சிரிக்க கற்றுக் கொள்வோம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
00:00

ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்!

சிரிக்காதவனையும் சிரிக்க வைப்பது, ஒரு நல்ல நகைச்சுவை. தென் மாநிலங்களில், சர்தார்ஜி ஜோக்ஸ், வட மாநிலங்களில், மதராசி ஜோக்ஸ். சமீப காலமாக, ரஜினி கிண்டல் ஜோக்ஸ், அகில இந்திய அளவில் உலா வருகிறது.
வெளிநாடுகளிலும், ஒரு நாட்டை மற்றொரு நாடு மட்டம் தட்டுவது சகஜம்.
* அமெரிக்காவுக்கு, மெக்சிகோ என்றால் மட்டம்
* இங்கிலாந்துக்கு, அர்ஜென்டினா என்றால் மட்டம்
* கனடா, பிரேசில் நாடுகள், கஞ்ச பிசினாறி. மூளையை உபயோகிப்பது மிகவும் குறைவு
* கம்யூனிசத்தை, சோஷலிச நாடுகள் கிண்டலடிப்பதை வாழ்நாள் சாதனையாக செய்கின்றன. இந்த வகையில், அனைவரையும் இணைப்பது நகைச்சுவை. இதனால், சர்வதேச நகைச்சுவை தினம், ஜூலை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பல நாட்டு நகைச்சுவைகளை பற்றி அறிந்து கொள்ள, நாம் ஒரு வலம் வருவோம்:
* 'மெக்சிகோ, இதுவரையில், ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில், ஒரு பதக்கம் கூட வென்றதில்லை!'
'ஏன்?'
'நல்லா ஓடறவங்களெல்லாம், அமெரிக்காவுக்கு ஓடிப் போயிடறாங்களே!'
* 'மெக்சிகோகாரங்க, அமெரிக்காவுக்கு ஓடி விடுவது போல், கனடாவுக்கு போவதில்லையே... ஏன்?'
'அது, ரொம்ப துாரம்!'
* ஒரு பாகிஸ்தானியர் மற்றும் ஒரு இந்தியர், லாகூரில், மது கடையில் சேர்ந்து மது அருந்தியபோது, அவர்களிடையே சண்டை வந்தது. நீதிபதியிடம் அழைத்துச் சென்றது, போலீஸ்.
நீதிபதி: இன்று, ஜின்னா நினைவு நாள். அதனால், கசையடியை, 20 ஆக குறைக்கிறேன். உங்களுக்கு, ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள்?
பாகிஸ்தானி: என் பின்னால், இரண்டு தலையணைகளை கட்டி விட்டு அடியுங்கள்!
தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தியர்: நான், 100 கசையடி கூட வாங்க தயார்!
நீதிபதி: நல்லது... உன் ஆசை என்ன?
இந்தியர்: என் முதுகில், அந்த பாகிஸ்தானியை கட்டிவிட்டு அடியுங்கள்!
* ஒரு அமெரிக்கனும், ரஷ்யனும், தங்கள் நாடுகளில் எதில் சுதந்திரம் அதிகம் என, பேசிக் கொண்டிருந்தனர்.
அமெரிக்கன்: நான், இப்போ நேரா வெள்ளை மாளிகை வாசலுக்கு போய், 'டொனால்ட் டிரம்ப் ஒழிக'ன்னு கத்தினாலும் எனக்கு ஒன்றும் நடக்காது'
ரஷ்யன்: நானும், இப்போதே நேராக, கிரெம்ளின் மாளிகை முன் நின்று, 'டொனால்ட் டிரம்ப் ஒழிக'ன்னு, கத்தினால், எனக்கும், ஒன்றும் நடந்து விடாது!
* ஒரு சீனாக்காரரும், ஒரு பிரிட்டிஷ்காரரும், ஹாங்காங்கில் ஒரு பெரிய வணிக வளாகத்துக்கு சென்றிருந்தனர். அங்கு, மையத்தில் ஏராளமான கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
'இந்த கொடிகளையெல்லாம் பார்த்தா, எனக்கு பெருமையாக இருக்கு...' என்றார், சீனாக்காரர்.
'அதெல்லாம் வேற நாட்டு கொடிகள்!'
'இருக்கலாம். அதில், லேபிளை பாருங்க... எல்லாம் சீனாவில், 'பிரின்ட்' ஆனது!'
* 'பேசும் நாய் விற்பனைக்கு' என, ஒரு வீட்டு வாசலில் எழுதியிருந்தது.
ஆச்சரியமடைந்த ஒருவர், உள்ளே சென்று, 'உங்க நாயுடன் பேசலாமா...' என, கேட்டார்.
'ஆஹா...' என்றார், வீட்டுக்காரர்.
'நீ... உன் வாழ்க்கையில் செய்த சாதனைகளை சொல்?'
'எங்க தெருவில் பல மாடி கட்டடம் ஒன்று இருந்தது. திடீரென ஒருநாள், அது இடிந்து விழுந்து, பலர் சிக்கிக் கொண்டனர். உடனே அங்கு சென்று, மோப்பம் பிடித்து, பலரை காப்பாற்றினேன்!'
'பிறகு...'
'ஒரு சமயம், என் முதலாளியின் மனைவியிடம், ஒரு திருடன் கத்தியை காட்டி மிரட்டி, பணம், நகைகளை பறித்துக் ஓடினான். உடனே, அவனை துரத்திச் சென்று, கவ்வி, பறித்த நகை, பணத்தை கீழே போடச் சொன்னேன்!'
திகைத்தவர், வீட்டுக்காரரிடம், 'பிறகு ஏன் சார், இந்த நாயை விற்கறீங்க?'
'அது, வாயை திறந்தாலே பொய்... உங்ககிட்ட கூறின எதுவும் நடக்கவேயில்லை; போதுமா...' என்றார், வீட்டுக்காரர்.
* டாக்டரிடம், ஒருவன்: எப்பவும், 'உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக'ன்னு, பாடிக்கிட்டே இருக்கேன்... ஒருவேளை, எம்.ஜி.ஆர்., என் உடம்பில் புகுந்திருப்பாரா?
டாக்டர்: டி.எம்.சவுந்தர்ராஜனாகவும் இருக்கலாமே!
* விமானத்தில், ஒருவர், தனக்கு இரண்டு சாப்பாடு வேணும்ன்னு கத்திக்கிட்டிருந்தார்.
'அது, கனடாக்காரர்!'
'எப்படி கண்டுபிடிச்சே?'
'குண்டா இருக்கார்னு இரண்டு சீட்டு வாங்கினாராம். அதுக்கு, இரண்டு சாப்பாடு கொடுன்னு கேட்கிறார்!'
* நடு தெருவில் ஒரு ஆள் மீது, ஒரு கார் பயங்கரமாய் மோதியது. திகைத்த சொந்தக்காரர், போராடி, மோதிய ஆளை வெளியே இழுத்து, 'எங்கே இருக்கீங்க'ன்னு கேட்டார்...
'சொர்க்கத்துக்கு போய், கால் மணி நேரமாச்சு...' என, பதில் வந்தது.
* ஒரு தீவில் மூன்று பேர் பேசிக் கொண்டனர். ஒரு விளக்கு இருந்தது.
முதலாமவர் அதை கையில் எடுத்தபோது, 'உனக்கு, என்ன வேண்டும் கேள்... செய்கிறேன்...' என்றது.
'நான், என் வீட்டிற்கு உடனே திரும்பிச் செல்ல வேண்டும்!'
உடனே, அந்த ஆள் மறைந்து போனான்.
அடுத்தவன் விளக்கை எடுத்து, 'நானும், அவனை போல், என் வீட்டிற்கு செல்ல வேண்டும்...'
அவனும் மறைந்து போனான்.
மூன்றாவது நபர், விளக்கை எடுத்து, 'எனக்கு, தனியா போரடிக்குது... அந்த இரண்டு பேரையும் இங்கே திரும்ப கொண்டு வந்தா போதும்!'
- இதுபோல், உங்களுக்கு தெரிந்த நகைச்சுவைகளை நண்பர் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து, நகைச்சுவை தினத்தை கொண்டாடி மகிழுங்கள்.

ஆர். திலீப்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
02-ஜூலை-202000:12:05 IST Report Abuse
Manian நேற்று குர்மீந்தர் செல்லடிச்சாரு. ஏங்க தாடி, மீசையை என்ற 5 குணங்கள் இல்லாத, ஒருவர் சர்தார்ஜின்னு எப்பிடிகண்டுபுடிப்பிங்க?. இதோ என்றார்.(1) சாதாரணமாக நாக்கில் வலது கை ஆள்காட்டி விரலால் தோட்டு அந்த ஈர விரலாலே ஒரு புத்தகப் பக்கங்களை புரட்டுவோம். நம்ம கிளீன் ஷேவன் சர்தார்ஜி, இடது ஆள்காட்டி விரலை நக்கிக்கொண்டே வலது ஆள் காட்டி விரலால் புத்தக பக்கத்தை புரட்டுவார். (2) முதுகை சொரிய கையை சொரிந்து அந்த கையால் முதுகை தொடுவார்.(3) 3வது பௌதீக விஞ்ஞான விதி சமன்பாடின் படி- எதற்கும் எதிரான அதே பலம் உள்ள சக்தி உண்டு என்பதால் முகத்தை விசிறியால் வீசிக் கொள்ளாமல், கையில் விசிறி பிடித்து அதன் முன் தலையை ஆட்டுவார்.(4) (இதை முன்பு மைகூட்டில் பேனாவை தொட்டு எழுதி, பிளாடிங்கக் பேபப்பரால் ஒத்தி மையை உலர வைத்தவர்களுக்கே பொருந்தும்)-பிளாடிங் பேபப்பரில் (மை உறிஞ்சி) எழுதி அதை காகிதத்தில் ஒத்துவார். (5) இதை அரசாங்க பஸ்ஸில் நின்று கொண்டே செல்பவர், டிக்கட் வாங்க, நடதத்துனரிடம், மணி பர்சை எடுத்து காசை எடுத்து டிக்கட் வாங்க எனக்கு இரண்டு கையும் வேண்டுமே என்பார், தயவு செய்து எனக்கா மேல் பிடி பட்டையை பிடியுங்கள், . இதில் கடைசி ஒன்றே தீர்மானமான நிரூபணம் (Confirmation Test) என்றார்.தற்போது ஆட்டோவுக்கு தலைகவசம் பூட்டி வெரும் தலையோடு ஓட்டுபவர்களும் கிளீன் ஷேவன் சர்தாரர்ஜிகளோ என்று தோன்றுகிறதே
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
30-ஜூன்-202022:00:40 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI சிரிக்க வைக்க பல சிரிப்புகள் இருந்தாலும்கூட நான் சிரிக்க மாட்டேன்னு சொல்லுகிறவர்கள் நிறையபேர் உள்ளனர். ஆனால் சிரிப்பு நம் உடம்பில் உள்ள அத்தனை நாடி நரம்புகளில் உள்ள செல்களை இயக்கம் செய்து மனதிற்கு பிடித்தமாதிரி செயல்பட வைக்கும். சினிமாவில் நம்மை சிரிக்க வைக்கும் நடிகை நடிகர் அனைவருக்கும் இக்கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
30-ஜூன்-202011:13:39 IST Report Abuse
Manian டைரி ஜோக் 197: இது சர்தார்ஜிகளின் தர்க்க சிந்தனையை காட்டுவது- ஒரு சர்தார்ஜியை நாலு பேர்கள் அடித்து நொருக்கினார்களாம். சர்தார்ஜி வாய் விட்டு ஹஹ்ஹா என்று சிரித்துக் கொண்டிருந்தாராம். அடித்தவர் சென்ற பிறகு இன்னொரு சர்தார்ஜி அவரிடம் ஏன் கூக்குரல் இடவில்லை, யாரையும் உதவிக்கு கூப்பிட வில்லை என்று கேட்டார். முதல் சர்தார்ஜி சொன்ன பதில்.என் பெயர் ஹர்பான் சிங். அடித்தவர்கள் என்னை அர்ஜுங்க் சிங் என்று அடித்தார்கள். கடைசியில் அர்ஜுன் ஜாக்ரதை என்று சொன்னார்கள்.,எப்படி நான் என் பெயர் சொல்லாமல் ஏமாற்றி விட்டேன்,அவர்கள் ஏமாந்ததை நினைத்துதான் சிரித்தேன்.2வது சர்தார்ஜியிடம் ஹர்பான் சிங் கேட்டாராம்: அது சரி, நீங்கள் ஏன் என்னைக் காப்பற்ற முயர்ச்சிக்க வில்லை? அரே ஹர்பான் நான் இங்கிலாந்தில் இருக்கிறேன். அங்கே அறிமுகம் இல்லாமல் தண்ணீரில் மூழ்குபவரைக் கூட காப்பாற்ற மாட்டோம். முறையாக மூழ்குபவரை யாராவது முதலில் அறிமுகப்படுத்த வேண்டும். இல்லை, அவர் தன் பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்தி கொண்ட பின், காப்பாற்றுங்கள் என்று உதவிக்கு அழைக்க வேண்டும். நீ கூட என் பெயர் ஹர்பன் சிங், காப்பாற்றுங்கள் என்று சுய அறிமுகம் செய்து கொண்டு உதவிக்கு கூப்பிடவில்லையே, பிரிடிஷ் பாஃர்மால்டி மிக அவசியம், என்று கூறி அங்கே இருந்து நகர்ந்தாராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X