அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2020
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
வயது: 22, பெற்றோருக்கு செல்ல மகள். எனக்கு ஒரு தம்பி உண்டு. கல்லுாரியில் முதல் ஆண்டு படித்து வருகிறான்.
பி.இ., முடித்து, 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் தேர்வாகி, பெங்களூரில் இருக்கும் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம், விடுதி வாழ்க்கை என, இனிமையாகவே சென்றது.
நான் தங்கியிருந்த விடுதியில், வசதியான, மாடர்னான பெண்களும் தங்கியிருந்தனர். அவர்களோடு பழக பழகத்தான், வெளி உலகமே தெரிய ஆரம்பித்தது.
அச்சமயத்தில் தான், என் தோழி ஒருவள் மூலமாக, 'மாடலிங்' செய்ய வாய்ப்பு கிடைத்தது.
'மாடலிங், எல்லாருக்கும் அமைந்து விடாது. சினிமாவில் நுழைவதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்...' என்று, உற்சாகப்படுத்தினர், தோழியர்.
வீட்டில் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு சொல்லாமல், 'போட்டோ ஷூட்'டில் கலந்து கொண்டேன்.
நீண்ட நாட்களாக சொந்த ஊருக்கு செல்லாமலும், பெற்றோரிடம் சரியாக போனில் பேசாததாலும், என்னமோ ஏதோ என்று அலறியடித்து, பெங்களூருக்கு வந்து விட்டனர், பெற்றோர்.
நான், 'மாடலிங்' செய்யும் விஷயம் அறிந்து, கண்டபடி திட்டி, ஊருக்கே அழைத்து வந்து விட்டனர்.
இங்கு வந்த பிறகும், நிறைய வாய்ப்பு வருகிறது. அதை பார்த்ததும், மொபைல் போனை பிடுங்கி உடைத்த அப்பா, அவசர அவசரமாக, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
தம்பி கூட என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறான். வீட்டில் யாரும் என்னுடன் சரியாக பேசுவதில்லை.
'மாடலிங்' செய்வது, கேவலமானதா... மன உளைச்சலில் இருக்கிறேன். ஓய்வு நேரத்தில்தானே, 'மாடலிங்' செய்கிறேன். மற்றபடி, ஐ.டி., வேலையை சரியாக செய்து, நல்ல பெயரையும் சம்பாதித்துள்ளேன்.
இப்போது, நான் என்ன செய்வது, அம்மா. எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள்.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
'மாடலிங்' ஒரு குதிரை; மென்பொருள் நிறுவனப்பணி, இன்னொரு குதிரை. இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது, மகளே.
அமைதியான வாழ்க்கை வேண்டுமென்றால், 'மாடலிங்' பணியை நிறுத்தி, மென்பொருள் நிறுவனத்து பணியில் முழுமையாக இறங்கு.
26 வயதில் திருமணம் செய்து, வாழ்க்கையில், 'செட்டில்' ஆகு.
'மாடலிங்'கும், சினிமாவும் என் இரு கண்கள் என்றால், குடும்பத்தை பகைத்து, 'மாடலிங்'கில் இறங்கு. கோஹினுார் வைரத்தை துாக்கி பிடித்து, தனி மரமாக நிற்பாய்.
'மாடலிங்' வாழ்க்கையோ, சினிமா வாழ்க்கையோ, ஒரு சில ஆண்டுகள் தான். அழகிய புதுமுகங்கள் வந்ததும், நீ கைவிடப்படுவாய்.
புகழின் உச்சிக்கு சென்று தலைகீழாக விழுதல் உடலுக்கும், உயிருக்கும் ஆபத்தானது.
என் ஆத்மார்த்தமான அறிவுரை...
'மாடலிங்' வேண்டாம் மகளே!
மின்மினி பூச்சியாக இருப்பதைவிட, கோவில் கோபுரத்து அகல் விளக்காக இரு!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-ஜூலை-202022:41:57 IST Report Abuse
Girija இது திமிர் கொழுப்பு , உன் வருங்கால கணவன் மாடலிங் அல்லது சினிமாவில் க்ரூப் டான்சில் துணை நடிகைகளுடன் குத்தாட்டம் போடுபவன் என்றால் நீ என்ன செய்வாய் ?
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
20-ஜூலை-202012:52:18 IST Report Abuse
Vijay IT வேலை செய்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் இல்லை .. எந்த தொழில் செய்தாலும் யாருக்கும் தீங்கு நினைகாமல் செய்யவும் ..
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
19-ஜூலை-202022:52:18 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI நிழல் உலக மாடலிங்கில் மாட்டிக் கொண்டு என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் தத்தளிக்கும் நிலை வேண்டாம். நிஜ வாழ்க்கையில் வேலை பார்த்துவந்தபிறகு நல்ல மண வாழ்க்கைஅமைய வேண்டும். திருமதி சகுந்தலா கோபிநாத் அவர்கள் கருத்தில் திடமான நம்பிக்கை உள்ளது. பெற்றொர் நம்நலன் கருதி செல்கிறார்கள் என்று மனதில் வைத்து கொள்ளுங்கள். திருப்பம் உதாரணம் மின்மினிப்பூச்சி. நன்றி அம்மா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X