இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலை...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
00:00

நம் அண்டை நாடான சீனாவில் செயல்படும் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது வழக்கம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களை, கரப்பான் பூச்சியை சாப்பிட வைக்கும் தண்டனை எல்லாம் கொடுப்பர்; இது, சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சீனாவின் பீஜிங் நகரில் செயல்படும் ஒரு அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், அதிக பொருட்களை விற்ற, தங்கள் ஊழியர்களை வித்தியாசமான முறையில் கவுரவித்துள்ளது.
அதிகமான பொருட்களை விற்ற ஊழியர்களை, அலுவலகத்தில் உள்ள ஒரு மேடையில் அமர வைத்து, அவர்களின் கால்களை துடைத்து, சுத்தம் செய்து, கவுரவித்தனர். ஊழியர்களின் கால்களை சுத்தம் செய்தவர், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான். இந்த விபரம் தெரியவந்ததும், அந்த நிறுவனத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்தது.
அந்த நிறுவனத்தின் ஊழியர்களோ, 'நன்றாக வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையோ, போனசோ கொடுத்திருந்தால், பயனுள்ளதாக இருந்திருக்கும். கால்களை சுத்தம் செய்வது எல்லாம் விளம்பரத்துக்காக... இதனால், எங்களுக்கு ஒரு பைசாவுக்கு கூட பயன் இல்லை...' என, புலம்புகின்றனர்.
- ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
29-ஜூன்-202023:55:03 IST Report Abuse
Manian நல்ல வேளை, முன் காலத்தில் பெரியோர்களின் காலை தாம்பாளத்தில் அலம்பி, அந்த நீரை புண்ணியம் என்று எண்ணி தலையில் தெளித்துக் கொள்வார்கள். அது போல் இவர்கள் புகழும் வேலையாட்கள் கால் கழுவின நீரை மற்றவர்கள் தங்கள் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லையே என்கிறார் நண்பர் நல்லதம்பி.அதை விடுங்க, மற்றவர்கள் அந்த நீரை குடிக்க வேண்டும் என்று சொல்லவில்லையே என்கிறாள் என் இல்லத்தரசி. ஆசிரிய நண்பர் எப்போதும் கிள்ளியாரோ, நல்ல காலம், இந்த சீனர்கள், சமிஸ்கிருதம், தமிழ் கதைகளைப் படித்து நமது நாகரீகத்தை முழுவதும் காப்பி அடிக்கவில்லையே தமது போகரை, போக்யாங் என்று பெயர் மாற்றி, அவர் கற்றுத்தந்த வர்ம பிடியை/கலையை இறக்குமதி செய்து, அக்குபங்சர் என்ற பெயரில் உலகெல்லாம் ஏற்றுமதி செய்வது விற்பது போல காலலும்பிய நீரையும் பாத-பஞ்சக ரோக நிவாரிணி என்று நமக்கு ஏற்றுமதி செய்து.விக்க வில்லையே என்கிறார். எல்லாமே எனக்கு கிலியூட்டுகிறதே
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
28-ஜூன்-202018:56:43 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI வேலை செய்யும் இடத்தில் ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சேர்த்து நன்கு அவர்களை பாராட்டி பேசினால் மேலும் ஒருபடி வேலை செய்ய தூண்டும். அதைவிடுத்து சரியாக வேலை செய்ய வில்லை என்றால் கரப்பான் பூச்சிகளைை சாப்பிட செல்வதிலும் சரியாகச் செய்து முடித்தால் பாதுகா பூஜை செய்வதிலும் இல்லை. பரிந்து கொள்ளுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X