இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
00:00

பட்டிமன்றங்களில் கலக்கும், திருநங்கையர்!
பொதுவாக, திருநங்கையர் என்றாலே, ஒதுக்கப்பட்டவர்களாகவே கருதப்படுகின்றனர்.
தற்சமயம், சமூகத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரம், பரவலாக கிடைக்கத் துவங்கி விட்டது. இதனால், தடைகளை உடைத்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, சாதனையாளர்களாக வெளிவர துவங்கியுள்ளனர்.
அந்த வகையில், எங்கள் பகுதியில் உள்ள, படித்த திருநங்கையர் சிலர், பட்டிமன்ற குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர். முத்தாய்ப்பான தலைப்புகளை தேர்ந்தெடுத்து, கோவில் விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகளில், சிரிக்கவும், சிந்திக்கவும்படியான கருத்துக்களோடு பேசி வருகின்றனர்; கை தட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்று, புகழடைந்து வருவதோடு, வருமானமும் ஈட்டி வருகின்றனர்.
பிச்சை எடுக்காமல், முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடாமல், முன்னோடி திருநங்கையர்களாக கலக்குகின்றனர். இவர்களை போன்றே, மற்ற திருநங்கையரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் அள்ளலாமே!
எச். சண்முகசுந்தரம், சேலம்.

சிறுமிகளே உஷார்!
எங்கள் குடியிருப்பில், சிறிய மளிகை கடை ஒன்று உள்ளது. அதன் உரிமையாளர், வயது, 60. உதவிக்கு இருக்கட்டுமென்று, சகோதரியின் மகனான இளைஞனை, உடன் வைத்திருந்தார்.
வியாபாரம் சுறுசுறுப்பாக இல்லாத மதிய வேளையில், அருகில் உள்ள, அவர் வீட்டிற்கு, ஓய்வெடுக்க சென்று விடுவார், உரிமையாளர்.
அவர் சென்ற பின், தனியாக இருக்கும் இளைஞன், அந்த நேரத்தில் கடைக்கு வரும் சிறுமியருக்கு, சாக்லேட் ஆசை காட்டி அழைத்து, 'சில்மிஷ'த்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தான்.
ஒருநாள், அந்த இளைஞன், ஒரு சிறுமியிடம், 'சில்மிஷ'த்தில் ஈடுபட, அது கத்தி கூச்சலிட்டதில், கூட்டம் கூடியது. அவனை, நையப்புடைத்து, காவல் நிலையத்திற்கு அனுப்ப முயல, சிறுமியின் எதிர்காலம் கருதி, அவள் பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க, கடையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டான்.
என்னதான் கடுமையான சட்டங்களின் மூலம், அரசு தண்டித்து வந்தாலும், இப்படிப்பட்ட காமுகர்கள் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
இதை உணர்ந்து, பெண் பிள்ளையை பெற்றவர்கள், எங்கும், எப்போதும், எவரிடத்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை, எடுத்துக் கூறி வளர்ப்பது நல்லது.
- வி. சங்கர், சென்னை.

நுாலகரின் சேவை!
எங்கள் பகுதி நுாலகர் ஒருவர், தன் பணி நேரம் போக, வீடு வீடாக சென்று, படித்து, வேலை தேடும் இளைஞர்களையும், இளைஞிகளையும் சந்திக்கிறார்; அரசு போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான வழிகாட்டி புத்தகங்களை, தன் சொந்த செலவில் அவர்களுக்கு வாங்கி தந்து, ஊக்குவித்து வருகிறார்.
அவ்வாறு படித்து, அரசு வேலை பெற்றவர்களை, நுாலகத்திற்கு அழைத்து, அனைவரின் முன் பாராட்டி, பரிசுகளை கொடுப்பார். அத்துடன், இவர்களை போலவே, மற்றவர்களும் சாதிக்க, மறைமுகமாக துாண்டி விடுகிறார்.
அவரின் தன்னலமற்ற முயற்சியின் காரணமாக, இன்று, எங்கள் பகுதியில், பலரும் அரசு பணியில் உள்ளனர்.
இவர் போலவே, அரசு பணியில் இருக்கும் ஒவ்வொருவரும், தங்கள் பகுதியில் வேலை தேடுவோருக்கு உதவிடும் வகையில், வழிகாட்டி உதவலாமே!
சி. அருள்மொழி, கோவை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
06-ஜூலை-202019:18:13 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI In the present situation most of the students see unwanted movies. It leads them into unwanted thoughts which leads to do unwanted things with little girls. We cannot stop them. But each and every mother should tell the boys children how they should behave with them. They should be always aware of the boys children . If they deviate from the thoughts at home which means they are not bond with family. Those who do not have attachment with the family go away to all these actions. Parents please aware of your children. Nowadays many are using their mobiles for their classes. Please have an eye on them. moral values should be taught at the young age.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
06-ஜூலை-202019:11:36 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI உழைப்பால் உயர்ந்தோரை எந்த பாலினமாக இருந்தாலும் மதிக்கவேண்டும். அவரை பாராட்டாவிட்டாலும் அவரை இகழக்கூடாது. இவுலகில் குற்றம் நடப்பதற்கு மிகமுக்கிய காரணம் ஒருமனிதனை இன்னொரு மனிதன் மதிக்காததுதான். நம்மை போலத்தான் எல்லோரும் எங்கிற எண்ணம் மேலோங்கினால் அனைத்தும் சரியாகும். இகழ்தல், ஹிம்ஸை செய்தல் , கொடுமை ங்கோல் ஆட்சி இம்மூன்றும் நம்மை அழித்துவிடும்.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
06-ஜூலை-202017:46:38 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் சேர்ந்து வாழ்த்தும். நூலகரின் உதவி பாராட்டப்பவேண்டியஒன்று. ஒவ்வொரு புத்தகமும் மனிதனுக்கு தேவை அதன் மகிமை புரிதவருக்குத்தான் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X