அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
00:00

எஸ்.விஜயகுமார், சென்னை: தமிழகத்தில், காங்கிரஸ் தலை நிமிர ஏதேனும் வாய்ப்பு உண்டா?
இந்த மாதத்தில், 50 வயதை அடைந்த ராகுல் அல்லது அவரது தங்கை பிரியங்கா, தமிழக தலைவர் பொறுப்பேற்று, தமிழகத்திலேயே தங்கி, கட்சிப் பணியாற்றினால், ஒருவேளை தலை நிமிர வாய்ப்பு கிடைக்கலாம்! இதெல்லாம் நடக்கக் கூடியதா?

* ஜி. கோபாலகிருஷ்ணன், திருவாரூர்: கேரள முதல்வருக்கு, சொந்த பெயரில் கார் கூட கிடையாதாமே...
ஏன்... ஏமாற்றாத மனைவி, மகன், மகள் இல்லையா... அவர்கள் பெயரில் வைத்துக் கொள்கிறார் போலும்... இருந்து விட்டுப் போகட்டுமே... வெறும் கார் தானே!

கே.காளீஸ்வரி, நீர்விளங்குளம், புதுக்கோட்டை: பேசப்படும் பெண் எழுத்தாளராய் வலம் வர ஆசைப்படுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?
சினிமாவின் முன்னாள் கதாநாயகி, கஸ்துாரியிடம் சில மாதங்கள், 'டிரெயினிங்' எடுத்துக் கொள்ளுங்கள்... உங்கள் ஆசை நிறைவேறும்!

ஆர். சூர்யா, எஸ்.புதுார், தஞ்சை: 'கொரோனா'வால் லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு, வேலை இல்லாமல், அரசு சம்பளம் வழங்குவது சரிதானா?
ஆசிரியர்களா, 'லீவு' போட்டுள்ளனர்; அவர்கள் என்ன வேலைக்கு வரமாட்டோம் என்றா கூறினர்; அரசுதானே, 'லீவு' கொடுத்துள்ளது! அதனால், சம்பளம் வழங்குவது, நுாற்றுக்கு நுாறு சரிதான்!

* என். சொக்கலிங்கம், விருதுநகர்: உலகில் குற்றவாளி, மிகக் கொடிய குற்றவாளி என, எவர் எவரைப் பிரிக்கின்றனர்?
'பிக் - பாக்கெட்' செயின் பறிப்பு, 'மொபைல் போன்' திருட்டு, பைக் லபக் போன்றவற்றை செய்பவர்களை, குற்றவாளிகள் என்றும், நம் நாட்டு வைர வியாபாரி, நிரவ் மோடி, 14 ஆயிரம் கோடி ரூபாயும், 'சரக்கு' தயாரிப்பாளர், விஜய் மல்லைய்யா, 9,000 கோடியும், வங்கிகளிடம் அடித்து, நாடு தப்பி விட்டனரே... இவர்கள், மிகப்பெரிய குற்றவாளிகள்!
ஆனால், இவர்களை இதிலிருந்து காப்பாற்ற, வக்கீல்களும், பணமும் இருக்கின்றனவே!

மை. சத்தியபாரதி, துாத்துக்குடி: சில பிள்ளைகள் பெற்றோரை பார்த்து, 'எனக்கு என்ன செய்தீர்கள்' என, கேட்கின்றனரே... என்ன பதில் சொல்வது?
'உன்னை உலகிற்கு கொண்டு வந்ததே, நாங்கள் தான். 10 மாதம் கஷ்டப்பட்டு சுமந்து, பால் கொடுத்து வளர்த்தவள் நான் தான்... உன்னுடைய நம்பர் 1, நம்பர் 2வை துடைத்து விட்டது நான்...' என, தாயும், 'பள்ளிக்கூடம் அழைத்து போய் விட்டது முதல், உனக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததும் நான் தான்...' என, தந்தையும் சொல்லலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
02-ஜூலை-202022:14:42 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI பெற்றோரிடம் எதிர்த்து பேசும் பிள்ளைகள் பெற்றோரை புரிந்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படியும் புரியவில்லை என்றால் பணம் கொடுப்பதை நிறுத்திவைக்க வேண்டும்.
Rate this:
Cancel
stalin - madurai,இந்தியா
29-ஜூன்-202017:35:32 IST Report Abuse
stalin யார் சொன்னது ஆசிரியர்கள் எல்லாம் பாடம் மட்டும் நடத்த வேண்டும் என்று எலக்சன் டியூட்டி, மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லாம் ஆசிரியர்கள் தானே செய்கிறார்கள். அது போல சும்மா சம்பளம் வாங்கி கொண்டு வீட்டில் டிவி பார்க்கும் ஆசிரியர்களை, வீடு வீடா சென்று கொரோனா கணக்கெடுக்கும் பணி, இன்னும் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளை ஒழுங்கு படுத்தும் பணி போன்றவைகளை அரசு வழங்கலாமே
Rate this:
Manian - Chennai,இந்தியா
29-ஜூன்-202022:53:18 IST Report Abuse
Manianகோட்டா வியாதிகள் ஓட்டா போட்டு ஆசிரியர்கள் ஆனார்கள்? மாமூல் கிடைக்கும் என்றால் இதே ஆசிரியர்கள் தங்கள் வீட்டுக்கே மக்களை, டியூசன் சென்டர் போல் வரவழைத்து சென்செஸ் எடுப்பார்களேவேலை செய்யவா, தகுதி இல்லை என்றாலும் மாமூல் மூலம் ஆசிரியர்கள் ஆனார்கள்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X