கண்ணே... மணியேன்னு பார்த்துக்கோங்க! கொரோனா கண்கள் வழியாக பரவ வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
00:00

''கொரோனா எச்சில் மற்றும் உமிழ்நீர் வழியாக எப்படி பரவுகிறதோ, அதே போல் கண்ணீர் வழியாகவும் பரவும்,'' என்கிறார் கண் நரம்பியல் சிறப்பு மருத்துவர் கிருபாபால்.

கொரோனா வைரஸ், கண் வழியாக பரவுமா ?
வைரஸ் தொற்றால் கண் நோய்கள் வருகின்றன. கொரோனாவும் வைரஸ் தொற்று நோய் என்பதால், கண் வழியாக பரவும் வாய்ப்பு உள்ளது. எச்சில் மற்றும் உமிழ்நீர் வழியாக எப்படி பரவுகிறதோ அதே போல் கண்ணீர் வழியாகவும் பரவும். அடிக்கடி கண்களை துடைப்பது, கசக்குவது கூடாது. கண்களில் ஏதாவது உறுத்தல், எரிச்சல் இருந்தால் கண்களை கழுவி, நல்ல துணியால் துடைத்து கொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது கண்ணாடி அணிவது நல்லது.

ஊரடங்கு சூழ்நிலையில், கண்ணில் பிரச்னை வந்தால் என்ன செய்வது?
கண் என்பது மிக முக்கியமான உறுப்பு. அதில் பிரச்னை என்றால் மருத்துவம் பார்க்கதான் வேண்டும். கண்ணில் வீக்கம், வலி, கண் சிவத்தல் உள்ளிட்ட பிரச்னை இருந்தால், மருத்துவர் ஆலோசனை தேவை. அதே போல் கண்ணாடி உடைந்து விட்டால் மாற்றியாக வேண்டும். இது போன்ற நோயாளிகளுக்கு, சுய பாதுகாப்புடன் மருத்துவம் பார்க்கிறோம். அறுவை சிகிச்சையை மட்டும்தான் தள்ளிப்போடுகிறோம்.

சர்க்கரை நோயால், கண் பார்வை எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
சர்க்கரை அளவு அதிகரித்தால், கண்ணில் நீர் கட்டிகள் உருவாகும். கண் லென்சில் நீர் ஏறி, கண்புரை ஏற்படும். கண்களில் உள்ள சிறிய ரத்த குழாய்களில், நீர் மற்றும் ரத்த கசிவு ஏற்படும். இதனால் நீர் அழுத்தம் அதிகமாகி, கண்பார்வை பாதிக்கும். கட்டுப்பாட்டில் இருந்தால், சர்க்கரை ஒரு பெரிய நோய் இல்லை. கட்டுப்பாடு இல்லை என்றால், எல்லா நோய்களுக்கும் இதுவே கதவை திறந்து விட்டுவிடும். குறிப்பாக கண்களை அதிகம் பாதிக்கும்.

குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு அதிகம் வர காரணம் என்ன?
குழந்தைகள் சாப்பிடும் உணவுதான் முதல் காரணம். சாக்லெட், பிஸ்கெட், கேக் போன்றவைதான் குழந்தைகளின் முக்கிய உணவாக உள்ளன. ஊட்டச்சத்து இல்லை என்றால் பார்வை பாதிக்கும். பிறகு, டி.வி., மொபைல் போன் பார்ப்பதும் காரணம். அதில் இருந்து வெளிப்படும் ஒளி, விழித்திரையை அதிகம் பாதிக்கிறது. ஆரம்பத்தில் கண்டுபிடித்து விட்டால், சரி செய்து விடலாம்.

கம்ப்யூட்டர், மொபைல் போன் பார்ப்பதால் பார்வை கோளாறு வருமா?
இதன் திரையை கூர்ந்து, நீண்ட நேரம் பார்ப்பதால், விழியில் ஈரம் உலர்ந்து விடும். விழித்திரையின் பருமன் குறையும். இதனால் கண்பார்வை மங்கி விடும். முன்பெல்லாம் கண்ணில் இந்த பிரச்னை உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருவர் இருவர்தான் வருவார்கள். இப்போது மாதம் மூன்று நான்கு பேர் வருகின்றனர். இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள்தான் அதிகம். மொபைல் போன் வெளிச்சம், கண் நரம்புகள் மற்றும் மூளையை அதிகம் பாதிக்கும். வயதானால் சிரமம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
28-ஜூலை-202014:27:57 IST Report Abuse
Vena Suna நல்ல நாள்லயே மருத்துவர்கள் நன்றாக பயப்படுத்துவார்கள். இப்போ கேட்பானேன்? பூந்து விளையாடுவாங்க...இன்னும் என்னென்ன சொல்லி பயமுறுத்தணுமோ எல்லாத்தையும் சொல்லிட்டாங்கனா நல்லா இருக்கும்..
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
27-ஜூலை-202019:40:44 IST Report Abuse
Prakash Corona spreads if bones are week. Orthopaedics. Spreads through eyes, optholmalogist, spreads through nose, throat, ears ,ENT doctors, spreads through skin sweat, skin doctor, spreads if your heart is weak cordiologist, corona damages your kidneys, urologist, . Everybody wants a share .
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
27-ஜூலை-202015:39:09 IST Report Abuse
Raj விட மாட்டாங்க போல மக்களை. தினம் ஒரு புது அறிகுறிகளை கொண்டு வருகிறீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X