வயிற்று கோளாறும் வைரஸ் பாதிப்பாக இருக்கலாம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2020
00:00

கொரோனா வைரஸ் நம் உடலினுள் செல்லும்போது, ரீசபட்டார்கள் எனப்படும் ஏற்பிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள செல்களின் உள்ளே ஒட்டிக் கொள்ளும். செல்களுக்கு கிடைக்கும் நுண்ணுாட்ட சத்தை இவை எடுத்துக் கொண்டு, பல்கி பெருகி வளர ஆரம்பிக்கும்.
கொரோனா வைரஸ் வளர ஏதுவாக நுரையீரலில் உள்ள ஏற்பிகள் போன்றே, சிறுகுடலில் கீழ் பகுதியில் ஏற்பிகள் உள்ளன.
இதனால், மூக்கு, வாய் வழியே செல்லும் வைரஸ் கிருமி, தொண்டையில் தங்கி, ஓரிரு நாளில், சுவாச குழாய் வழியே நுரையீரலை பாதிப்பது போன்றே, ஜீரண மண்டலத்தையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

சுவாச கோளாறு
கடந்த நான்கு மாதங்களில், சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுவது, எழு - எட்டு சதவீதம் உள்ளது. நம் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால், 20 சதவீதம் பேர், ஜீரண மண்டல பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
இதற்கு காரம், நுரையீரலில் இருப்பதை போது ஏற்பிகள் சிறுகுடலில இருப்பது தான்.
கடந்த ஒரு மாதத்தில், வாயு பிரச்னைக்காக என்னிடம் ஆலோசனைக்கு வந்தவர்களில், ஐந்து பேருக்கு, சுவாச கோளாறு, காய்ச்சல், உட்பட கொரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் இல்லாமல், வைரஸ் பாதிப்பு இருந்து உறுதியானது.
மலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய, நம்மிடம் தொழில்நுட்ப வசதிகள் இல்லை. வழக்கமாக இந்த வைரஸ் தொற்றுக்கு செய்யப்படும், மூக்கு, தொண்டையில் இருந்து எடுக்கப்படும் சளி பரிசோதனை மூலம் இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
எதிர்பாராத வயிற்று வழி, வயிறை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு, வயிற்று போக்கு, அடிக்கடி மலம் கழிப்பது போன்றவை வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
இது தவிர, நன்கு படிக்கும் ஒருவருக்கு, பசி உணர்வு இல்லாமல் போவது, வாயு பிரச்னை அதிகம் இருப்பது, போன்றவையும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்
இந்த அறிகுறிகள் எல்லாம், சாதாரணமாக ஏற்படும் வயிறு பிரச்னையாகும் வரலாம். ஆனால், வைரஸ் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் இந்த நிலையில், வைரஸ் பாதிப்பாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
குழந்தைகளை பொறுத்தவரை நுரையீரல் சம்பந்தமாகவும், ஜீரண மண்டலம் தொடர்பாகவும் வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. கொரோனா வைரஸ் பாதித்தால் இன்னின்ன அறிகுறிகள் தான் இருக்கும் என்று இதுவரையிலும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.
அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுகிறது. நுரையீரலில் பாதிக்கிறது; ஜீரண மண்டலத்தையும் தாக்குகிறது; அதே நேரத்தில் எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கிறது.
வயிற்றில் வைரஸ் தாக்கம் இருக்கும் இரு நபர்களில், ஒருவருக்கு, வயிற்று போக்கு மற்றவருக்கு வாந்தி வரும் உணர்வும் அறிகுறிகளாக உள்ளது.
வயிறு பிரச்னைகளும் வரும் நபருக்கு, இன்னின்ன கோளாறுகள் இருக்கலாம் என்று பொதுவாக டாக்டர்கள் சந்தேகிக்கும் நோய்களில் தற்போது, கொரோனா வைர சையும் வைத்துள்ளோம். அதற்கான பரிசோதனையும் செய்து விடுகிறோம்.

ஆலோசனை
வைரஸ் பாதித்த ஒருவர் பயன்படுத்திய பொருளை தொட்டு, கைகளை சுத்தம் செய்யாமல், அப்படியே உணவு சாப்பிட்டால் வயிற்றுக்குள் தொற்று சென்று விடலாம்.
தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வயிற்று பிரச்னை, அலர்ஜி இருந்தால், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது இந்த சூழ்நிலையில் அவசியம்.
வழக்கமாக வைரஸ் பாதிப்பிற்கு தரும் சிகிச்சையுடன் சேர்த்து, ஜீரண கோளாறுக்கும் சிகிச்சை தர வேண்டும்.

டாக்டர் தீபக் சுப்ரமணியன்
ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர்,
எம்.ஜி.எம்., ஹெல்த் கேர்,
சென்னை. 044 - 4524 2424

Advertisement

 

மேலும் நலம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
01-ஜூலை-202017:31:16 IST Report Abuse
sundarsvpr அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பேய் போல் கொரோனா பாதிப்பை மருத்துவர்கள் கூறுவது நம்முடைய மனசு உடைந்துவிடும். நாம் உபயோகிக்கும் எல்லாமே உடலை பாதிக்கும்.
Rate this:
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
01-ஜூலை-202015:46:59 IST Report Abuse
B. இராமச்சந்திரன் இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், இருந்தும் தெரியாமல் இருக்கலாம், இல்லாமலும் இருப்பது போன்று இருக்கலாம்... உங்க விளக்கத்துக்கு கொரோனாவே மேல்...
Rate this:
Cancel
Uthiran - chennai,இந்தியா
01-ஜூலை-202011:17:10 IST Report Abuse
Uthiran இனிமே உடம்புல என்ன பிரச்னை வந்தாலும் அது கொரோனா அறிகுறி என்று அலோபதி மருத்துவர்கள் கதை கட்டி விட ஆரம்பிப்பார்கள். இல்லேன்னா அலோபதி மருத்துவர்கள் பொழப்பிற்ற்கு என்ன பண்றது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X