உங்களின் உண்மையான வயது என்ன
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
00:00

சிலருக்கு வயதானாலும், அதற்குரிய தோற்றம் தெரியாது. 25 வயதுடைய பெண், 55 வயசு போல இருப்பதும், 70 வயதுக்கு மேற்பட்டோர் சிலர், துடிப்பும், துறுதுறுப்புமாக இருப்பதுண்டு.
எனவே, வயது என்பது, வெறும் உடம்பில் இல்லை. உண்மையான வயது, உங்கள் ஆரோக்கியம் மற்றும் மனப்பான்மையை பொறுத்தது தான். சரி, கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க... உங்களின் உண்மையான வயதை கண்டுபிடிக்கலாம்.
1. இரவில், குறைந்தது, 7 அல்லது 8 மணி நேரமாவது துாங்குவேன்.
2. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள், கீரை வகைகள், நெல்லிக்காய், பிரக்கோலி, ஆப்பிள், தக்காளி போன்ற அதிக, 'ஆன்டி ஆக்சிடென்ட்' இருக்கும் உணவு பொருட்களை, வாரத்தில் ஐந்து முறையாவது எடுத்துக் கொள்வேன்.
3. தினமும் ஒரு முறையாவது, நெல்லி, நாவல் பழம் போன்றவை சாப்பிடுகிறேன்.
4. ஒமேகா-3 அதிகம் உள்ள மீன் உணவை, வாரத்துக்கு மூன்று முறை எடுத்துக் கொள்வேன்.
5. புரோட்டின் அதிகமுள்ள முட்டையை வாரத்துக்கு ஐந்து முறை எடுத்துக் கொள்வேன்.
6. போலிக் ஆசிட் அதிகமிருக்கும், வெண்டைக்காய், கேரட், காலிபிளவர், சோளம் போன்ற உணவு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வேன்.
7. சின்னதா தலைவலி, உடம்பு வலிக்கு கூட, 'பெயின் கில்லர்' மாத்திரைகளை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
8. ஏதாவது ஒரு பழ ஜூசை, வாரத்திற்கு ஐந்து முறை குடிப்பேன்.
9. தினமும், காலை, 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வேன்.
10 புத்தகம் படிப்பது, செஸ், சுடோகு போன்ற மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை விளையாடுவது; நுட்பமான கவனிப்பு தேவைப்படும், 'பெயின்டிங், எம்பிராய்டரி' போன்ற வேலைகளில் அதிகம் ஈடுபடுவேன்.
11. உடலின் கொலஸ்ட்ரால் அளவு, நார்மலாக இருக்கிறது.
12. பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், சாக்லேட், பீட்சா, பர்கர் மாதிரியான கெட்ட கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட மாட்டேன்.
13. என் குடும்பத்தில் எல்லாரும், 80 வயது வரை, அவர்களின் நினைவை இழக்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
14. அதிக உடல் பருமன் இல்லாமல் இருக்கிறேன்.
15. முழு தானியங்கள் மற்றும் வெண்ணெய் போன்ற ஸ்கின்னுக்கு தேவையான வைட்டமின், 'ஈ' நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்கிறேன்.
16. இதயத்துக்கு நன்மை தரும், ஆலிவ் எண்ணெயை தான், சமையலுக்கு அதிகம் உபயோகிக்கிறேன்.
17. மது அருந்தும் பழக்கம் இல்லை.
18. ரத்தக் கொதிப்பின் அளவை நார்மலாக வைத்துள்ளேன்.
19. எனக்கு சர்க்கரை நோய் இல்லை.
20. குறட்டை, துாக்கமின்மை போன்ற இரவு நேர குறைபாடுகள் இல்லை.
21. மன அழுத்தத்தை என்னால் குறைத்துக் கொள்ள முடியும்.
22. எனக்கு நல்ல நட்பு வட்டம் இருக்கிறது. அவர்களோடு பேசுவது, நேரத்தை கழிப்பது என்று சுறுசுறுப்பாக இருப்பேன்.
23. எனக்கு, ஞாபகமறதி பிரச்னை இல்லை.
இப்போ, நீங்க எத்தனை கேள்விக்கு, 'ஆம்' என்று பதிலளித்தீர்களோ, ஒவ்வொன்றுக்கும், ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில், கூட்டி பாருங்கள். சரி, உங்கள் வயதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா...
மதிப்பெண், 20லிருந்து 23 வரை இருந்தால், உங்கள் ஒரிஜினல் வயதிலிருந்து, 15ஐ கழித்து கொள்ளுங்கள். இதுதான் உங்களின் உண்மையான வயது. இதை அப்படியே, 'மெயின்டெயின்' செய்யுங்கள். பிற்காலத்தில் எந்த நோயும் உங்களை அண்டாது.
பதினைந்தில் இருந்து, 19 ஆக இருந்தால், உங்கள் ஒரிஜினல் வயதிலிருந்து, 10ஐ கழித்து கொள்ளுங்கள். இதுதான் உங்களின், உண்மையான வயது. நீங்கள், உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கிறீர்கள். ஆனால், இல்லை என்று பதிலளித்த கேள்விகளை மட்டும், எப்படி சரி செய்யலாம் என்று யோசியுங்கள்.
பத்தில் இருந்து, 14 வரை இருந்தால், நீங்கள் இப்போது இருக்கும் உண்மையான வயதில் தான் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் கொஞ்சம் அதிக கவனமாக இருப்பது அவசியம்.
ஏழிலிருந்து, ஒன்பது வரை இருந்தால், உங்கள் ஒரிஜினல் வயதில், 5ஐ கூட்டுங்கள். இதுதான் உங்களின் உண்மையான வயது. சற்று சோர்வாகவும், மெதுவாகவும் நீங்கள் செயல்படுகிறீர்கள். இதுதான் சரியான சமயம் உங்களை சுறுசுறுப்பாக மாற்ற.
ஏழுக்கும் குறைவாக இருந்தால், உங்களுடைய ஒரிஜினல் வயதுடன், 10ஐ கூட்டுங்கள். இதுதான் உங்களின் உண்மையான வயது. உடனே, ஒரு, 'மாஸ்டர் செக் - அப்' செய்யுங்கள்.
மேலே சொன்னவைகளை பின்பற்றுங்கள்.

ஆர். கீதா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
09-ஜூலை-202013:17:11 IST Report Abuse
Manian (7) சுத்தமான பராமரிக்க பட்ட பற்கள் சுஉமமாஆர் 120 ஆண்டுகள் வரை இருக்கும்.ஆனால் 40 வயதிலேயே பலருக்கு பற்கள் விழுந்து விடும்.அதற்கு காரணம் பல் இடுக்குகள்,பல் மேல் எகறுகளில் உணவவு பபுஉகுநந்தது பாஆககக்டடீஈஇயாஆக்ககள் உருவாகுவதே காரணம். அதிக இனிப்புக்கள் பல் சொத்தையாவதை வேகப்பபடுத்தும். மேலும் பல்லில் உள்ள பாக்டீரியாக்கள் இதய நோயை உண்டாக்குவதாக கண்டுள்ளார். பல் மேல் சிப்பிபோல் சுண்ணாம்பும் படியும்.7 அடுக்கு பாதுகாப்புள்ள பல்லே முக அழகை கூட்டுகிறது. மென்மையான பிரஷல் (மூன்று மாதம் ஒரு முறை புதியதது தேவை) இடது புறம் உள்ளும் புறமும் 1 நிமிஷம் அதே போல் வலது புறமும் மெதுவாக துலக்க வேண்டும். உண்டு 15 நிமிஷம் கழித்தே பல் துலக்க வேண்டும். இல்லாவிட்டால் பல் மேல் பரவிய ஆசிட் (அமிலம்) பல் எனாமல் தளர்ந்த நிலையில் அழித்துவிடும். வாய் கொப்பளிப்பதால் அமிலம் நீங்காது.அடுத்து ப்ஃலாசிங்: அதற்கு தனியான நூல் உண்டு. அதனால் கீழ் முதல் பல் மேல் வரை திறந்த வாயில் ஒவ்வொரு பல் இடுக்கிலும் வலது பக்கம் 2 முறை, இடது பக்கம் 2 முறை இழுக்க வேண்டும். கடைவாய் வரை இழுக்க வேண்டும். ஆரம்பத்தில் சிறிது ரத்தம் வரும்.சீக்கிரம் அது நின்று விடும்.6 மாதம் ஒரு முறை நல்ல பல் மருத்துவரிடம், பல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். (பிகு:நான் எந்த பல் டாக்டரின் ஏஜெண்டோ,பல் டாக்டரோ இல்லை)
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
06-ஜூலை-202013:28:29 IST Report Abuse
Manian அடுத்து, பொதுவாக நீங்க பார்க்கும் வேலை,அதற்கு தேவையான தினசரி கலோரிகள்:பொதுவாக பணி மூப்படைந்வர்களுக்கு 1400 கலோரி வீட்டு வேலைகள் செய்யும் இல்லத்தரசிகளுக்கு 1800 கலோரி, ஆபீஸ்-நாற்காலி வேலை-1900 கலோரி, உடல் உழைப்பாளிகள்- 2100-2500 கலோரிகள் தேவை. அதிகமான கலோரிகள் இடுப்பில் ஏறி கொழுப்பாக மாறும்(மருத்துவர் மூலம் கலோரி தேவைகளை அறியுங்கள். உணவு அளவைக் குறைத்தல்:பெரிய எவர்சில்வர்,வெள்ளி உலோகத் தட்டுக்கள், வாழை இலைகளைத் தள்ளி வையுங்கள். 8 அங்குல விட்ட முள்ள வெள்ளை இல்லாத -பச்சை, நீலம்,சிகப்பு, மஞ்சள் நிற பீங்கான் தட்டுக்களை வாங்குங்கள். மற்றயவை உணவு குறைவாக இருப்பதாக மனதில் தோன்ற வைப்பதா ஆராய்ச்சிகள் கூறுகின்றன..(பின்னால் வழக்கமான உலோக தட்டுக்களை உபயோகிக்கலாம்) . கையில் ஏந்தி சாப்பிடுபவர்களை "கர பாத்திரிகள்,பிடி உண்போர் என்பார்கள்'.அடுத்து அந்த தட்டில் கொள்ளும் அளவே எல்லா உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த எந்த உணவில் கலோரி அதிகமோ (சோறு, சப்பாத்தி, இட்லி....) அதில் 1/5 (20% ,ஐந்தில் ஒரு பங்கு) நீக்கி விடுங்கள் (குறைத்து விடுங்கள்).தினமும் இப்படி ஒரு மண்டலம் 48 நாட்கள்)செய்யுங்கள்.4/5 பகுதி உணவுக்கே வயிறு நிறைந்தாக தோன்றும். ஏதாவது ஒரு பழம், ஒரு கைபிடி வறுத்த உப்பு போடாத வேர் கடலையை கேரட் வெள்ளரியை நொருக்கு தீனியா ஒரு மணி நேரம் முன்புதான் உண்ண வேண்டும். அடுத்து 4/5 அதிக கேலரி உணவில் 1/5 நீக்கி 48 நாள் உண்ண வேண்டும். 8 வாரம் கழிந்த பின் எந்த அதிக பசியும் இல்லாமல் எடை குறையும். பழய உலோகத்தட்டில் சாப்பிட்டாலும் உணவு அளவு கூடாது. என்னையும் சேர்த்து சுமார் 65 பேர்கள் தங்கள் எடையை குறைத்து விட்டார்கள். ஒரு வருஷம் கழித்து, இடுப்பளவு 4 அங்குலம் குறைந்தது.உடல் உணவு கிடைக்கும் என்பதால் ஊளச் சதையாக இடுப்பில் சேமிப்பது வைப்பதில்லை மருத்துவ நண்பர் தானும் இதையே செய்து தன் இதர பேஷண்டுகளையும் மாற்றி விட்டார்
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
06-ஜூலை-202001:03:29 IST Report Abuse
Manian இன்னும்: (5) இடுப்பில் இரண்டு வித கொழுப்புக்கள் சேரும். நல்ல பலன் தரும்,இதய ஆரோக்கியம் தரும் பழுப்பு கொழுப்பு(Brown Fat)இதயத்திற்கு தீமை செய்து மாறடைப்பபு தரும் வெள்ளை கொழுப்பு(white fat). இவை பொரரித்த உணவுகள், இனிப்புக்கள், நொறுக்கு தீனி,,ரசாயனம் கலந்த பாஃஸ்புட் போன்றவை மூலம் வரும். முன்காலத்தி பொததுவாக ஏழைகளாக இருந்ததவர்கள், மாதம் ஒன்று இரண்டு முறை பண்டிகைகள்,திருமணம்,பிறந்த நாள் போன்ற நாட்களில் மட்டுமே வடை, சக்கரைப் பொங்கல்,பொரித்த அப்பளம் என்று உண்டோம். மாதம் ஒரு முறையாவது பட்டினி விரதம் இருந்தோம். அதனால், உடலுக்கு தேவையான 10-15% எண்ணை சத்ததுக்கள் உடலுக்கு கிடைத்தன.கைகுத்தல் புழுங்கல் அரிசியே உண்டு வைட்டமின் ஈ,10 % புரோட்டீனும் பெற்றோம்.வேர்கடலை, பலவித பருப்புக்கள், சுண்டல்கள் மூலம் பொதுவாக தேவையான புரோட்டீன்களை தினமும் பெற்றோம். கோயிலே வலம் வந்து,நடந்தே சென்று உடல் பலம் பெற்றோம். ஆகவே,,10-15 நாளைக்கு ஒரு தரம் வேட்டையாடி உண்பவர்களுக்கு மட்டுமே இடுப்பில் பழுப்பு நிற கொழுபப்பு அதிகம் சேர்ந்தது.. ஆனால் இன்றோ? நண்பர் குமீந்தர் சண்டிகரில் சொன்னது: அதோ பாருங்கள் இரண்டு பெண் பீப்பாய்கள் செல்வதை. அவர்கள் இருவரும் 20 வயதில் சொப்பன சுந்தரிகள். திருமணம் ஆனதும்,நெய்,மைதா,உருளைக் கிழங்கு பரோட்டா, ஜிலேபி, குலோப்ஜாமுன் என்று உள்ளே தள்ளி, வாய் மூட பட்டினியால் இப்படியாகி விட்டார்கள். குஜராத்தி, சிந்தி, மார்வாடி, பஞ்சாபி அப்சரசுகள், திருமணமான பின்,,உருளைக் கிழங்கு சாக்கு மூட்ஐகளாக, மைதா மா பைகளாக மாறி விடுவார்கள், மாதாஜீகளாக உறுமாறி விடுவார்கள். புள்ளி விவரப்படி 5060% அது சரியே தற்போது எப்போதும் நைட்டி அணிந்த சாக்கு மூட்டைகள் கிராமங்களில் கூட கொரானாவை வரவேற்க ஆரத்தி எடுக்க தயாராக இருப்பதை காணலாம். சரி இதை எப்படி சரி செய்வது? முன்னோர்கள் என்ன செய்தார்ள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X