மது மீது மோகம்... மனைவி மீது சந்தேகம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2020
00:00

''கோவிலாக இருந்த என் குடும்பம், இப்படி ஆகும்னு கனவுல கூட நினைக்கல டாக்டர்... வாரம் ஒரு தடவை பார்க், சினிமான்னு, என்னையும் குழந்தைகளையும் கூட்டிட்டு போவார். ஆனால், சமீப காலமா எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. தினம் குடிச்சுட்டு வந்து, வீட்ல ஒரே ரகளை. என்னை சந்தேகப்பட்டு உதைக்கறாரு... குழந்தைகளையும் விட்டு வைக்கறதில்லை...,''
- கண்ணீருடன் புலம்பினார் கவுசல்யா.

அவருக்கு ஆறுதல் சொன்ன, பீளமேடு புதுார் ஹரி கிளினிக் மனநல மருத்துவர் டாக்டர் சுகன்யா பிரியதர்சினி, கவுசல்யாவின் கணவர் ராதாகிருஷ்ணனை கிளினிக்குக்கு அழைத்து வரச்செய்து, அவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை வழங்கினார்.
''சுமார், மூன்று மாத சிகிச்சைக்குப் பின், தற்போது ராதாகிருஷ்ணன் பழைய நிலைமைக்கு திரும்பி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்,'' என்றார் டாக்டர் சுகன்யா பிரியதர்சினி.
இது குறித்து, அவர் கூறியதாவது:
குடிப்பழக்கம் சந்தோஷத்தை கொடுக்கும் என, பலர் நினைக்கின்றனர். அது தவறு. தினந்தோறும் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் மனநிலையில், எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதனால், அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களை சார்ந்தவர்களும், பாதிக்கும் சூழ்நிலை உருவாகும். முதலில், மனைவி மற்றும் பிறரை சந்தேகிக்கும் மனநிலை உருவாகும். சிலருக்கு நீண்ட நாள் இருந்த குடிப்பழக்கத்தை, திடீரென நிறுத்திய பிறகும், இத்தகைய சந்தேக நோய் வரலாம்.
பொதுவாக மது பழக்கத்துக்கு அடிமையானவர்களில், 25 சதவீதம் முதல், 35 சதவீதம் பேர் வரை, இத்தகைய சந்தேக நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், நீண்ட நாள் குடிப்பழக்கம் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும், ரசாயன மாற்றமே.

தாம்பத்திய உறவு பாதிப்பு!
குடிப்பழக்கத்தால் ஆண்களுக்கு தாம்பத்திய உறவில், ஈடுபாடு இல்லாமல் போகிறது. இதனால், தன் மனைவி பிறருடன் பழகி வருகிறார் என்ற சந்தேகம், மனதில் வேரூன்றி குடும்பத்தின் நிம்மதியை குலைக்கிறது. இவர்களுக்கு, உரிய ஆலோசனைகளை வழங்குவது அவசியம்.
குடிநோயாளிகளுக்கு வரும் இப்பிரச்னையின் பெயர், 'ஒத்தேலோ சிண்ட்ரோம்'. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஒத்தேலோ என்ற பாத்திரம், தனது மனைவி, தனக்கு விசுவாசமானவராக இல்லை என்று நினைத்து, அவரை கொலை செய்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அந்த கதாபாத்திரத்தின் பெயரை மையமாக கொண்டு, மனைவியை சந்தேகப்படும் நபர்கள், 'ஒத்தேலோ சிண்ட்ரோம்' உள்ளவர் என அழைக்கப்படுகின்றனர்.

காதுக்குள் குரல் கேட்கும்!
இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு காதுக்குள் யாரோ, 'கர கர' குரலில் பேசுவது போல, கேட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் சிலர் டெல்யூசன் என, இல்லாத ஒன்றை இருப்பது போல, கற்பனை செய்து கொள்வர்.
அதாவது, மனைவியே தன்னை விஷம் வைத்து கொல்ல முயற்சிக்கிறார் என கற்பனை செய்து கொள்வர். இந்நோய் மரபணு மற்றும் மூளையில் ரசாயன மாற்றத்தினால் ஏற்படுகிறது. இதை ஒரு மனநோய் என கண்டறிந்து, தகுந்த சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி.
இவ்வாறு, டாக்டர் சுகன்யா பிரியதர்சினி கூறினார்.

இதுதான் அறிகுறிகள்!
மனைவியின் மொபைல் போன் அழைப்புகளை கண்காணிப்பது, பிறரிடம் பேச தடை விதிப்பது, வேலைக்கு செல்ல விடாமல், வீட்டில் அடைத்து வைப்பது, துாக்கம் வராமல் தவிப்பது ஆகியவை முக்கிய அறிகுறிகள்.
ஆழ்மனதில் உள்ள வெறுப்பு, கோபமாக மாறி, நெருங்கிய உறவுகளிடம் காட்டுவர்.
குளிப்பது, துாய்மையாக உடை உடுத்துவது போன்ற அன்றாட செயல்பாடுகளில், மாற்றம் இருக்காது.

டாக்டர் சுகன்யா பிரியதர்சினி,
மனநல மருத்துவர்
98656 16083.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29-ஜூலை-202012:00:01 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்த மதுவால் அழிஞ்சுபோன குடும்பங்கள் எவ்ளோ லக்ஷம் கொரோனாவையும் விடைகொடூரமானது இந்த மதுபோதை அந்த குப்பையால் விளையும் அநீதிகள் எவ்ளோபொண்ணுகள் வாழ்க்கையே போச்சு சிங்கள் ஆகவே வாழ்ந்து தன்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் அன்னையர்களேதான் தெய்வங்கள் நான் அரிஞ்சே பல ஏழைகள் தங்கள் குழந்தைகள் நன்னாயிருக்க வேண்டும் என்று ரீமேரேஜ் செய்றாதே இல்லீங்க தன சொந்த அத்திப்பிள்ளைக்கே வாழ்க்கைப்பட்டாங்க சிலர் ஆனா அந்த அத்தையும் சரி அவ புருசனும் சரி அவளையும் அவள்பெறவிகளையும் வீட்டைவிட்டு துரத்தினாக நாலுவீட்டுலே வேலை செய்து தன்மகனை மெக்கானிக்காக ஆக்கினார் அந்தம்மா மக்களை பீ கம படிக்கவச்சுப்பட்டதாரியாக்கி நல்லகம்பேனிலே அந்தப்பொண்ணு வேலை செய்றா குறைஞ்சுபோகலே குழந்தைகள் மேலுக்குவந்ததுது அத்தைக்காரி ஒண்டிக்கவரா பிள்ளைகள் அவளை அடிச்சுவெரட்டினாக
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29-ஜூலை-202009:02:05 IST Report Abuse
skv srinivasankrishnaveni நேக்கு இந்த ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ பிடிக்காத நாவல் தீம் ஒருவேளையில் மெய்யாகவே இருக்கலாம் ஆனாலும் எரிச்சலாவரும் அவரோட நாவல் காலிலே நான் ரசித்தது என்றால் கிங்லியேர் மெர்ச்சண்ட் ஒப்வென்னிஸ் போன்றவைகளேதான் ஜோலியஸ் சீசர் ரியல் ஓர் ரீல் தெரியாது
Rate this:
Cancel
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
26-ஜூலை-202008:58:36 IST Report Abuse
Watcha Mohideen எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் ஒரு அரேபியா பாலைவனத்தில் தோன்றிய காட்டு மிராண்டி மதம் மது அருந்துவது எல்லா வகையிலும் கேடே என்று உபதேசித்தது. இன்றும் மது அருந்தாதீர்கள் என்று கட்டளை இடுகிறது.சுத்தமான உணவுகளை உண்ணுங்கள் என உபதேசிக்கிறது, கற்று அறிந்தவர்களே செவி சாயுங்கள். ஆண்டவன் உங்களை நல் வழியில் இட்டு செல்வார்
Rate this:
Yuva Rajan - chennai,இந்தியா
29-ஜூலை-202017:08:53 IST Report Abuse
Yuva RajanMadhu 1700 kalil kandu pidithirukalam. adarkku mun kal irunthathu.kal irakka maram venum. palaivanathile maram yedhu. innum yethanai poiyo?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X