திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
00:00

ஜூலை 15 -காமராஜர் பிறந்த தினம்

'வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாறு' நுாலிலிருந்து:
காமராஜர், முதல்வராக இருந்தபோது, மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டில், முதல்வருக்கான கோட்டாவில், 10 இடங்களை ஒதுக்கி இருந்தனர். அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு, அதிலிருந்து, 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுப்பதற்காக, காமராஜரின் மேஜையில் அனைத்து விண்ணப்பங்களையும் அடுக்கி வைத்தார், அவரது உதவியாளர்.
'இவர், எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார்... கட்சிக்காரர்களின் பிள்ளைகளுக்கா, ஊர்க்காரர்களின் பிள்ளைகளுக்கா, தன் ஜாதி அடிப்படையிலான மாணவர்களுக்கா என்று பார்ப்போம். அப்போது, இவரின் எண்ணம் புரிந்து விடும்...' என்றும் எண்ணினார்.
சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த, காமராஜர், கடகடவென, 10 விண்ணப்பங்களையும் எடுத்து கொடுத்து, சென்று விட்டார். அவற்றை பார்த்த உதவியாளருக்கு, மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில், அவர் எண்ணிய அடிப்படையில், காமராஜர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்களில் ஒருவர் கூட இல்லை.
காமராஜரிடம் சென்ற உதவியாளர், 'நீங்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள், உங்கள் ஊர், ஜாதி, நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று, எந்த அடிப்படையிலும் வரவில்லையே... எப்படி இவர்களை தேர்வு செய்தீர்கள் என்று, நான் அறிந்து கொள்ளலாமா...' என்று கேட்டார்.
சிரித்துக்கொண்டே, 'நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களை எல்லாம் பார்த்தேன். அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில், கையெழுத்துக்கு பதிலாக, எதிலெல்லாம் கைநாட்டு (கை ரேகை) வைக்கப்பட்டிருந்ததோ, அவற்றையே நான் தேர்ந்தெடுத்தேன்.
'எந்த குடும்பத்தில் எல்லாம் கல்லாமை எனும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்கு தான், நாம் முதலில் அறிவு விளக்கேற்ற வேண்டும்...' என்றார்.
காமராஜரின் பதிலை கேட்ட உதவியாளர், 'உண்மையிலேயே இவர் படிக்காத மேதை தான்...' என்று வியந்தார்.

அறந்தை நாராயணன் எழுதிய, 'மேடையில் பேசலாம் வாருங்கள்' நுாலிலிருந்து:
'மானத்தோடு வாழ்வோம்' என்ற தலைப்பில், அக்., 2, 1965, காந்தி ஜெயந்தி அன்று, காமராஜர் ஆற்றிய சொற்பொழிவை, தனி பிரசுரமாகவே வெளியிட்டது, அன்றைய தமிழக காங்கிரஸ் கமிட்டி. அதில்:
நம்முடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், சொந்த காலிலேயே நாம் நிற்க வேண்டும். அது தான் நமக்கு பலம். அந்த பலம் ஒன்று தான், உலகில் நமக்கு மரியாதையை தேடிக் கொடுக்கும்.
அந்த பலம் இல்லையென்றால், உலகில் மரியாதை இல்லை; ஒன்றும் இல்லை. அப்படி நடந்து கொள்வது தான், இப்போது நம்முடைய பொறுப்பு. இதைத்தான், 40 - 50 ஆண்டுகளாக நமக்கு உபதேசம் செய்திருக்கிறார், காந்திஜி.
பல்வேறு மொழி, ஜாதி, மத, இன வேறுபாடுகளால் சிதறிக் கிடந்த ஒரு நாட்டை, ஒன்றுபடுத்தினார், காந்திஜி. நாம் அனைவரும் ஒரே தேசிய இனம் என்ற உணர்ச்சியை உண்டாக்கினார். சுதந்திரமாக வாழவும், தகுதியாக்கி தந்திருக்கிறார்.
சுதந்திர போராட்டம் நடத்திய காலத்தில், தெளிவாக தீர்க்கதரிசியாக சொல்லிக் கொண்டே வந்தார், காந்திஜி.
'இந்த நாடு, சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். உணவு, உடை முதல், தேவையான எல்லாவற்றையும் நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்க்காதீர். பிறரை எதிர்பார்த்தால், அது, சுதந்திரம் அல்ல...' என்று, சொல்லி வந்தார், காந்திஜி.
அன்று சொன்னதை நாம் கேட்கவில்லை. அதை சரியாக கேட்டிருந்தோமானால், இன்னும் மரியாதை உயர்ந்திருக்கும். போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது ஒழுங்காக நடக்க வேண்டுமா, இல்லையா...
முக்கியமாக, சாப்பாட்டுக்கு இன்னொரு நாட்டை எதிர்பார்ப்பதா, நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இல்லையேல், பட்டினியாக கிடக்க வேண்டும். அப்படிதான் முடிவு செய்ய வேண்டும்
அப்படியே நம் சர்க்காரும், இனிமேல், உணவு இறக்குமதியே கிடையாது என்று முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அமெரிக்காவிலிருந்து வருமா, ஆஸ்திரேலியாவிலிருந்து வருமா, அவன் கொடுப்பானா, இவன் கொடுப்பானா என்று, எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.
நம் நாட்டிலேயே உள்ள சிலர் என்ன செய்கின்றனர்... அவர்கள், சாதாரண மக்கள் அல்ல, அரசியல்வாதிகள். பிரசிடென்ட் ஜான்சன் என்ன செய்யப் போகிறார், பி.எல்.480ல் கையெழுத்து போடுவாரா, ஒப்பந்தம் எப்போது வரப்போகிறது என்றெல்லாம் எட்டி எட்டி பார்க்கின்றனர்.
அவர்கள் கையெழுத்து போட்டால் என்ன, போடா விட்டால் என்ன... நம் நாட்டிற்கு வேண்டிய உணவை நாமே உற்பத்தி செய்து கொள்வோம் என்ற முடிவில் இருந்தால், தானாக கையெழுத்து போடுவார், ஜான்சன்.
நாளையே நம் மீது, சீனா படையெடுத்தால், போர் கருவி வேண்டாமா... கொடுக்க யார் இருக்கின்றனர் என்று சிலர் கவலைப்படுகின்றனர். ஒருவரும் இல்லை என்பதற்காக, மேற்கு வல்லரசுகள் காலில் விழுந்து, நமஸ்காரம் செய்ய வேண்டுமா...
எதற்காக அப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்; மானத்தோடு வாழ்வதற்காக தானே சண்டைக்கு போகிறோம். ஒரு பக்கம் மானத்தை காத்துக்கொள்ள, மறுபக்கம் மானத்தை விற்பதா... அவன் காலில் விழாதே; இவன் காலில் விழு என்பதா உபதேசம்...
மானத்தோடு வாழ முடியவில்லை என்றால், செத்துப் போவோமே... வாழ்க்கை என்ன பெரிசு. வாழ்ந்தால் மானத்தோடு வாழ்வோம்; இல்லாவிட்டால் போராடி சாவோம். இதுதானே வாழ்க்கை.
- இவ்வாறு பேசியுள்ளார்.

அதேசமயம், எளிமையாய், சாதாரண பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் பேசுவார், காமராஜர். அதற்கு இது உதாரணம்:
முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுவர்களை பார்த்தபடியே, 'சுதந்திரம் வாங்கி, 20 ஆண்டுகளுக்கு மேலாச்சு. அதோ அந்த சிறுவன் தலையில் எண்ணெய் இல்லே. பின்னே என்ன சுதந்திரம்...
'காங்கிரஸ்காரங்க நாலு பேர் மந்திரியா இருக்கவா, கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கினோம்... ஏழைங்க முன்னேற ஏதாவது செய்ய வேண்டாமா... செய்யலேன்னா, தெருவிலே மடக்கி உதைப்பான்...' என்று பேசினார்.
- காமராஜர் என்றால், பாமரனிடமும் நல்ல மதிப்பு இருந்தது ஏன் என்று, இப்போது புரிந்திருக்குமே!

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swaminathan - london,யுனைடெட் கிங்டம்
14-ஜூலை-202009:34:51 IST Report Abuse
swaminathan காமராஜர் போன்ற ஓர் உத்தமரை இனி இந்த நாடு காண்பது அரிது
Rate this:
Cancel
vns - Delhi,இந்தியா
12-ஜூலை-202021:42:08 IST Report Abuse
vns இந்த எழுபது வருடங்களில் ஏன் அடிதட்டு மக்கள் மேலே வரவில்லை? அரசு ஜாதிகளைக்கூறி உழைத்துப் படித்த மேல்தட்டு மக்களை கீழ்த்தட்டுகளாக்கி மகிழ்ந்தது அதன்மூலம் இந்தியாவை ஒரு வளரும் நாடாகவே இரூத்தியது.. ஆனால் உழைக்கவேண்டும் படிக்க வேண்டும்என்ற எண்ணம் இல்லாத அடிதட்டு மக்களை பணம், ஊர்திகள், உணவு கொடுத்ததும் படிக்க வைக்க முடியவில்லை. இது அரசாங்கங்களின் மிகப்பெரிய தோல்விதான்.
Rate this:
Manian - Chennai,இந்தியா
13-ஜூலை-202000:03:16 IST Report Abuse
Manian" ஆனால் உழைக்கவேண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத அடிதட்டு மக்களை பணம், ஊர்திகள், உணவு கொடுத்ததும் படிக்க வைக்க முடியவில்லை "-தவறான கருத்து. ஜாதியின் பெயரால் தரபப்படும் பலன்கள் 97% கீழ் தட்டை அடைவதில்லை,அவர்களில் முதலில் பதவி அதிகாரம் கைபப்பற்றியவர்களின் வாரிசு அரசியல் ஓபிசிக்களில் மேல்தட்டு 3% சுயநலமிகளின் கையில் இருக்கிறது என்று மத்திய அரசாங்க அறிக்கை கூறுகிறது. 2200 தாழ்த்தப் பட்டவர்கள் பிரிவில் 300 ஜாதி கையிலேயே எல்லா பலன்களும் இருக்கிறது. தமிழ் நாட்டில்- முக்குலத்தோர்,கொங்கு வேளாளர்,வன்னியர்களில் மேலல் தட்டு 3% எல்லா இட ஒதுக்கீட்டின் பலனை அடைகிறார்கள் என்கிறது. கேரளாவில் இது போலவே ஈழவர்கள்,, ராஜஸ்தானில் கூர்மிகள்,, உத்திர பிரதேசத்தில் யாதவர்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளே காரணம். அமெரிக்காவில் கருப்கர்கள் நிலையும் இதே வீடு கட்டும் போது யாருமே பொதுவாக,பாது காப்பை பற்றி நினைப்பதில்லை. திருடு போன பின்னே அலறுகிறார்கள்.அபேத்கார் போன்றவர்களிடம் "ஒரு பொருள் மேல் நோக்கி அறிவுத்திறமை( Single domain Intelligence),இருந்ததே தவிர,ஒரு பொருள் மேல் நோக்கி பல்நோக்கு அறிவுத்திறமை (Single domain General Intelligence) இல்லாததே இதற்கு காரணம்.ஆகவேதான் அமெரிக்க சிறந்த கம்பனிகள் பல்நோக்கு குழுக்கள்( Diversified member Group) மூலமே முடிவுகளை எடுக்கின்றன.இதை"(அறிவாளிகள்) நாலு பேரை கேட்டு செய்தல்" என்கிறோம். கொரானா சாவுகள் இதை ஊர்ஜிதப்படுத்துகிறதே...
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-ஜூலை-202002:49:43 IST Report Abuse
கதிரழகன், SSLCஎல்லாரும் படிக்க முடியும்தான். ஆனா ரிசர்வேஷன் மூல்யமா முன்னேறின ஆளுங்க அடுத்தவனுக்கு இடம் கொடுக்காமல் அவனே அனுபவிக்கிறான். ஐ ஏ எஸ் ஆனா சொந்த சாதிய விட்டு மேல்சாதி வீட்டுலதான் சம்பந்தம் செய்யுறான்....
Rate this:
Manian - Chennai,இந்தியா
15-ஜூலை-202023:46:33 IST Report Abuse
Manianநீங்கள் சட்டம் இயற்றியவர்களின் தவறை புரிந்து கொள்ள வேண்டும். தகுகி,பொருளாதாரத்தில் நலிந்தவர்கள்,குடும்பத்தில் ஒருவருக்கே உதவி,அப்பபடி ஒரு வருடம் யாரும் இல்லை என்றால் அது பொது சீட்டு போன்ற விதிகள் சட்டத்தில் இடம் பெறவில்லை. எனவே திருட்டு கூட்டமே பலன் பெருகிறது. சேற்றில் செந்தாமரை விளைகிறதேஅதே போல ஜாதி,மதம் என்பவை தகுதியை தீர்மானிப்பதில்லை மரபணு, ஊட்சத்து உணவு,பெற்றோர் பாசம்,பெற்றோர்-ஆசிரியர் ஊக்குவிப்பு, நல்ல ஆரம்ப கல்வி, தன் நம்பிக்கை வளர்ப்பு, வேலைக்காக கல்வி இல்லை என்ற புரிதல்,நட்பு வட்டம், என்றுள்ள எல்லா புள்ளி விவரங்களையும் காணமல் முடிவெடுப்பதால் வரும் தீமைகளே இட ஒதுக்கீட்டை நாசம் செய்து விட்டது. இட ஒதுக்கீடு சத விகிதமும் 25% மேல் இருக்கக் கூடாது.நல்லது நினைக்க தீமை பெரும் நிலமைக்கு ஜாதீய அரசியலே காரணம்.அமெரிக்காவில் இதே போல கல்வி அறிவே இல்லாமல் அடிமைகளாக 200 ஆண்டுகள் இருந்த கருப்பர்களுக்கு ஆப்ரகாம் லிங்கன் சுதந்திரம் மட்டுமே கொடுத்தார். கல்வி,தொழில் பயிர்ச்சி,போக்கு வரத்து உதவி,கல்வி செலவு என்ற எதையும் தராததாலேயே இன்றும் அவர்கள் மேலே வரவே முடியவில்லை. இந்திய போல, அவர்களும் ஜெயில்களையே நிரப்புகிறார்கள். எனவே எதுவுமே இலவசம் என்று உலகில் இல்லை...
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
12-ஜூலை-202011:20:17 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI காமராஜர் ஐயா அவர்கள் கல்விக்கு ஆற்றிய பணிகள் பற்பல. அவர்கள் மீது தனி அபிமானம் நிறைய பேருக்கு உண்டு. தனிமனித தேவைகளை பூர்த்தி செய்யாத சுதந்திரம் வாங்கி என்னை பயன் என்று கூறி பல தொண்டாற்றிகர்மவீரராக எல்லோராலும் பாரட்டப்பெற்றார். அவர் போல யார் ? கேள்விக்கு விடை யாரும் இல்லை என்பதைநாம்புரிந்துகொள்ளும்வகையில்நடந்துவருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X