திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
00:00

'பிசினஸ் ஸ்டாண்டர்டு' பத்திரிகையில் வந்த செய்தி: பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா?
சமீபத்தில், பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், 'கொரோனா' வைரஸ் தொற்றால் அவதிப்பட்டார். கவலைக்கிடமான நிலைக்கு பின், குணமானார். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட போது, 'இவர், தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்து மீண்டார், நேய்தொற்று ஏற்பட்ட போது, போரீஸ், பிரதமர் பதவி வகிப்பது சரியா...' என, கேள்வி எழுந்தது.
'தற்போது, உலக யுத்தம் போன்று எதுவும் நடக்கவில்லை என்றாலும், 'கொரோனா' சார்ந்தே பல முடிவுகளை, எடுக்கப்பட வேண்டியவர், பிரதமர். இப்படி முடங்கலாமா...' என்றனர், வல்லுனர்கள்.
இப்படி, மிக பிரபலங்களின் நோய் பற்றி, நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமா என்ற, கேள்வியும் எழுந்தது. இதற்கு முன்பும் இதுபோல் பல தலைவர்களுக்கு வந்த நோய் பற்றிய செய்தி, ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதுபற்றி, இப்போது வெளியாகி உள்ளது.
* பிரிட்டனில், வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது, அவருடைய டாக்டராக, லார்ட் மாறன் என்பவர் இருந்தார். இவர், 1960ல், தன் நினைவுகளை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டார். அதில், 1942ல், சர்ச்சிலுக்கு, 'ஸ்டிரோக்' மற்றும் 'ஹார்ட் அட்டாக்' வந்தது. ஆனால், அது வெளிப்படுத்தப் படவில்லை
அந்த சமயத்தில், இரண்டாம் உலகப் போர் துவங்கியிருந்தது. சர்ச்சிலின் நடவடிக்கைகள், 'சூப்பர் மேன்' அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டன. ஆனால், இதை, 1960ல், டாக்டர், தன் புத்தகத்தில் குறிப்பிட்டபோது, 'ஒரு பிரபலத்தின் உடல்நிலை பற்றி, அப்படி எப்படி எழுதலாம்...' என, பலர் கோபம் அடைந்தனர்
சர்ச்சில் ஒன்றும் கூறவில்லை. மேலும், சர்ச்சில், 1965ல் தான் இறந்தார். இதனால், விஷயம் பெரிதாகாமல் அமுங்கி விட்டது
* ஜெர்மன் சர்வாதிகாரி, ஹிட்லருக்கு, மேகப்புண் என்ற நோய் இருந்தது. இதனால், மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். 1943ல், பல தவறுதலான முடிவுகளை எடுத்து, பலரது உயிருக்கு வேட்டு வைத்தார். இதுபற்றி பலர் விரிவாக எழுதியுள்ளனர்
* அமெரிக்க முன்னாள் அதிபர், ப்ராங்க்ளின் ரூஸ்வெல்டுக்கு, புகை பிடித்ததால் ஏற்பட்ட இதய நோய், 1940ல் இருந்தது. ஆனால், இது வெளியிடப்படவே இல்லை. 1945ல், தீவிர, 'ஹார்ட் அட்டாக்' வந்து காலமானார்
* ரஷ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலினும், புகை பிடிப்பவர் தான். ஆனால், அவர் பற்றிய உடல் ரகசியங்கள், அவர் உயிரோடு இருந்தபோதும், இறந்த பிறகும் பேசப்பட்டதே இல்லை; மருத்துவர்களும் வெளிப்படுத்தியதே இல்லை. அவர் இறந்து, பல ஆண்டுகளுக்கு பின், அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர், பேச்சுவாக்கில் கூறினார்
* சீன கம்யூனிஸ்ட் தலைவர், மாசேதுங் பற்றி, லிசிக்யூயி என்பவர், ஒரு புத்தகம் எழுதியுள்ளார். மாசேதுங், உலக அளவில் எந்த பிரச்னைகளிலும் சிக்கவில்லை. இருந்தும், 1970 - 76ல், அவர் இறக்கும் வரையில், அவர், உடல் நிலை பற்றிய ரகசியம் வெளியிடப்படவே இல்லை
கடந்த, 1971ல், அமெரிக்க ஜனாதிபதி, ரிச்சர்ட் நிக்சன், சீனா வந்த போது, அவரிடம் மாசேதுங் உடல் நிலை பற்றி தெரிவிக்கப்பட இல்லை
* இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோதும், பிறகும், முகமது அலி ஜின்னா, எப்போதுமே உடல்நிலை சரியில்லாதவராகவே இருந்துள்ளார். ஜல் ரத்தன்ஜி படேல் என்பவர் தான், அவருடைய குடும்ப டாக்டர். அவர் ஒருபோதும், ஜின்னா உடல்நிலை பற்றி அறிக்கை வெளியிட்டதே இல்லை.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
30-ஜூன்-202022:50:15 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI மரணம் மட்டுமே மனிதனை வெல்லும் என பல இடங்களிலும் இந்த வாசகம் எழுதப் படிக்கத் வேண்டும். பணம் , பதவி, அரசியல் மற்றும் ஆள் பலம் என்று எத்தனை இருந்தாலும் மரணம் வரும் நிலையில் இந்த உலகமே நம்மை எப்படி பேசும் நாம் எப்படியாவது பிழைக்க முடியுமா . நமக்கு பின்னர் யார் ??? இந்த கேள்விக்கு பதில்.... தெரியுமா என்பது தெரியாது. நமக்கு பிறகு யாரோ அடித்து கொள்ள ட்டும். இந்நிலையில்நேற்று ... இன்று ...நாளை... அனைவருக்கும் ஒன்றேதான். கடைசியில் சாம்பல்.. தென்னாடுடைய சிவனே போற்றி
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
29-ஜூன்-202010:28:37 IST Report Abuse
Manian நாற்காலி காலியான, யாரு அதை முதலில் பிடிப்பார்கள் என்ற ரகசிய உளவு அவர்களிடம் இருந்தது. நாட்டையே விற்று விடுவார்கள், தங்களுக்கு விஷம் வைத்து கொல்வார்கள், சாவிலும் மரியாதை கிடைக்காத பயமே காரணம் என்கிறார் ஒரு சரித்திர ஆராய்ச்சியாளர். இவர்கள், ரகசியம் காக்க உயில் கூட எழுதமாட்டார்களாம்.
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
28-ஜூன்-202019:26:34 IST Report Abuse
கதிரழகன், SSLC பதினஞ்சு சதவீதமே இம்புட்டு தெனாவட்டு. பாகிஸ்தான் அரபி அடிமைகளை செந்திருந்தா ... அய்யய்யோ இந்நேரம் நம்ம நாட்டை முழு அடிமையா ஆக்கி பாகிஸ்தான் மாதிரி ஆக்கி இருப்பாங்க ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X