அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
00:00

அன்பு தோழிக்கு —
நான், 55 வயது பெண்மணி. படிப்பு: எம்.பி.ஏ., எனக்கு ஒரு அண்ணன் உண்டு. வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, என்னுடைய, 23வது வயதில் திருமணம் செய்து வைத்தனர். எனக்கு, ஆண் - பெண் இரு குழந்தைகள்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 10 ஆண்டுக்கு முன், குழந்தைகளுடன் அம்மா வீட்டில் தஞ்சமடைந்தேன். படித்த படிப்பு, கை கொடுக்க, 'மார்க்கெட்டிங்' வேலை கிடைத்தது.
வேலைக்கு சென்று, அம்மாவின் துணையோடு, குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தேன்.
அண்ணன் மகனுக்கு, என் மகளை திருமணம் செய்து வைக்க நினைத்தேன். வெளிநாட்டில், 'செட்டில்' ஆன, அண்ணனும், அண்ணியும் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
எல்லாம் முடிந்த நிலையில், என் மகள், 'இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை; நான், வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவரை தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று, குண்டை துாக்கி போட்டாள்.
நான் அனுபவித்த கஷ்டங்களையும், அண்ணன் குடும்பத்துக்கு வாக்கு கொடுத்ததையும் கூறி, அவளை சமாதானம் செய்ய முயன்றேன். எதற்கும் அவள் மசியவில்லை.
சரி... கொஞ்ச நாள் ஆகட்டும், மீண்டும் பேசலாம் என்று, அப்போதைக்கு அதை கிடப்பில் போட்டது தப்பாகி விட்டது.
தான் காதலித்தவனை, யாருக்கும் தெரியாமல், பதிவு திருமணம் செய்து, என் தலையில் மண் அள்ளி போட்டாள். அவளது இச்செயலால், மனம் நொந்து போனேன். மீண்டும் மீண்டும் அதுவே என்னை சுற்றி சுற்றி வந்து வேதனைப்படுத்துகிறது.
இதையறிந்த அண்ணனும், அண்ணியும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், என்னை சமாதானப்படுத்துகின்றனர்.
இத்தனை பெருந்தன்மையுள்ள குடும்பத்தில் வாழ கொடுத்து வைக்கவில்லை என்று நினைத்து, தினமும் அழுது கொண்டுள்ளேன்.
மன நோயாளி ஆகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. இந்த மனப்போராட்டத்திலிருந்து நான் மீண்டு வருவது எப்படி... ஆலோசனை தாருங்கள்.
இப்படிக்கு,
உங்கள் தோழி.


அன்பு தோழிக்கு —
உன்னிரு குழந்தைகளில் பெண் குழந்தை மூத்தவளா, ஆண் குழந்தை மூத்தவனா என்பதை, நீ கடிதத்தில் குறிப்பிடவில்லை. சில வீடுகளில், மகன் மூத்தவனாக இருந்தாலும், மகளுக்கு தான் முதலில் திருமணம் செய்து வைப்பர். ஆகவே, உன் மகன் மூத்தவனாக இருப்பான் என, யூகிக்கிறேன். உன் மகனுக்கு, வயது, 30 இருக்கக்கூடும்.
சமூகரீதியான, சட்டரீதியான ஒப்பந்தமே திருமணம். அது ஆண்களையும், பெண்களையும் சட்ட, பொருளாதார மற்றும் உணர்வு ரீதியாக இணைக்கிறது.
குடும்பம் என்கிற கோவிலின் நுழைவாயில், திருமணம்; அது, ஒரு ஆயுட்கால பந்தம். உன் அண்ணனுக்கும் உனக்குமா திருமணம்...
அண்ணன் மகனுக்கும், உன் மகளுக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டாய். உன் மகள், வேறெருவனை காதலித்து, மணந்து கொண்டாள். ஒரு வேளை, உன் மகள், அண்ணன் மகனை திருமணம் செய்திருந்தால், அவர்களது திருமணம் தோல்வி அடைந்திருக்கலாம்.
அண்ணன் மகனை, மருமகனாக நாம் அடையவில்லையே என, நீ வருத்தப்படலாம். உன் மகளை, மருமகளாக நாம் அடையவில்லையே என, உன் அண்ணன் குடும்பம் வருத்தப்படவில்லை. அவர்கள் வருத்தப்படாதது, அவர்களின் பெருந்தன்மையை காட்டவில்லை. எவனையோ காதலித்தவள் நமக்கு மருமகள் ஆகவில்லையே என்கிற தப்பித்தல், அவர்களது பாவனையில் தெரிகிறது.
உன் மகள், ஒரு தவறானவனையா காதலித்து மணந்து கொண்டாள்... மகளின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக உள்ளதா என, தள்ளி நின்று பார். உன் மகளும், மருமகனும் ஆனந்தமாக வாழ, உன்னாலான உதவிகளை செய். மகளை சபிக்காதே. காதலனை நினைத்துக் கொண்டே உன் மகள், அண்ணன் மகனுடன் ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்திருந்தால், அது நன்றாகவா இருக்கும்...
பிறக்கும்போதே உன் மகளை இடுப்பில் சுமந்து கொண்டேவா பிறந்தாய்... உனது, 24வது வயதில் வந்த உறவு, 55வது வயதில் கையை விட்டு போகிறது; விடு போகட்டும். போகும் உறவு நன்றாக இருக்கட்டும்.
மகளின் திருமணத்தை பற்றியே நினைத்து மனநோயாளி ஆக துடிக்கும் நீ, மகனின் எதிர்காலத்தை பற்றி துளியும் நினைத்து பார்க்க மாட்டாயா... உன்னுடைய உறவுக் கூண்டில் இருந்த கிளி, ஜோடியுடன் பறந்து விட்டது. கூண்டில் மீதி இருக்கும் மயிலை நினைத்து சந்தோஷப்படு. அது தோகை விரித்தாடட்டும்.
மகனுக்கு நல்லதொரு பெண்ணை பார். மகனுக்கும், உனக்கும் பிடித்த பெண்ணாக இருக்கட்டும். மகனின் திருமணத்தை, நீயும், அண்ணன் குடும்பமும் முன் நின்று நடத்துங்கள். திருமணத்திற்கு உன் மகளையும் கூப்பிடு.
வாழ்க்கையில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளையும் தத்துவார்த்தமாக எடுத்துக் கொள்ள கற்றுக் கொள். இதுவும் கடந்து போகும் தோழி.
— -என்றென்றும் அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யார்மனிதன் - Toronto,கனடா
11-ஜூலை-202000:17:23 IST Report Abuse
யார்மனிதன் தந்தை இல்ல வீட்டி கழுதைதான் வளரும்
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
09-ஜூலை-202006:13:40 IST Report Abuse
Manian சுய சிந்தனை இல்லாமல் எம்.பி.ஏ பயன்தராது எம்.பி.ஏயில் தொழில் முறை ஆய்வு (Organization Analysis) என்ற மனோதத்துவ படிப்புண்டே அதன் படி, நீங்கள் பணம் சம்பாதிக்கும் போது உங்கள் பெண்ணுக்கு தாய்-தந்தை இருவரி் முழு அன்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ஏன் புரியவில்லை?படம் கொடி முள் செடி என்றாலும் அதன் மேல் பரவுமே ஒரு பெண்ணுக்கு உணவு, இருப்பிடம், துணிமணிகள் என்ற வசதிகளோடு அன்போடு ஒரு வழி காட்டியும் தேவைமரபணு கோளாறு வருமே என்ற பயமும் இருக்கலாமேஅமெரிக்க பையன் அவளிடம் ஈடுபாடு காட்டினா? நமக்கு தெரியாத, நம்மால் கட்டுப்படுத்த முடியாத காரணத்தைத்தை மகாபாரதம் பூராவும் கிருஷ்னன் காட்டுகிறான்அ தை நீங்கள், தர்க்கம், புள்ளி விவர இயல்Statistical Proabability) என்று படித்தை ஏன் தன் பெண்வாழ்வில் ஏற்படலாம் என்று புரிந்து கொள்ளவில்லை? பெரியோர்களின் அனுபவ பாடங்களை புதிய சொற்களோடு எம்.பி.ஏயில் படித்தால் மட்டும் போதாதது.அண்ணன்-அண்ணிக்கு, மகாபாரத்தில் பலரும் வரும் முடிவுகளை தீர்மானிக்க தீர ஆலோசிக்காமல் , வாக்கு தருவது தவறு என்பதை புரிந்து கொள்ளவில்லையா? வியாசரின் முனைவர் ஆராய்ச்சி கட்டுறை இன்றும் அதே பலன்களையே தருகின்றனவே
Rate this:
Valaikuda Vallal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-202011:21:54 IST Report Abuse
Valaikuda Vallaleppo paarthaalum, kamalhasan padam mathiri, puriyatha baashaiyil pesikittu .......
Rate this:
Manian - Chennai,இந்தியா
10-ஜூலை-202004:38:10 IST Report Abuse
Manianஉங்களுக்கு புரியும் படி சொல்லி தராத தகுதி அற்ற ஆசிரியர்களை குறை கூறுங்கள். மின் வலைத்தளத்தில் ஆங்கில அறிவு மிக்கவர்கள் உதவியுடன் எம்பிஏ சம்பந்த பட்டவற்றை கேட்டு புரிந்து கொள்ளுங்கள். இதோ சிறிது விளக்கம்: வீடோ,தொழில் சாலையோ, அங்கத்தினரின் நிறை குறைகளைப் புரிந்து கொள்வதே வெற்றிதரும். ஏழ்மையிலும் ஒரு பெண் தந்தையின் பாசத்தையும், அவனையே தன் பாதுகாப்பு கவசமாக,மானசீக கதாநயாகனாக எண்ணுகிறாள் என்கிறது புள்ளி விவரம். இதை எம்பிஏ படித்த தாய் ஏன் புரிந்து கொள்ளவில்லை? தன்னை எம்பிஏ பட்டதாரி என்றுதானே அறிமுகப் படுத்தி கொண்டார்டைவர்சால்,சரியோ தவற, இவள் மகள்(குழந்தைகளே) பாதிப்படைகிறதாம்....
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
07-ஜூலை-202014:10:39 IST Report Abuse
V.B.RAM கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 10 ஆண்டுக்கு முன், குழந்தைகளுடன் அம்மா வீட்டில் தஞ்சமடைந்தேன்? என்ன பெரிய கருத்து வேறுபாடு.தாய் எட்டடி பாய்தல் குட்டி பதினாறடி பாய்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X