பி.இ., படித்து, 'டீ மாஸ்டர்' ஆன அடைக்கலம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
00:00

பி.இ., படித்து, முதல் வகுப்பில் தேறிய ஒருவர், படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல், சொந்தமாக டீக்கடை நடத்துகிறார்; திருவள்ளூவர் தினம் போன்ற விசேஷ நாட்களில், ஒரு டீ , ஒரு ரூபாய்க்கு கொடுத்து, அசத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், கரிசக்காடைச் சேர்ந்தவர், அடைக்கலம். எளிய குடும்பத்தில் பிறந்த இவர், ஓட்டலில் வேலை பார்த்தபடியே பள்ளிப் படிப்பை தொடர்ந்து, இன்ஜினியரிங் முடித்தார். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில், இ.சி.இ., படிப்பில் முதல் இடம் பெற்றார்.
படிப்பை முடித்து வெளியே வந்தவருக்கு, எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை; வந்த ஒன்றிரண்டு வேலைகளும் சொற்ப சம்பளத்திலேயே அமைந்தன.
ஓட்டலில் வேலை பார்த்த போது, கிடைத்த சம்பளத்தை விட குறைவாக இருக்கவே, சொந்தமாக தொழில் செய்து முன்னேறுவது என, முடிவு செய்தார்.
தன் அனுபவத்தை வைத்து, சொந்த ஊரிலேயே டீ கடை போட்டார்.
கடந்த 15 ஆண்டுகளாக, அடைக்கலத்தின், 'சத்யா டீக்கடை' அப்பகுதியில் மிக பிரபலம். டீக்கடையுடன், இப்போது சிறிய அளவிலான டிபன் சென்டர் மற்றும் பேக்கரியும் நடத்தி வருகிறார்.
'எதைச் செய்தாலும், கொடுத்தாலும் தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆகவே, என் கடை டீ, மிக ருசியாக இருக்கும். சுற்றுப்புற மக்கள், என் கடைக்கு தான், டீ குடிக்க வருவர்.
'ஒரு வேளை, வேலைக்கு சென்றிருந்தால், நான் மட்டும் தான் வாழ்ந்திருப்பேன். ஆனால், இப்போது, 10 பேருக்கு சம்பளம் கொடுத்து, அவர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன்.
'அது மட்டுமல்ல, என்னால் முடிந்த வரை, ஏழை மாணவர்களுக்கு, பேக்கரி பொருட்களை இலவசமாகவோ, சலுகை விலையிலோ தருகிறேன்.
'தமிழ் மீதும், தமிழ்ப்புலவர் திருவள்ளூவர் மீதும் ஈடுபாடு அதிகம். இதன் காரணமாக, திருவள்ளுவர் தினத்தன்று, ஆறு ரூபாய் டீயை, ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். மக்கள் நல இயக்கத்தினருடன் இணைந்து, மரக்கன்றுகள் மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கவும் உறுதுணையாக இருக்கிறேன்.
'இந்த சமுதாயத்திற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும்; செய்வேன்... படித்து விட்டு, இந்த தொழிலை செய்கிறோமே என, எப்போதும் சஞ்சலப்பட்டது இல்லை; மாறாக சந்தோஷமே...' என்கிறார்.
இவருடன் பேச: 9943130103.

எம். எல். ராஜ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
29-ஜூலை-202022:35:04 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI அடைக்கலம் பி. இ., படித்து டீமாஸ்டர் ஆனார். இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது என்றுகூறினால் அது மிகையாகாது. படிப்பு அறிவை வளர்த்துக் கொள்ள த்தான். ஆனால் அனுபவம் வாய்ந்த ஒரு மனிதன் முன்னேற முடியும். ஆனால் இந்தவிஷயத்தில் அடைக்கலம் பாராட்டுக்குரியவர்.
Rate this:
Cancel
vns - Delhi,இந்தியா
27-ஜூலை-202015:41:17 IST Report Abuse
vns இதுபோன்ற நில ஆக்கிரமங்களை அனுமதிக்கக்கூடாது.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
27-ஜூலை-202006:51:48 IST Report Abuse
Indhuindian இந்த செய்தியாய் பார்த்தாவது பொறியியல் மோகம் குறையுமா? தமிழகத்தில் கிட்ட தட்ட அறுநூறு பொறியியல் கல்லூரிகள் நமக்கு தேவை அதிகபட்சம் நாற்பது அல்லது ஐம்பது தரமான கல்வி அளிக்கும் நிறுவனங்கள் தான். காசுக்காக அரசியல் செல்வாக்கை துஷ்ப்ரயோகம் செய்து புற்றீசல் போல் கிளம்பியுள்ள இந்த மாதிரி தரமற்ற பொறியியல் கல்லூரிகள் பெற்றோர்களின் பேராசையை பயன்படுத்தி பல ஆயிரம் மாணவர்களின் வாழ்கைழை பாழடித்து வருகிறார்கள். தரமான ஆசிரியர்கள் கிடையாது. தரமான ஆய்வகங்கள் கிடையாது. அனால் தரமான கான்டீன் மட்டும் உண்டு ஏனென்றல் அந்த கேன்டீனில் காசை அள்ளலாம். நான்கு ஆண்டுகள் முடித்த பிறகு ஞானோதயம் வருகிறது வேலை கிடைக்காமல் திண்டாடும்போது. இது மாணவர்களின் தவறு அல்ல. அந்த பெற்றோர்களின் தவறு. முதலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தரத்தை அறிந்து அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல் படவேண்டும். எங்க வீட்டுக்காரும் கச்சேரிக்கு போனாராம் என்கின்ற கதையாக என்னோட குழந்தயும் இன்ஜினியரிங் படிக்குதுன்னு பீத்திக்க கடனை வாங்கி சொத்தை வித்து ஆஃபீசிலே கடனை போட்டு கடனாளியான பிறக்குது அந்த டிகிரியின் சரியான மதிப்பு என்று. எண்பது முதல் தொண்ணூறு சதவிகித மாணவர்கள் வேலைக்கு லாயக்கற்றவர்களா இந்த கல்லூரிகளால் உருவாக்க படுகிறார்கள். அரசு ஒன்றும் செய்யாது ஏன் என்றால் சுமார் தொண்ணுறு முதல் தொண்ணுற்று ஐந்து சதவிகிதம் கல்லூரிகள் அரசியல் வாதிகளால் தொடங்கப்பட்டது. AICTE யம் திரிதராஷ்டிரனாகி விட்டது வேதனை
Rate this:
Manian - Chennai,இந்தியா
27-ஜூலை-202007:38:38 IST Report Abuse
Manianஅடிப்படை உண்மையை ஏன் சொல்லவில்லை? கிரீமியர் லேயர்கள் 3%-மேல்தட்டார்களயே, மக்கள் ஜாதீய அடிப்படையிலேயே காசு வாங்கி தேர்ந்தெடுக்கிறார்கள்? அதே ஜாதிகளில் அறிவில் சிறந்த அரசியல்வாதிகளே இல்லையா? ஆகவேதான் இந்த நிலை அதை எப்படி தடுக்கப் போகிறீர்கள் என்று யாருமே சொல்வதில்லை?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X