* ஒரு சில உணவுகளில், அல்சரை குணப்படுத்தும் இயற்கையான, 'ஆன்டி-பயாட்டிக்'குகள் நிறைந்துள்ளன. ஆகவே, அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், அல்சரை எளிதில் குணப்படுத்த முடியும்.
* தேனில், 'ஆன்டி-பாக்டீரியல்' மற்றும் 'ஆன்டி -வைரல்' பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவில் சேர்த்து வந்தால், அல்சரை உண்டு பண்ணும்,
'எச்.பைலோரி பாக்டீரியா'வை அழித்து விடும்
* தயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில், அல்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து, கடுமையான வலியில் இருந்து நிவாரணம் தரும்
* முட்டைகோசில், 'அமினோ அமிலங்கள், எல்-குளூட்டமைன்' மற்றும் 'ஜெபர்னேட்' போன்ற அல்சரை சரிசெய்யும் பொருட்கள் அதிகம் உள்ளது. இவை, அல்சரை குணமாக்குவதோடு, செரிமான மண்டலத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, அல்சர் வராமல் தடுக்கும்
* வாழை பழத்தில், அல்சரை குணமாக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள, 'ஆன்டி-பாக்டீரியல்' அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்து விடும்
* 'காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட்' அதிகம் நிறைந்துள்ளது, கைக்குத்தல் அரிசி. எனவே, அல்சர் பிரச்னையால் அவதிப்படுவோர், கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாவதோடு, அதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துகளால், உடலியக்கங்கள் அனைத்தும் சீராக இயங்கும்
* சீசில் எண்ணற்ற ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. எனவே, சீசை அதிகம் சாப்பிட்டால், அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, எளிதில் குணமாகி விடும்
* பூண்டுகளில், 'ஆன்டி-பாக்டீரியல்' மற்றும் 'ஆன்டி -வைரல்' பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதை உணவில் சேர்க்க, உடலில் நோயை ஏற்படுத்தும் அனைத்து பாக்டீரியாக்களும் அழிந்து விடும். குறிப்பாக, அல்சர் உள்ளோர், பூண்டுகளை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
புஷ்பலதா