பெண் என்றால் இளக்காரமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
00:00

தென் அமெரிக்க நாடான பெருவில், லிமா என்ற நகரில்,
லா ரோசா நாடிகா என்ற பிரபலமான ஓட்டல் செயல்பட்டு வருகிறது; பணக்காரர்களுக்கான ஓட்டல் இது. இந்த ஓட்டலுக்கு, ஒரு இளம்பெண், தன் காதலருடன் சாப்பிடச் சென்றார். அங்கு வந்த ஊழியர், இருவருக்கும், ஓட்டலில் என்னென்ன உணவு வகைகள் உள்ளன என்பதை குறிப்பிடும், 'மெனு கார்டை' கொடுத்தார்.
இளம் பெண்ணுக்கு கொடுத்த, 'கார்டில்' உணவு பொருட்களின் விலை குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவரது காதலருக்கு கொடுக்கப்பட்டதில், விலை குறிப்பிடப்பட்டிருந்தது.
ஓட்டல் முதலாளியிடம், 'இப்படி வெவ்வேறு, 'கார்டு'களை ஏன் தருகிறீர்கள்?' என, இளம்பெண் கேட்டார்.
அதற்கு அவர், 'இங்கு ஜோடியாக வருவோரில், ஆண்கள் தான், 'பில்'லுக்கு பணம் செலுத்துவர். பெண்கள், சாப்பிடுவதுடன் சரி; பணம் தருவது இல்லை. எனவே, ஜோடியாக வருவோரில், பெண்களுக்கு தரும், 'மெனு கார்டில்' விலையை குறிப்பிடுவது இல்லை...' என, கிண்டலாக பதில் அளித்தார். அந்த பெண்ணுக்கு அவமானமாகி விட்டது.
பெண்களை அவமதிப்பதாகவும், பாரபட்சம் காட்டுவதுமாகவும் கூறி, ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த இளம் பெண்ணுக்கு, 50 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்தும்படி, ஓட்டல் நிர்வாகத்துக்கு, கோர்ட் உத்தரவிட்டது. பெண்களை இளக்காரமாக கருதிய ஓட்டல் உரிமையாளர், அபராதத்தை செலுத்தி, அழுது புலம்புகிறார்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
29-ஜூன்-202009:44:29 IST Report Abuse
Manian இந்த உரிமையாளரிடம், தனியாக ஒரு பெண், அல்லது இரண்டு பெண்கள் உணவருந்தவந்தாலும் விலைப் பட்டியல் தரமாட்டீர்களா என்று யாரும் கேட்கவில்லை போலும்.ஒரு கடையில் 2 நண்பர்களுடன் டீ குடிக்க நேர்ந்தது. நான் உரிமையாளரிடம், 3 கண்ணாடி தம்ளர்ரிலே டீ தாருங்கள் என்றேன். நீங்க இங்க உக்காருங்களேன் எவர்சில்வர் கப்பில் டீ தருகிறேன் என்றார்.வேண்டாம் அவுங்கதான் எனக்கு படி அளக்கிறாங்க.அவுங்க காசை கொடுக்கும் போது,அந்தகாசிலே ஜாதிக்காசுன்னு தனியா இல்லையே, அப்ப அவிங்களோடுதான் ஒக்காரணும்னேன்.மனத்தில் ஜாதி துவேஷம் இருப்பவர்கள் வியாபரத்தில் நஷ்டம் அடைவார்கள்.பெண் துவேஷமும் ஒருவித ஜாதி(பெண் ஜாதி) தோஷம்தான். மேல் நாடுகளில் இது இனவெறி.சுலபமாக மாறது.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
28-ஜூன்-202018:43:16 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI பெண் என்று கூறி விலை பட்டியல் தரமறுத்தது தவறு என்று இப்போதாவது உணர்ந்து செயல்பட வேண்டும் அவர். தவறை தெரிந்து செய்தால் அது தப்பு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X