெண்ணின் நல்வாழ்வுக்காக ஒத்துக் கொண்டனர். திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு, ஒரு குறையும் சொல்ல தோன்றவில்லை. மகனுக்கு, அம்மாவின் அன்பு புரிந்தது; மருமகளுக்கும், தன் மாமியாரின் அன்பும், சாமர்த்தியமும் புரிந்தது. மாமியாரின் காலில் விழுந்து நன்றி கூறினாள், மருமகள்.
மருமகளை கட்டி அணைத்து, 'என் மகனின் விருப்பம் தான், எனக்கு முக்கியம். மேலும், எனக்கு பிறகு, நகைகள், பாத்திரங்கள் எல்லாம் உனக்கு சேர வேண்டியவை தானே... ஒரு நல்ல காரணத்திற்காக, அதை முன்பே கொடுத்து விட்டேன்...' என்றார்.
எல்லா மாமியாரும் இப்படி நடந்து கொண்டால், மாமியார் - மருமகள் சண்டை எங்கிருந்து வரும்?
- மரகதம் ராகவசீமான், ஐதராபாத்.

'ஓல்டு இஸ் கோல்டு!'
வயிற்றில் பெரிய அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையிலிருந்து வந்த, சீனியர் சிட்டிசன் தோழியை பார்க்க, ஆப்பிள், ஆரஞ்சு பழங்களுடன் சென்றேன்.
நான் இருக்கும்போதே, தோழியின், 78 வயது சித்தியும் வந்தார். வீட்டில் அரைத்த இட்லி மாவு, ஒரு டப்பா; சிறு சிறு டப்பாக்களில், வறுத்த மணத்தக்காளி, சுண்டைக்காய் வத்தல், நார்த்தங்காய் ஊறுகாய், காரமில்லாத ரசம், பருப்பு துவையல், சுட்ட அப்பளம் என, அவர் எடுத்து வந்த அனைத்து பொருட்களும், என்னை அசர வைத்தது.
'நல்ல சாப்பாட்டுக்கு நாக்கு ஏங்கும் என்பதால், வயிற்றில், ஜீரண சக்தியை அதிகரிக்க, மணத்தக்காளி, சுண்டை வத்தல் மிக நல்லது. ஓட்ஸ் கஞ்சி மற்றும் அரிசி கஞ்சிக்கு சுட்ட அப்பளம் சுவை கொடுக்கும். நோயாளி என்பதால், வீட்டில் அரைத்த மாவு கொண்டு வந்தேன்...' என, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க சொல்லி முடித்தார்.
நானும் முடிவெடுத்து விட்டேன். நோயுற்றவர்களை பார்க்க போகும்போது, வழக்கமான, ஆப்பிள், ஆரஞ்சுகளை விட, உடலுக்கு உகந்த சமையல், பொடி மற்றும் துவையல் என, எடுத்துச் சென்றால், அளவற்ற பலனும் உண்டு. எல்லாரும் இதை பின்பற்றலாமே.
'ஓல்டு இஸ் கோல்டு' என்று சொல்வது, சரிதானே!
— சீனு சந்திரா, சென்னை.

வாழ நினைத்தால் வாழலாம்!
என் உறவினர் ஒருவருக்கு, மூன்று பெண்கள்; பிள்ளைகள் கிடையாது. இரண்டு மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார். மூன்றாவது பெண், கல்லுாரி படிப்பை முடித்து, வேலை தேடி வந்த நேரத்தில், அவளின் தந்தை, 'ஹார்ட் அட்டாக்' வந்து இறந்து விட்டார்.
வேலை தேடிக் கொண்டிருந்த பெண், 'லாப்டாப்'பில், 'இன்டர்நெட் கனெக் ஷன்' கொடுத்து, அவள் வசிக்கும் தெருவில் உள்ள அத்தனை பேருக்கும், ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வது, பெண்களுக்கான துணி தைத்து கொடுப்பது, மாணவர்களுக்கு, 'டியூஷன்' சொல்லி தருவது...
இட்லி, தோசை மாவு அரைத்து, பாக்கெட்டுகளில் 500 கிராம், 1 கிலோ அளவில் விற்பது, பொது அறிவு வகுப்பு, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' சொல்லித் தருவது என, எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறாள்.
இதனால், நல்ல வருமானம் கிடைக்கிறது. தாயை நன்றாக கவனித்து, அந்த ஏரியாவிலேயே எல்லாருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறாள், அப்பெண்.
வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்!
— ஜி. நீலாமணி, சென்னை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202015:08:51 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI மருமகளுக்கு கொடுக்க வேண்டியதை முன்பே கொடுத்து மருமகளாக்கியவர் வாழ்க . ஒரு முத்திரை குத்தும் பழக்கம் நம்மிடம் இருந்து நீக்கவேண்டும்
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
29-ஜூன்-202010:12:19 IST Report Abuse
Manian ஜி. நீலாமணி, சென்னை:முதலில் தன் திறமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தனக்கு உதவி கிடைக்காததை ஏன் கிடைக்க வில்லை என்று கேள்வியாக்கி, உதவி செய்யும் தொழிலாக மாற்ற வேண்டும். அதை இந்த பெண் செய்கிறாள். ஆட்களை வைத்து வீட்டு வேலை தொழில், மாவு கோண்டு போய் வீடுகளில் இட்லி, தோசை சுடுதல்,இயற்கை உரமிட்ட காய்கறிகள் விற்றல், தாயாருடன் பொழுது போக்க கதை சொல்லுதல், பஜனை செய்ய உதவுதல், ரோபாட் எடுத்து சென்று வீடு துடைத்தல், மேஸ்திரி, தச்சர்,பிளம்பர், எலக்டிரீஷியன் குழு அமைத்து ஏஜன்டாக கமிஷன் அடிப்படையில் பணி செய்தல், குடை ரிப்பேர், பூட்டு ரிப்பேர் ...தேவைகள் அதிகம். அதை கண்டு பிடிக்க புத்திசாலிதனம் வழிகாட்டி தேவை. இதில் சிலவற்றை நான் முன்பு செய்த அனுபவம் உண்டு. இன்றும் குடை ரிப்பேர் என் காசு தரும் ஹாபி..
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
29-ஜூன்-202009:57:35 IST Report Abuse
Manian சீனு சந்திரா, சென்னை: எண்ணம் நல்லதே. ஆனால் அதில் தவறு வந்தால்? உணவுப் பொருளின் மூலம் ஒவ்வாமை வந்து எமர்ஜென்சி வந்தால்? இட்லி மாவில் பல்லி விழுந்தால்..இப்படி நமக்கு தெரியாத ஆபத்துக்கள் மறைந்திருக்குதே பழம் தின்னலாம் இல்லை மருத்துவ செவிலியருக்கு தரலாம். ஆபத்து குறைவு. உண்மையில் உதவ அவர்கள் வீட்டிற்கே போய் உணவு சமைத்து கொடுக்கலாமே அல்லது சமைத்த உணவை உடனே எடுத்துச் செல்லலாமே. என் மனைவி இப்படித்தான் செய்கிறாள். மாவாக கொடுக்காமல், இட்டிலி சுட்டு எடுத்து போவாள். அங்கே போய் மிளகு ரசம் போன்றவை செய்வாள். உடல் உழைப்பு தானமே சிறந்த மருந்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X